Mike Pompeo, the US secretary of state, did not say which eight countries would be exempted from the waivers but they are believed to be US allies like India, Japan, Italy, and South Korea.
மாலைமலர் :ஈரான் நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு அமெரிக்கா விலக்கு அளித்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாஷிங்டன்: ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்ததுடன், அந்த நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது எனக் கூறியது. நவம்பர் 4-ம் தேதிக்கு பிறகு எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என டிரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார்.
இதற்கிடையே, ஈரானிடம் எண்ணெய் வாங்குவது தொடரும் என இந்தியா சமீபத்தில் கூறியது. இதுகுறித்து அமெரிக்காவிடம் விளக்கியது.
இந்நிலையில், ஈரான் நாட்டிடம் இருந்து எண்ணெய் வாங்க இந்தியா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு அமெரிக்கா விலக்கு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக, அமெரிக்காவின் வெளியுறவு துறை மந்திரி மைக் பாம்பியோ கூறுகையில், ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கிக் கொள்ள 8 நாடுகளுக்கு தற்காலிகமாக விலக்கு அளிக்கப்படுகிறது. அந்த நாடுகள் குறித்து வரும் திங்கட்கிழமை அறிவிக்கப்படும். இருப்பினும், அமெரிக்க தடைக்கு பின்னர் குறைந்தளவே கச்சா எண்ணெய் வாஙக அனுமதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக