மாலைமலர் :
சீனா-பாகிஸ்தான் பொருளாதார பாதை வழியாக
மேற்கொள்ளப்படும் பேருந்து சேவைக்கு இந்தியா தெரிவித்த எதிர்ப்பை
பாகிஸ்தான் நிராகரித்துள்ளது.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின்
லாகூர் நகரை சீனாவின் கஷ்கர் நகருடன் இணைக்கும் புதிய பேருந்து சேவை நாளை
மறுதினம் தொடங்கவுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரில் உள்ள
சீனா-பாகிஸ்தான் பொருளாதார பாதை வழியாக இந்த பேருந்து இயக்கப்பட உள்ளது.
ஆனால் இந்த திட்டத்திற்கு இந்தியா தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இது இந்திய இறையாண்மை மற்றும் பிராந்திய ஒற்றுமையை மீறும் செயல் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று தெரிவித்திருந்தது.
ஆனால் இந்தியாவின் எதிர்ப்பு மற்றும் இந்திய வெளியுறவுத் துறையின் அறிக்கையை பாகிஸ்தான் வெளியுறவுத் துறை நிராகரித்துள்ளது.& ‘ஜம்மு காஷ்மீர் தொடர்பாக இந்தியா மீண்டும் மீண்டும் உரிமை கொண்டாடுவதால் வரலாற்று உண்மைகளையோ, காஷ்மீர் பிரச்சினையின் சட்டப்பூர்வ தன்மையையோ மாற்ற முடியாது. ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தின்படி, ஒட்டுமொத்த ஜம்மு காஷ்மீரும் பிரச்சினைக்குரிய பகுதி ஆகும். எனவே, ஐநா ஆதரவுடன் பாரபட்சமற்ற பொது வாக்கெடுப்பு நடத்திதான் இறுதி நிலையை முடிவு செய்ய வேண்டும்’ என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக