செவ்வாய், 30 அக்டோபர், 2018

இஸ்ரோ ..மாதவன் நாயர் அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் ... ஊழல்வாதிகளின் இறுதி புகலிடம்

Swathi K :
இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் இரண்டு நாளைக்கு
முன் அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் சேர்ந்தார்.
ஆன்ட்ரிக்ஸ் - தேவாஸ் ஒப்பந்த விவகாரத்தில் தேவாஸ் நிறுவனத்துக்கு சாதகமாக செயல்பட்டதாக (578 கோடிகள் ஊழல்) மாதவன் நாயர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து அரசு நிறுவனங்களில் பணியாற்ற கடந்த காங்கிரஸ் ஆட்சியில் அவருக்கு தடை விதிக்கப்பட்டு வழக்கு பதியப்பட்டது.
ஆகஸ்ட், 2016 - அவர் மேல் போடப்பட்ட CBI வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
டிசம்பர் 2017 - அவர் கைது செய்யப்பட்டு பின்னர் பெயிலில் வெளியே வந்தார்.
28-அக்டோபர்-2018 - மோடி மேற்கொள்ளும் பணிகள் என்னை மிகவும் கவர்ந்தன என்று சொல்லி அமிட்ஷா முன்னிலையில் பிஜேபியில் இணைந்தார்..
தண்டனையில் இருந்து தப்பிக்க பிஜேபியில் இதுவரை இணைந்த முக்கிய புள்ளிகள் மட்டும் நூற்றுக்கும் மேல் இருக்கும்... CBIயின் முக்கிய வழக்கில் உள்ள 18 அரசியல் தலைவர்கள் (திரிணாமுல் கட்சி முகுல் ராய் ஒரு உதாரணம்.. இது பற்றி நான் சென்ற ஆண்டு போட்ட பதிவு கமெண்ட்டில் உள்ளது. அதையும் படிக்கவும்). இந்த நான்கு ஆண்டில் பிஜேபியில் இணைந்துள்ளனர்.

கடந்த நான்கு வருடமா நடந்த அனைத்து சட்டசபை தேர்தலிலும் பிஜேபி தான் அதிக கிரிமினல் வேட்பாளர்களை நிறுத்தினார்கள் என்பது அவர்களின் மற்றுமொரு சாதனை.. மற்ற கட்சிகள் அவர்களின் பக்கத்தில் கூட இல்லை.. தேர்தலில் நின்ற மொத்த கிரிமினல் வேட்பாளர்களில் 68% பிஜேபி வேட்பாளர்கள். இதே தான் 2014 பார்லிமெண்ட் தேர்தலிலும் நடந்தது..
இந்த கிரிமினல்ஸ் தான் தேசபக்தி, புரட்சி, புண்ணாக்குனு மக்களை முட்டாள் ஆக்கிட்டு இருக்காங்க.. தனக்கு எதிரானவரை ஆன்டி-இந்தியன் ஆக்கிக் கொண்டு இருக்கிறார்கள்.. எல்லா கிரிமினல்வாதிகளும் ஒரே குடைக்குள் சேர்வது நாட்டுக்கு நல்லதல்ல... கிரிமினல்களின் பாதுகாப்பான கூடாரம் பிஜேபி.. நாடு மோசமான நிலையை நோக்கி நகர்ந்து வருகிறது.
வெறும் நான்கரை ஆண்டு ஆட்சிக்கே இப்படின்னா!!! 60 ஆண்டு மோடி ஆட்சி செய்து இருந்தால்..!!!! நினைத்துப் பார்க்க முடியவில்லை..

கருத்துகள் இல்லை: