வியாழன், 1 நவம்பர், 2018

கோத்தபாய ராஜபக்ச ரணிலிடம் நேரில்: .. தங்களிடம் பெரும்பான்மை இல்லை என்று தெரிவித்தார்

Ajeevan Veer : கோட்டா அலரி மாளிகையில் ரணிலை சந்தித்தார்! தம்மிடம் பெரும்பான்மை இல்லை என ரணிலிடம் தெரிவித்தார்! மகிந்த ராசபக்சவின் சிறப்பு முகவராக சிறிது நேரத்துக்கு முன் அலரி மாளிகைக்கு சென்ற கோட்டாபய ராசபக்ச தங்களுக்கு போதுமான பெரும்பான்மை இல்லை எனவும் நாட்டில் ஏற்பட்டுள்ள நிலையற்ற தன்மையை சரி செய்ய பொருத்தமான தீர்வு ஒன்றை எடுக்குமாறு கேட்டக் கொண்டுள்ளார். அவ்வேளையில் மகிந்த ராசபக்சவுக்கு பெரம்பான்மையை பெற்றுத் தருவதாக மைத்ரி உறுதியளித்ததாகவும் அதை அவரால் நிறைவேற்ற முடியவில்லை எனவும் கோட்டாபய தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தைக் கூட்டி அங்கு ஒரு முடிவுக்கு வரலாம் என ரணில் பதிலளித்துள்ளார்.

BBC :'இலங்கை நாடாளுமன்றம் நவம்பர் 5ஆம் தேதி கூடுகிறது' இலங்கை நாடாளுமன்றத்தை எதிர்வரும் நவம்பர் 05ஆம் தேதி கூட்டுவதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கும் இடையில், இன்று வியாழக்கிழமை காலை சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போதே மேற்படி தகவலை அவர் வெளியிட்டார். நாடாளுமன்றத்தை நவம்பர் 11ஆம் தேதி வரை, ஜனாதிபதி ஒத்திவைத்துள்ள நிலையிலேயே, தற்போது 05ஆம் தேதி கூட்டுவதற்குத் தீர்மானித்திருப்பதாக, மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.
எனினும் நாடாளுமன்றத்தைக் கூட்டுவது தொடர்பில் ஜனாதிபதி இன்னும் தேதி எதையும் தீர்மானிக்கவில்லை என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நவம்பர் 11ஆம் தேதிவரை நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தல், அக்டோபர் 27ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்று புதன்கிழமை சபாநாயகர் கரு ஜயசூரிய சந்தித்துப் பேசிய போது, நாட்டின் தற்போதைய நிலையினைக் கருத்திற் கொண்டு நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.
அதன்போது, நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கான நடவடிக்கைகளை தான் மேற்கொள்வேன் எனவும், அது குறித்து அறிவிப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
ஏற்கனவே நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு, சில வெளிநாடுகளும் இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.re>இதனிடையே பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க பெரும்பான்மையை நிரூபணம் செய்வதற்கான வாக்கெடுப்பில் தாம் வெற்றி பெறுவேன் என்று நம்புவதாக பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
"நான்தான் இன்னும் பிரதமராக நீடிக்கிறேன். பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு எனக்குதான் உள்ளது," என்று பிரதமரின் அலுவல்பூர்வ இல்லமான அலரி மாளிகையில் இருந்து வெளியேற மறுக்கும் அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: