செவ்வாய், 27 ஆகஸ்ட், 2019

தமிழகத்தில் பத்து லட்சம் ஆண்டுகளுக்கு முந்தய கற்கோடரி .150 ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்க பட்டது


Sundar P : 15 லட்சம் ஆண்டுகள் பழமையான கற்கோடாரிகள் தமிழகத்தில்
சுமார் ஒரு 150 ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அது என்ன காரணத்தினாலோ வெளியில் தெரியாமல் இருட்டடிப்பு செய்யப்பட்டது.
“தமிழ் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட தொல் – பழங்கற்கால கற்கோடரிகள் 15,00,000 – (1.51 மில்லியன்) ஆண்டுகள் பழமையானவை ! “
நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர் திரு ராபர்ட் ப்ரூஸ் ஃபூட் என்னும் புவித் தரைத்தோற்ற வியலாளர் பல்லாவரம் அருகே தரையில் கிடந்த ஒரு கல்லாலான கருவியைக் கண்டெடுத்தார்.
இது பின்னர் வரலாற்றைப் புரட்டிப் போடும் ஆய்வுகளை தொடங்கி வைத்தது. இந்தியாவின் பழங்கால வரலாறுகள் பலவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டிய பெருமை இவரையே சாரும்.
சென்னை பல்லாபுரத்தைத் தொடர்ந்து (பல்லாவரம்) பூண்டிக்கருகில் அத்திரம்பாக்கம் குடத்தலை (கொற்றலை/கொசத்தலை) ஆற்றுப் படுகைகளிலும், குடியம் மலைப்பகுதிகளிலும் கிடைத்த பழங்கற்காலக் கற்கோடரிகள், 2,00,000 – ஆண்டுகள் பழமையானவை என (1893-1912 கி.பி.) சர் ராபர்ட் புருசு பூஃட் (இந்திய பழங்கற்கால ஆய்வின் தந்தை) அறிவித்தார்.
சென்னையில் இருந்து சுமார் 60 கி.மி தொலைவில் உள்ள திருவள்ளூரில் இருக்கும் இந்த அத்திரம்பாக்கம் என்னும் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட பழங்கற்கால கருவிகளை . ஆய்வு செய்ததில் இவை சுமார் 10 இலட்சம் முதல் 15 இலட்சம் ஆண்டுகளுக்கு குறையாத தொன்மை வாய்ந்தவை என்பது தெரிய வந்தது.

இவ்வளவு தொன்மை வாய்ந்த கண்டுபிடிப்புகள் இந்தியாவில் மட்டுமல்ல. உலகிலேயே வேறெங்கும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆய்வை நடத்திய ஆய்வாளர்களில் ஒருவரான சாந்தி பப்பு என்னும் ஆய்வாளர் “Early Pleistocene presence of Acheulian hominins in South India” என்ற ஆய்வு அறிக்கையில் இதை வெளியிட்டார்.
இந்த செய்திகளை அறிந்ததும் சம்பந்தப்பட்டவர்கள் இந்த ஆய்வுகள் குறித்த மேலும் பல தகவல்களைப் பெற அங்கு விரைந்தார்கள் ஆனால் இதுபற்றி யாரும் அறிந்திருக்கவில்லை.
இரு சக்கர வாகனம் கூட பயணிக்க முடியாத அந்த காட்டிலும் நடந்து சென்று விடயம் தெரிந்த ஓரிருவரிடம் வழி கேட்டுச் சென்றும் அந்த இடத்தை அடைய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள்.
அதன் பிறகு இந்த ஆய்வுகளை நடத்தும் நிறுவனத்திடம் விசாரித்த போது. ஆய்வுகள் நிறுத்தப்பட்டு சில ஆண்டுகள் ஆனது என்றார். ‘ஏன் நிறுத்தப்பட்டது’ என்று கேட்ட போது ‘மத்திய அரசின் அனுமதி கிடைக்கவில்லை’ என்று அந்த நிறுவனம் கூறியது !!!.
எனக்கு மொழிவெறி கிடையாது. இந்தியன் என்கிற எல்லையை கடந்து தொல் உலக மக்கள் எல்லாம் ஒன்று என்று நினைப்பவன்.
ஆனால்? உலகிலேயே தொன்மையான நாகரீகம் தமிழ் நாகரீகம் என்பதே. பல ஆய்வுகள், அகழ்வாராய்ச்சி முடிவுகளின் மூலம் நமக்கு கிடைத்த உண்மை. அந்த உண்மைகளை குழி தோண்டி புதைக்கும் வேலைகளை மத்தியில் ஆளும் ஹிந்தியர்கள் தொடர்ந்து செய்து கொண்டு இருக்கிறார்கள்.
இந்த பதிவு ஏற்க்கனவே ஹிஸ்டரி பேஜ்ஜில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. நானே அதை 2,3 முறை ஷேர் பண்ணியிருக்கிறேன். ஆனால் இதுபோன்ற விசயங்கள் திரும்ப, திரும்ப பதிவு செய்யபடுவதில் தவறில்லை.

கருத்துகள் இல்லை: