புதன், 28 ஆகஸ்ட், 2019

மாரிதாஸ் பாஜகவின் கூலிக்கு பேசுகிறார் ...

Aravind Akshan : மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் 2015 ம் ஆண்டு லாட்டரி அதிபர் மார்ட்டினின் பினாமியான
நாகராஜ் என்பவரை அமலாக்கத்துறை கைது செய்கிறது..
சிலிகுரியில் இருக்கும் ED அலுவலகத்தில் இந்த தகவலை உறுதிப்படுத்தியப் பிறகு, மார்ட்டினிடமும் தொலைபேசியில் பேசி நாகராஜ் கைதான தகவலை ஊர்ஜிதம் செய்கிறேன்..
நாகராஜ் கைதான போது சொல்லப்பட்ட காரணமென்ன தெரியுமா ?
லிங்கைப்படிக்கவும்
https://english.kolkata24x7.com/hawala-racket-busted-in-ko…/
மே.வங்கத்தில் இருந்து,ஹவாலா முறையில் 1000 கோடி ரூபாய் அளவிற்கு துபாய் சென்று,பாகிஸ்தானின் தீவிரவாத செயல்களுக்கு செல்கிறதென சொல்லப்பட்டது..
தாவூத் இப்ராஹிம் பெயரெல்லாம் இந்த கைதின் போது அடிபட்டது
https://m.businesstoday.in/…/rs-1000-crore-mo…/1/224117.html
இந்த விஷயம் தொடர்பாக அன்று இரவே சத்தியம் டிவி நிகழ்ச்சியும் நடத்தியது
வெளியான பத்திரிகை செய்திகள்/தகவல்கள் அனைத்தையும் மறுத்து அடுத்த நாள் இந்தியா முழுக்க தன்னிலை விளக்கம் கொடுத்திருந்தார் லாட்டரி மார்டின்...
அதன் பின்னர் நடந்தது ஒரு ட்விஸ்ட்..
மார்டின் மகன் சார்லஸ் பிஜேபியின் தேசிய பொதுச்செயலாளர் ராம் மாதவ் முன்னிலையில் பிஜேபியில் இணைந்துகொண்டார்
சரி விஷயத்துக்கு வருகிறேன்

அதிமுக அரசைப்பற்றி ஆயிரத்தெட்டு முறைகேடு,ஊழல் புகார்கள் வெளிவருகிறது.
அதைப்பற்றியெல்லாம் எழுத்தாளர் மாரிதாஸ் பேசவேமாட்டார்..
திருமுருகன் காந்தியோடு இருக்கும் மார்டின் மகன் டைசன் பத்தி பேசுபவர், மற்றொரு மகன் சார்லஸ் பத்தி பேச மாட்டார்..
ஏன்னா ? அவர் பிஜேபியில் இருக்கிறார்..
அவரின் இலக்கு திமுக மாத்திரமே வேற ஒன்றுமில்லை
இந்த அரசியல் இருக்கே அரசியல்

கருத்துகள் இல்லை: