நக்கீரன் :சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, சூரக்குடி,
கோட்டையூர், பள்ளத்தூர் ஆகிய இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அதேபோல்
மதுரை மாவட்டத்தில் மதுரை அண்ணா நகர், மாட்டுத்தாவணி, கே.கே நகர்,
ஆரப்பாளையம், பழங்காநத்தம், அரசடி ஆகிய பகுதிகளில் மழை பெய்துவருகிறது.
கன்னியாகுமரியில் நாகர்கோவில், தக்கலை, மார்த்தாண் டம், குலைச்சல் ஆகிய இடங்களிலும் மழை பெய்து வருகிறது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4130 கன அடியிலிருந்து 5548 கனஅடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக 500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதேபோல் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 98.090 அடி. நீர் இருப்பு 62.383 டி.எம்.சியாக உள்ளது.
கனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை ஆரம்பித்துள்ள நிலையில் தமிழகம் முழுவதும் பல இடங்களில் மழைபெய்து வருகிறது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, சூரக்குடி, கோட்டையூர், பள்ளத்தூர் ஆகிய இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அதேபோல் மதுரை மாவட்டத்தில் மதுரை அண்ணா நகர், மாட்டுத்தாவணி, கே.கே நகர், ஆரப்பாளையம், பழங்காநத்தம், அரசடி ஆகிய பகுதிகளில் மழை பெய்துவருகிறது. கன்னியாகுமரியில் நாகர்கோவில், தக்கலை, மார்த்தாண்டம், குலைச்சல் ஆகிய இடங்களிலும் மழை பெய்து வருகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக