வெப்துனியா: சர்க்கார் பட விவகாரத்தால் தனது
பதவியை ராஜினாமா செய்துள்ள நடிகர் பாக்யராஜ் சில கார்ப்ரேட் நிறுவனங்களால்
மிரட்டப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.சர்கார் கதை தன்னுடைய ‘செங்கோல்’ கதை என
உதவி இயக்குனர் வருண் ராஜேந்திரன் என்பவர் கொடுத்த புகாரை விசாரித்த தமிழ்
திரை எழுத்தாளர்கள் சங்கத் தலைவர் பாக்யராஜ் சர்கார் கதையும் வருணின்
செங்கோல் கதையும் ஒன்றுதான் எனக் கூறினார்.
;இதனையடுத்து நீண்ட இழுபறிக்குப் பிறகு சர்கார் கதை திருட்டு விவகாரத்தை ஒப்புக்கொண்ட இயக்குனர் முருகதாஸ் வருண் ராஜேந்திரன் பெயரை படத்தில் போடவும் அவருக்கு சன்மானமாக 30 லட்சம் ரூபாயும் அளிப்பதாக ஒப்புக்கொண்டார்.
சர்கார் கதை விவகாரத்தில் ஈடுபட்டதால் தான் தனிப்பட்ட முறையில் பல அசௌகர்யங்களுக்கு ஆளானதால் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக நேற்று பாக்யராஜ் அறிவித்தார். ஆனால் சங்க நிர்வாகிகள் அவரின் ராஜினாமாவை ஏற்க மறுத்துவிட்டனர்.
இந்நிலையில் பாக்யராஜ் சில கார்ப்ரேட் நிறுவனங்களால் மிரட்டப்பட்டதால் தான் இந்த முடிவை எடுத்திருப்பதாக தகவல் கசிந்துள்ளது. மேலும் சர்க்கார் படத்திற்கு இடையூறாக இருந்த பாக்யராஜ், அவரது மகன், மனைவி சிறு வேடத்தில் நடித்தாலும் கூட அந்த படங்களை தங்கள் நிறுவனம் வாங்காது என பிரபல கார்ப்ரேட் நிறுவனம் எச்சரித்துள்ளது<

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக