nakkheeran.in - santhoshkumar :
ஏமனில்
மனிதாபிமானம் அழிந்துவிட்டது என்பதை அடையாளப்படுத்த அமல் ஹுசைன் என்கிற 7
வயது சிறுமியின் புகைப்படம் கடந்த வாரம் நியுயார்க் டைம்ஸ் பத்திரிகையில்
வெளியானது. தற்போது அந்த சிறுமி மரணம் அடைந்துள்ளார். சத்துணவு
குறைப்பாட்டினால்தான் அவர் மரணமடைந்ததாக அச்சிறுமியின் குடும்பத்தினர்
தெரிவிக்கின்றனர்.
நியுயார்க் டைம்ஸில் வெளியான அந்த
புகைப்படத்தை புளிட்சார் விருதை வென்ற புகைப்பட பத்திரிகையாளர் டைலர்
ஹிக்ஸால் எடுக்கப்பட்டது.
அந்த புகைப்படத்தில், நெஞ்சு கூடு வெளியே தெரிந்து, தோல் மெளிதாக உள்ள நிலையில் ஏழு வயது சிறுமி படுக்கையில் படுத்திருப்பது போன்று இருக்கும். கடந்த அக்டோபர் 18ஆம் தேதி இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு மிகுந்த சோகத்தை அளித்தது. மேலும் இந்த புகைப்படம் ஏமனில் நடந்த உள்நாட்டு போரினால் பல குழந்தைகள் சத்துணவு குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டிருப்பதை வெளியே தெரிய வைத்தது.

இச்சிறுமியின் மரணம் குறித்து அவரது அம்மா மரியம் அலி கூறுகையில், என்னுடைய இதயம் சுக்கு சுக்காக நொறுங்கிவிட்டது.
அமல் எப்போதும் புன்னகைத்துக் கொண்டே இருப்பாள். தற்போது என்னுடைய மற்ற குழந்தைகளை நினைத்து எனக்கு பயமாக இருக்கிறது.
கடந்த 2015 ஆம் ஆண்டில் அமெரிக்க சவுதி
கூட்டணி மற்றும் இரானிய ஹௌதிஸ் இயக்கத்தாலும் 10,000 உயிர்கள் பிரிந்துள்ளன
மற்றும் ஆயிரக்கணக்கானோர் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழல்
ஏற்பட்டுள்ளது.
ஐநாவை சேர்ந்த உலக உணவு குழு, இந்த
கூட்டணிகளின் சண்டையின்போது வெடிகுண்டுகளால் தாக்குதல் நடத்துவதை போன்று,
நிவாரண பொருட்களையும் பாதிக்கப்படும் மக்களுக்கு கொடுக்க உள்ள உணவுகளையும்
தடுத்து நிறுத்தி தாக்குதல் நடத்துகின்றனர். இதுபோன்ற தாக்குதலால் ஒரு
கோடியே இருபது லட்ச மக்களுக்கு உணவின்றி பட்டினியால் சாகின்றனர். இது போர்
நடக்கும் அனைத்து நாடுகளில் இதுபோன்று நடக்கின்றது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக