
தீக்கதிர் : இல்லாத நிறுவனத்திடம் பெற்ற ரூ. 25 லட்சம் கடனுக்கு ரூ. 1.14 கோடி செலுத்தினார்
மோடி நியமித்த சிபிஐ இயக்குநரின் மனைவி நிதி மோசடி?
புதுதில்லி, அக். 29 -
பிரதமர் நரேந்திர மோடியால், கடந்த வாரம் சிபிஐ-யின் இடைக்கால இயக்குந ராக நியமனம் பெற்றவர் நாகேஸ்வர ராவ். ரபேல் ஊழலை விசாரித்த சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவை, கட்டாய விடுப்பில் அனுப்பி விட்டு, அவரின் இடத்தில் சங்-பரிவார் ஆசாமியான இவர் உட்கார வைக்கப்பட்டார்.இவர் மூலமாகவே சிபிஐ-க்குள் இருக்கும் குளறுபடிகளை களையப் போவதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியிருந்தார்.இந்நிலையில், நாகேஸ்வர ராவின் மனைவியான சந்தியா, இல்லாத நிறு வனத்திடம் ரூ. 1 கோடியே 14 லட்சம் கடன்வாங்கி, அதனைத் திருப்பிச் செலுத்தி யது போல போலியான கணக்கு காட்டியிருப்பது அம்பலமாகி இருக்கிறது.
நாகேஸ்வர ராவின் மனைவி எம். சந்தியா. இவர், கொல்கத்தாவைச் சேர்ந்த ஏஞ்சலா மெர்கண்டைல்ஸ் பிரைவேட் லிமிடெட் (ஹபேநடய ஆநசஉயவேடைநள ஞசiஎயவந டுவன (ஹஆஞடு) நிறுவனத்துடன், கடந்த 2011-அம் ஆண்டு தொடங்கி 2014-ஆம்ஆண்டு வரை வர்த்தக ரீதியிலான தொடர்புகள் வைத்திருந்தார் என்று நிறு வனங்களுக்கான பதிவாளர் அலுவலகம் கூறியுள்ளது.ஆனால், எம். சந்தியா கடன் பெற்றதாக கூறும், ‘ஏஞ்சலா மெர்கண்டைல்ஸ் பிரைவேட் லிமிடெட்’ என்ற பெயரில் ஒரு நிறுவனமே இல்லை என்பதுதான் தற்போதையபிரச்சனையாகும்.‘ஏஞ்சலா மெர்கண்டைல்ஸ் பிரைவேட்லிமிடெட்’ நிறுவனத்திடம், 2011-ஆம் நிதியாண்டின் முடிவில் 25 லட்சம் ரூபாயை எம். சந்தியா கடனாக வாங்கியுள்ளார்.
ஆனால்2012 மற்றும் 2014-ம் ஆண்டு வரை 1 கோடியே 14 லட்சம் ரூபாயை மூன்று தவணைகளாக அந்த நிறுவனத்திற்கு எம். சந்தியா திருப்பிக் கொடுத்துள்ளார்.2012-ஆம் ஆண்டில் 35 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய், 2013-ஆம் ஆண்டில் 38 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய், 2014-ஆம் ஆண்டில் 40 லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் என்று அவர் செலுத்தியிருக்கிறார்.நாகேஸ்வரராவ் மனைவி கடன் பெற்றது ரூ. 25 லட்சம் மட்டுமே. ஆனால்,அந்த 25 லட்சம் ரூபாய் கடனுக்கு 1 கோடியே 14 லட்சத்தை செலுத்தியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.இதுதொடர்பாக, ‘ஏஞ்சலா மெர் கண்டைல்ஸ் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்தின் இயக்குநர் ப்ரவீன் அகர்வாலை,‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஏடு தொடர்பு கொண்டபோது, “சிபிஐ இயக்குநர் நாகேஸ்வர ராவ் எனக்கு நெருங்கிய நண்பர்; சந்தியா எங்களின் குடும்ப நண்பர்களில் மிகவும் முக்கியமானவர்; நண்பர் களிடம் கடன் வாங்குவது மற்றும் கடன் கொடுப்பதில் என்ன தவறு இருக்கிறது?” எதிர்க்கேள்வி எழுப்பியுள்ளார்.ஆனால், இந்த விஷயத்தில், தனிப்பட்ட முறையில் கொடுக்கல் - வாங்கல்நடக்கவில்லை. நிறுவனம் மூலமே நடந்துள்ளது. அதுபற்றி அகர்வால் வாய் திறக்கவில்லை.
நாகேஸ்வர ராவின் மனைவியிடமே உண்மையை கேட்டுவிடலாம் என்றால், சிபிஐ செய்தித் தொடர்பாளரிடமிருந்தும் பதில் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.சரி, பதிவாளர் அலுவலகத்தில் குறிப்பிடப்பட்டிருந்த ‘ஏஞ்சலா மெர்கண்டைல்ஸ் பிரைவேட் லிமிடெட்’நிறுவனத்தின் முகவரிக்கே நேரில் சென்று விசாரிக்கலாம் என்று பார்த்தால் குறிப்பிட்ட அந்த முகவரியில் நிறுவனங்கள் எதுவும் செயல்படவில்லை என்ற அதிர்ச்சியான தகவல்கிடைத்துள்ளது. குடும்பங்கள் வாழ்வதற்கான வீடுமட்டுமே இங்கு உள்ளது; அந்த வீட்டிலும் ‘ஏஞ்சலா மெர்கண்டைல்ஸ் பிரைவேட் லிமிடெட்’ இயக்குநரான அகர்வாலின்குடும்பம் ஒருபோதும் குடியிருக்கவில்லை என்று, அந்த வீட்டைப் பாதுகாத்து வரும் பாதுகாவலர் கூறியுள்ளார்.
இவையெல்லாம் நாகேஸ்வர ராவ் மனைவியின் பணப் பரிவர்த்தனைகள் மீது சந்தேகங்களை வலுவாக்கியுள்ளன.சிபிஐ இயக்குநர் நாகேஸ்வர ராவின் மனைவி எம். சந்தியா, எதற்காக, இல்லாதஒரு நிறுவனத்திடம் ரூ. 25 லட்சம் கடன்பெற்றதாக கூற வேண்டும்.. அந்த கடனுக்கு, ரூ. 1 கோடியே 14 லட்சத்தை திருப்பிச் செலுத்த வேண்டும்..? என்ற கேள்விகளை மீண்டும் எழுப்பியிருப்பது டன், இதற்குள் ஏதோ ஒரு முறைகேடு நடந்திருக்கிறது என்பதை மட்டும் உறுதிப்படுத்தி இருக்கிறது.<">தீக்கதிர்</
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக