வியாழன், 1 நவம்பர், 2018

தமிழ்நாடு ஆந்திரா கர்நாடகா தெலுங்கான .. காங்கிரஸ் கூட்டணி ஓரளவு உறுதியாகி விட்டது

Swathi K : ஆந்திரா, தெலுங்கானாவில் சந்திரபாபு நாய்டுவின் தெலுங்கு தேசம்
கட்சியுடன் கூட்டணி.. கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதாவுடன் கூட்டணி.. தமிழ்நாட்டில் தி.மு.க'வுடன் கூட்டணி.. இந்த மூன்றும் தெற்கில் அவசியம்.. கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.. சரியான வழியில் செல்கிறது காங்கிரஸ்..
சென்ற தேர்தலில் பிஜேபி தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் தெலுங்கானாவில் உள்ள 130 தொகுதிகளில் 37 இடங்களில் (பிஜேபி+கூட்டணி) தான் வெற்றி பெற்றது.. 2014 தான் மோடியின் புகழ் உச்சத்தில்.. காங்கிரஸ் புகழ் மிகமோசமான வீழ்ச்சியில் இருந்த நேரம்.. அப்போது கூட 37/130 தான் பிஜேபியால் பல கட்சிகள் கூட்டணியுடன் வாங்க முடிந்தது.. தென் மாநிலங்களில் ராமர் கோவில், பாகிஸ்தான் சர்ஜிக்கல் ஸ்ட்ரிக் எல்லாம் எடுபடப்போவதில்லை.. இந்த முறை 20/130 வாங்குவதே தென் மாநிலங்களில் கடினம். விரிவான பதிவு அடுத்த வாரத்தில்..
நமக்கு பிடித்தோ.. பிடிக்காமலோ நம்மை மத்தியில் காங்கிரஸ் or பிஜேபி தான் ஆளப்போகிறது அடுத்த 10-15 வருடங்களுக்கு... நம்மை யார் ஆட்சி செய்ய வேண்டும் என்பதை விட.. நம்மை யார் ஆட்சி செய்ய கூடாது என்பது மிக முக்கியம்..
ஏப்ரல் 26ல் நான் போட்ட பதிவின் மீள் பதிவு.. படித்து பார்க்கவும்..
April 26, 2018:
கொஞ்ச நாளாவே எல்லோரும் காங்கிரஸ், பிஜேபி இல்லாத மூன்றாவது அணியை பற்றி கேட்கிறார்கள்.. அப்படி நடக்குமா? வாய்ப்பிருக்கிறதா?
உண்மை நிலை என்ன!!. காங்கிரஸ், பிஜேபி இல்லாத மூன்றாம் அணி அமைய வாய்ப்பே கிடையாது இன்னும் 10-15 வருடங்களுக்கு.. காரணங்கள் இவை தான்..

1. காங்கிரஸ், பிஜேபி, ஜனதா கட்சி சப்போர்ட் இல்லாமல் சுதந்திர இந்தியாவில் இதுவரை எந்த கட்சியும் ஆட்சி அமைத்தது இல்லை.. இப்போது அந்த பழைய ஜனதா கட்சி இல்லை.. அதை விட்டுவிடுவோம்..
2. VP சிங் பிஜேபி சப்போர்ட்டுடன்.. சந்திரசேகர், தேவகவுடா, குஜ்ரால்.. இவர்கள் அனைவரும் காங்கிரஸ் சப்போர்ட்டுடன் தான் ஆட்சி அமைத்து இருக்கிறார்கள். இவர்களால் ஓராண்டு கூட ஆட்சி செய்ய முடியவில்லை..
3. இந்தியாவில் உள்ள மொத்த தொகுதிகள் 543.. ஆட்சி அமைக்க வெற்றி பெற வேண்டிய இடங்கள் 272. ஒவ்வொரு தேர்தலிலும் தனியாக காங்கிரஸ்+பிஜேபி இதில் 60-75% இடங்களை பிடித்துவிடுகிறது.. மற்ற அனைத்து கட்சிகளும் (50க்கும் மேற்பட்ட கட்சிகள் + சுயேச்சை உட்பட) சேர்ந்து 25-40% இடங்களில் மட்டும் தான் வெற்றி பெற்று இருக்கிறது.. இந்த 25-40%சை 55+% மாற்றுவது நெருங்கிய தொலைவில் இல்லை.
4. இந்தியாவில் 15 மாநிலங்களில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் கட்சி பிஜேபி/ காங்கிரஸ்.. அங்கெல்லாம் மற்ற கட்சிகள் பக்கத்தில் கூட இல்லை..
2019 தேர்தல் காங்கிரஸ்க்கு எப்படி வாழ்வா, சாவா போராட்டமோ.. அதை போல மாநிலக்கட்சிகள் உயிருடன் இருக்க அவர்களுக்கும் வாழ்வா, சாவா போராட்டம் தான்.. மாநில சுயாட்சி உரிமையை நிலைநாட்ட பிஜேபிக்கு எதிராக ஒன்றிணைய வேண்டிய கட்டாயத்தில் மாநில கட்சிகள் உள்ளது..
1. காங்கிரஸ் முதல் இரண்டு இடங்களில் வெற்றி பெற முடியாத மாநிலங்களில் இப்போதே பிஜேபிக்கு எதிரான வலிமையான மாநில கட்சிக்கு தன்னோட சப்போர்ட்டை கொடுத்துவிடுவது நல்லது..
2. மம்தா, நாயுடு, ஸ்டாலின் உட்பட அனைத்து மாநில கட்சி தலைவர்களுக்கும் உண்மை நிலை தெரியும்.. இவர்கள் அனைவருக்கும் பிஜேபியை தோற்கடிப்பது தான் நோக்கம் என்றால் காங்கிரஸ்'வுடன் கை கோர்க்க வேண்டும்..இல்லை காங்கிரஸ்சை தங்களுடன் சேர்க்க வேண்டும்..
மேலே சொன்ன இரண்டும் நடந்தால் மட்டுமே நாம் இந்த அரசிடம் இருந்து மீட்கப்படுவோம்..
நமக்கு பிடித்தோ.. பிடிக்காமலோ நம்மை மத்தியில் காங்கிரஸ் or பிஜேபி தான் ஆளப்போகிறது அடுத்த 10-15 வருடங்களுக்கு...
1991ல் இருந்து காங்கிரஸ், பிஜேபி, மற்ற அனைத்து கட்சிகள் பெற்ற வெற்றியை பார்ப்போம்...
2014:
BJP: 282, Congress: 44
Congress+BJP = 326
All other parties = 217
2009:
Congress: 206, BJP: 116
Congress+BJP = 322
All other parties = 221
2004:
Congress: 145, BJP: 138
Congress+BJP = 283
All other parties = 260
1999:
BJP: 182, Congress: 114
BJP+Congress= 296
All other parties = 247
1998:
BJP: 182, Congress: 141
BJP+Congress= 323
All other parties = 222
1996:
BJP: 161, Congress: 140
BJP+Congress= 301
All other parties = 244
1991:
Congress: 244, BJP: 120
BJP+Congress= 364
All other parties = 181
- Swathi K

கருத்துகள் இல்லை: