tamil.filmibeat.com - rajendra-prasath
சென்னை:
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கமல் விலகப் போவதாகவும், அடுத்த சீசனை
சிம்பு தான் தொகுத்து வழங்க இருப்பதாகவும் ஒரு தகவல் இணையத்தில் வைரலாகப்
பரவி வருகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி விட்டாலே தமிழகம்
முழுவதும் அடுத்த நூறு நாட்களுக்கு அதுதான் பேச்சாக இருக்கும். அதற்கு
அந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் கமலும் ஒரு காரணம். வாரம் முழுவதும்
நிகழ்ச்சி போரடித்தால் கூட, வார இறுதியில் கமல் சாட்டையைச் சுழற்றி
நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்கி விடுவார்.
இந்த நிகழ்ச்சியை இவரை விட
வேறு யாரும் சிறப்பாக தொகுத்து வழங்கிவிட முடியாது எனும் அளவிற்கு கமல்
கடந்த மூன்று சீசன்களாக கலக்கி வருகிறார்.
வைரலான தகவல்
இந்நிலையில்,
அடுத்த சீசனில் இருந்து கமல் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மாட்டார் என
ஒரு தகவல் இணையத்தில் வலம் வருகிறது. அதோடு, அடுத்த சீசனை சிம்பு தொகுத்து
வழங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது எந்தளவிற்கு உண்மை எனத்
தெரியவில்லை. ஆனால் இந்த தகவலால் பிக் பாஸ் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி
அடைந்துள்ளனர்.
கமல் தவிர...
கமல்
நடித்த வேறுபட்ட கதையம்சம் கொண்ட படங்களில், எப்படி வேறு நடிகர்களை கற்பனை
செய்துகூட பார்க்க முடியாதோ, பிக் பாஸ் நிகழ்ச்சியும்கூட அப்படித்தான்.
கமல் தனது சினிமா மற்றும் உலக அறிவின் முதிர்ச்சியால் போட்டியாளர்களைக்
கையாளும் விதமே தனி அழகு, கம்பீரம். கமல் அளவிற்கு சிம்புவால் செயல்பட
முடியுமா என்பது இங்கு கேள்விக்குறியே.
மூன்றாவது சீசன்
இம்முறை
பிக்பாஸ் 3வது சீசன் துவங்கும் முன்னரே, கமல் இதைத் தொகுத்து
வழங்கமாட்டார் என்ற பேச்சு பரவலாக எழுந்தது. அவருக்குப் பதிலாக நயன்தாரா
அல்லது விஜய் சேதுபதி இதைத் தொகுத்து வழங்கலாம் எனக் கூறப்பட்டது. ஆனால்,
கமலே இந்த சீசனையும் தொகுத்து வழங்கப் போவதாக அதிகாரப்பூர்வமாக
அறிவிக்கப்பட்டது.
சர்ச்சைகளில் பிக் பாஸ்
ஆனால்,
கடந்த சீசன்கள் போல் இல்லாமல் இம்முறை பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி
வருகிறது பிக் பாஸ் நிகழ்ச்சி. இது தொடர்பாக கமலுக்கும், விஜய் டிவிக்கும்
இடையே சில பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால் தான் கடந்த
வாரம் வனிதா மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் அழைத்து வரப்பட்டது பற்றி
கமல் பேசியதாகக் கூறப்படுகிறது.
விலகும் கமல் ?
இந்த
மோதலின் தொடர்ச்சியாகத் தான், கமல் இந்த சீசனோடு பிக் பாஸில் இருந்து
எவிக்ட் ஆகி விடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சீசனின் முடிவில்
அதனை கமலே அறிவிப்பார் எனவும் கூறப்படுகிறது. இப்போதே அதனை அறிவிப்பதன்
மூலம் மக்கள் மனநிலையை மாற்ற பிக் பாஸ் குழு திட்டமிட்டுள்ளதாகத்
தெரிகிறது.
அடுத்த சீசனில் சிம்பு
அதோடு
அடுத்த சீசனை தொகுத்து வழங்க சிம்புவை அவர்கள் தேர்வு செய்திருப்பதாக
தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே விஜய் டிவி ஒன்றில் சிம்பு நடுவராக
இருந்திருக்கிறார். எனவே விஜய் டிவிக்கு மிகவும் நெருக்கமானவரான அவரையே
பிக் பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளராக்க திட்டமிட்டிருக்கிறார்களாம்.
கமலின் அரசியல்
இந்த
தகவல் எந்தளவிற்கு உண்மை எனத் தெரியவில்லை. ஏனென்றால் தீவிர அரசியலில்
இறங்கியிருக்கும் கமல், பிக் பாஸ் மேடையை தன் கட்சி செயல்பாடுகளை
வெளிப்படுத்துவதற்கான இடமாகவும் பயன்படுத்தி வருகிறார். இதனை அவரே பல
இடங்களில் சுட்டிக் காட்டி இருக்கிறார்.
பிக் பாஸ் மேடையும் கமலும்..
ஒரு
திரைப்படத்தில் நடிப்பதைவிட இது போன்ற சின்னத்திரை நிகழ்ச்சிகள் மக்களை
எளிதாகச் சென்றடையும் என்பதே அவரது கருத்து. அதனாலேயே பிக் பாஸ் மேடையை
தனக்கான மேடையாக அவர் கையாளுகிறார். அப்படி இருக்கையில், ‘தங்கத் தட்டில்
வைத்து தரப்பட்ட வாய்ப்பை அவர் எப்படி தட்டி விடுவார்?' என்ற கேள்வியும்
எழுந்துள்ளது.
அடுத்து யார்?
இதன்
அடிப்படையில் பார்த்தால் இந்த தகவல் பொய்யாக இருக்கவே அதிகமான
வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால், சமூகவலைதளங்களில் இது பெரும் விவாதப்
பொருளாக மாறி இருக்கிறது. ஒருவேளை கமல் பிக் பாஸில் இருந்து விலகினால்,
அவருக்குப் பதில் சிம்பு வேண்டாம், அர்ஜூன், மாதவன் அல்லது அரவிந்த்சாமி
இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினால் நன்றாக இருக்கும் என நெட்டிசன்கள்
கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்தி பிக் பாஸ்
தமிழைப்
போலவே, நம் நாட்டில் பல மொழிகளில் இந்த நிகழ்ச்சி பல ஆண்டுகளாகத்
தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இந்தியில் நடிகர் சல்மான்கான் இந்த
நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார். தமிழுக்கு கமல் மாதிரியே
இந்தியில் சல்மானுக்கு என பெரிய ரசிகர் வட்டம் உள்ளது என்பது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக