வியாழன், 1 நவம்பர், 2018

'சர்கார்' கூடுதல் கட்டணம் வசூலித்தால் தியேட்டர் உரிமம் நீக்கம்! : உயர் நீதிமன்றம்

``விஜய் ரசிகர்களை நினைச்சா பயமா இருக்கு!’’-`சர்கார்' குறித்து சாந்தனு பாக்யராஜ்
'சர்கார்' பட டிக்கெட்டுகள் ரூ.500, 1000 என இணையதளத்தில் விற்கப்படுவதாக
வந்த புகாரை அடுத்து அதிக விலைக்கு டிக்கெட்டுகளை விற்றால் தியேட்டர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என ஆட்சியருக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
 விகடன் :`` `சர்கார்' படத்தோட விவகாரத்தில் நிறைய பேர் என்னையும், அப்பாவையும் ரொம்பத் திட்டுனாங்க. உண்மை என்னனு தெரிஞ்சிக்காமப் பேசிட்டாங்க. ஆனா, இன்னைக்கு உண்மை என்னனு தெரிஞ்சிக்கிட்டு அப்பாவைப் பாராட்டும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. முக்கியமா அப்பா கடைசி வரைக்கும் நடுநிலைமையா நின்னார்கிற விஷயம் ரொம்பப் பெருமையா இருக்கு...'' விஜய்யின் `சர்கார்’ பட கதை சம்பந்தமான பிரச்னையைத் தனது அப்பா சரியாக முடித்திருக்கிறார் என்கிற மகிழ்ச்சியுடன் பேச ஆரம்பித்தார் சாந்தனு பாக்யராஜ்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வருகிற தீபாவளியன்று வெளியாகப் போகும் திரைப்படம் `சர்கார்'. விஜய் ஹீரோவாக நடித்திருக்கும் `இந்தப் படத்தின் மூலக்கதை என்னுடையது' என்று இயக்குநர் வருண் ராஜேந்திரன் புகார் ஒன்றை அளித்துள்ளார். இது தொடர்பான வழக்கு முதலில் திரைப்பட எழுத்தாளார் சங்கத் தலைவர் பாக்யராஜ் கவனத்துக்குச் சென்று தற்போது உயர்நீதி மன்றதுக்குச் சென்றது. இந்நிலையில் வருண் ராஜேந்திரனுடம் சமரசம் ஏற்பட்டதாகப் படத் தயாரிப்பு நிறுவனம் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக சாந்தனுவிடம் பேசினேன்.
விஜய்
``நான் விஜய் அண்ணாவோட தீவிர ரசிகன். இது எல்லோருக்கும் தெரியும். அதனால, `விஜய் அண்ணா படத்துக்கு இப்படியொரு பிரச்னை வந்துருச்சே’னு ரொம்பக் கவலைப்பட்டேன். அப்பாகிட்ட போய், `இது... விஜய் அண்ணா படம்.. பார்த்து பண்ணுங்க’னு சொல்ல முடியாது; அது பெரிய தப்பு. எனக்குள்ளே நெருடல் இருந்துக்கிட்டே இருந்தது. இது அப்பாவுக்கும் தெரியும். எனக்குள்ளே இருந்த மன அழுத்தத்தை அப்பா உணர்ந்தார். இருந்தும், நியாயத்துக்குக் குரல் கொடுக்கணும்ங்கிறதுல அப்பா உறுதியா இருந்தார். அதே மாதிரி, எந்த இடத்துலயும் கதை திருட்டு அப்படிங்கிற வார்த்தையை அப்பா சொல்லவே இல்லை. `ஒரே ஸ்பார்க், கதை கரு ரெண்டு பேருக்குத் தோன்றிருக்கு. அதில் ஒருத்தருக்குப் பத்து வருஷத்துக்கு முன்னாடியே தோன்றிருக்கு'னு மட்டும்தான் அப்பா சொன்னாரே தவிர வேற எந்தத் தவறான வார்த்தைகளையும் அவர் யூஸ் பண்ணவே இல்லை.
இந்த விவகாரம் சம்பந்தமா அப்பா கோர்ட்க்கு ஒன்பது பக்கக் கடிதம் அனுப்பினார். அதுல கடைசிப் பக்கம் மட்டும் லீக் ஆயிருச்சு. யார் இதைப் பண்ணுனானு தெரியல. இந்தக் கடிதம் முழுமையாக் கிடைச்சிருந்தா எந்தக் குழப்பமும் ஏற்பட்டு இருக்காது. அப்பாவோட முழுமையான கருத்தும் தெரிஞ்சிருக்கும். வருண் ராஜேந்திரன்கிட்ட முதல் முறையாப் பேசும்போது, `சர்கார்' படத்தோட திரைக்கதை முழுக்க முழுக்க முருகதாஸோட உழைப்பு. அதுல எந்த மாற்றுக் கருத்தும் இல்லை'னு அப்பா தெளிவாச் சொல்லிட்டார்.  `உனக்கு எது நியாயமோ அதை மட்டும்தான் பேசி வாங்கித் தருவேன்'கிற விஷயத்தையும் வருண்கிட்ட அப்பா சொன்னார். கதையும், திரைக்கதையும் வேற அப்படிங்கிற விஷயத்தை எல்லோரும் புரிஞ்சிக்கணும். `சர்கார்' படத்தோட கதையை அப்பா சொல்லிட்டார் அப்படினு நிறைய பேர் அப்பா மேலே கோபப்பட்டாங்க. அப்பா, ஒரு தலைவரா இருந்து இந்தப் பிரச்னையைப் பற்றி வெளியே பேச வேண்டிய இடத்துல இருந்தார். முக்கியமா அப்பா கதை சொன்னப்போவும் `செங்கோல்' கதையோட க்ளைமாக்ஸ் பற்றிச் சொல்லியிருப்பாரே தவிர `சர்கார்' படத்தின் க்ளைமாக்ஸை எந்த இடத்துலயும் சொல்லல. இதை எல்லோரும் புரிஞ்சிக்கணும். முக்கியமா இந்தப் பிரச்னையில் நிறைய பேர் என்னை ட்விட்டரில் திட்டுனாங்க. கேவலமாப் பேசுனாங்க. `எனக்கும் அப்பாவுக்கும் இடையே பெரிய பிரச்னை. விஜய் சார் பையன் சஞ்சய் எனக்கு போன் பண்ணி பேசுனார்' என்றெல்லாம் வதந்திகள் பரப்புனாங்க. ஆனா, இதெல்லாம் பொய்.

ஏன்னா, இந்தப் பிரச்னை ஆரம்பித்த நாளிலிருந்து அப்பா கூடவே நான் இருந்தேன். முருகதாஸ் சார் அப்பாகிட்ட பேசுனது, வக்கீல்கள் பேசுனது எல்லாமே தெரியும். அப்பாகூடவே நான் இருந்த மாதிரி, முருகதாஸ் கூடவே தனஞ்செழியன் அங்கிள் இருந்தார். அப்பாவும், முருகதாஸ் சாரும் ஒருத்தரை ஒருத்தர் கேள்வி கேட்டுக்கிட்டதே பலரும் விவாதம் பண்ணிக்கிட்டாங்கனு தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க. ரெண்டு பேருக்கும் இடையே சுமுகமான உறவு கண்டிப்பா இருக்கு.

கருத்துகள் இல்லை: