தினத்தந்தி : நாட்டில் உள்ள 18 பொதுத்துறை வங்கிகளில் 14 வங்கிகள்
லாபத்தில் இயங்குகின்றன என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
புதுடெல்லி
டெல்லியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* நாட்டில் உள்ள 18 பொதுத்துறை வங்கிகளில் 14 வங்கிகள் லாபத்தில் இயங்குகின்றன. நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை வங்கிகளின் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படமாட்டார்கள் என கூறினார்
* தொழில்துறையை ஊக்குவிக்க ஏற்கனவே சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன.தொழில்துறை ஊக்குவிப்பு நடவடிக்கைகள் தொடரும்.
* வீட்டுக் கடனுக்கு ரூ3300 கோடி கடன் உதவி. வங்கிக்
கடனை கட்டி முடித்த 15 நாட்களுக்குள் கடன் பத்திரங்கள் திருப்பித்
தரப்படும். கடன் வழங்கும் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து வங்கிகள்
அறிக்கை தந்துள்ளன. வங்கிகளில் கடன்களை விரைந்து வழங்க நடவடிக்கைகள்
எடுக்கப்பட்டு வருகின்றன. கடன் மேலாண்மை எளிமைப்படுத்தப்படும்.
*
மிகப்பெரிய அளவில் வழங்கப்பட்டும் கடன்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு
வருகின்றன. ரூ.250 கோடிக்கு மேலான கடன்களுக்கு கண்காணிப்பு குழு
அமைக்கப்படும்.
* வங்கித்துறை சீர்த்திருத்தங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
*
வங்கிகளின் வாராக்கடன்கள் குறைந்து உள்ளன. வங்கிகளின் வாராக்கடன் ரூ.7.90
லட்சம் கோடியாக குறைந்து உள்ளது. அரசின் முயற்சியால் ரூ.1.21 லட்சம்
வாராக் கடன்கள் வசூலிக்கப்பட்டு உள்ளன.
* வங்கி சாரா நிதி நிறுவனங்களின் பணப் புழக்கத்தை அதிகரிக்க நடவடிக்கை. 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை உருவாக்க செயல்திட்டம்.
* நாட்டில் உள்ள 18 பொதுத்துறை வங்கிகளில் 14 வங்கிகள் லாபத்தில் இயங்குகின்றன. நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை வங்கிகளின் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படமாட்டார்கள் என கூறினார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக