சனி, 31 ஆகஸ்ட், 2019

வங்கிகள் இணைப்பு அல்ல, வங்கிகள் அழிப்பு!

மதவாத எதிர்ப்பு பிரச்சாரம் : தற்போதுள்ள பொதுத்துறை வங்கிகளில் 27
வங்கிகளை ஒன்றிணைத்து அவற்றை 12 ஆகக் குறைக்கும் திட்டத்தை மோடி அரசு அறிவித்துள்ளது. பொருளாதாரம் மந்த நிலையில் இருக்கும் இந்த நேரத்தில் செய்யப்பட்டுள்ள இந்த அறிவிப்பு பொருளாதார நிலையை மேலும் சிக்கலாக்கும். தவறான நேரத்தில் எடுக்கப்பட்ட தவறான முடிவு இது. வங்கிகளை இணைப்பதென்பது 1990களில் நரசிம்மன் கமிட்டி அளித்த
1990களில் தாராளமயக் கொள்கை தீவிரப்படுத்தப்பட்டது. அதற்கேற்ப வங்கிகள் தொடர்பான கொள்கைகள் வடிவமைக்கப்பட்டன. சிறிய அளவிலான வங்கிகளை ஒன்றிணைத்து உலக அளவில் போட்டி போடக்கூடிய பெரிய வங்கிகளை உருவாக்கும் திட்டம் அப்போது முன்வைக்கப்பட்டது.

பரிந்துரையாகும்.
ஆனால் அதன் பிறகு சர்வதேச அளவில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை பெரிய வங்கிகள் இருப்பதைப் பற்றிய மறுபரிசீலனையை ஏற்படுத்தியது. அப்போது ஏற்பட்ட சர்வதேசப் பொருளாதார மந்த நிலைக்குப் பெரிய வங்கிகள் நொடித்ததே முதன்மையான காரணம். அப்போது சிறிய வங்கிகள்தான் தாக்குப் பிடித்தன. அந்த அனுபவத்தில் இருந்து சிறிய வங்கிகள் இருப்பதே சிறந்தது என்ற கருத்து பலராலும் முன்வைக்கப்பட்டது.
தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் வங்கிகளின் இணைப்பைப் புரிந்துகொள்ள ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா இணைக்கப்பட்ட அனுபவத்தை நாம் ஆராயவேண்டும். 2017 ஆம் ஆண்டு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவுடன் அதனுடைய துணை வங்கிகள் இணைக்கப்பட்டன. அதன் பின்னர் அந்த வங்கியில் வாராக்கடன் அளவு அதிகரித்தது. வங்கி இணைக்கப்பட்டு அடுத்த இரண்டு ஆண்டுகளில் 1.02 லட்சம் கோடி ரூபாய்க்கான வாராக் கடன்களை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தள்ளுபடி செய்திருக்கிறது. இதனால் பயனடைந்தவை கார்ப்பரேட் நிறுவனங்கள்தாம் என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
வங்கிகளின் இணைப்பால் ஆள் குறைப்பு இருக்காது என நிதி அமைச்சர் கூறியிருக்கிறார். அது வெற்றுப்பேச்சு. ஏனெனில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா இணைப்புக்குப் பின் ஒரே ஆண்டில் 1805 கிளைகள் மூடப்பட்டன நிர்வாக அலுவலகங்களில் ஆட்குறைப்பு மேற்கொள்ளப்பட்டது. அதன் அடுத்த ஆண்டிலேயே 15762 ஊழியர்கள் குறைந்தனர்.
இப்போதைய வங்கிகளின் ஒருங்கிணைப்புக்குப் பிறகும் அதே விதமான நிலைதான் ஏற்படும்.
ஒருபுறம் மோடி அரசு வங்கிச் சேவையை அனைத்து மக்களுக்கும் விரிவுபடுத்தப் போவதாக சொல்லிக் கொண்டிருக்கின்றது. ஆனால் இந்த வங்கிகளின் இணைப்பு கிராமப்புற வங்கிக் கிளைகளின் எண்ணிக்கையைக் குறைக்கும். அதனால் கிராமப்புற மக்கள் வங்கிச் சேவையைப் பெறுவதிலிருந்து விலக்கப்படுவார்கள். லாபத்தையே குறிக்கோளாகக் கொண்ட வங்கிச்சேவை கார்ப்பரேட்டுகளுக்கு மட்டுமே உதவக் கூடியதாக இருக்கும்.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் 1969 இல் அன்றைய பிரதமர் இந்திராகாந்தி வங்கிகளைத் தேசிய மயமாக்கி வங்கிச் சேவையை சாதாரண மக்களுக்கு விரிவுபடுத்தினார். அதன்பின்னர் விவசாயத்துறையில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘ பசுமைப்புரட்சிக்கு’ பொதுத்துறை வங்கிகளே பெருமளவில் உதவின. ஆனால் இப்போதோ பொதுத்துறை வங்கிகளை ஒன்றிணைத்து கார்ப்பரேட்டுகளுக்குக் கடன் வழங்குவதற்கான திட்டத்தை மோடி அரசு வகுத்திருக்கிறது. இதனால் பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் அதிகரிக்கும், அவற்றின் நட்டத்தைக் கூட்டும். கடைசியில் பொதுத்துறை வங்கிகளை மூடுவதற்கே இது வழிவகுக்கும்.

கருத்துகள் இல்லை: