அலைக்கற்றை ஊழலில் ஈடுபட்டதாக தி.மு.க.வை பற்றி பேசுவதை முதல்�அமைச்சர்
ஜெயலலிதா நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி
தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், கள்ளக்குறிச்சியில் கடந்த 2 நாட்களுக்கும் முன்பு முதலமைச்சர் ஜெயலலிதா, மத்திய அரசில் அங்கம் வகித்தபோது தமிழ்நாட்டிற்கே தலைக்குனிவை ஏற்படுத்தும் வகையில் 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அலைக்கற்றை இமாலய ஊழலை முன்னின்று நடத்திய கட்சி தி.மு.க. என்று அவருக்கே உரிய பாணியில் தம் மீது பழி சுமத்தியிருக்கிறார். அலைக்கற்றை பற்றிய வழக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது. இன்னும் தீர்ப்பு வழங்கப்படவில்லை. விசாரணை தான் நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார்.
மேலும், குற்றம் சாட்டப்பட்ட ஆ.ராசா உள்ளிட்டோர், ஜெயலலிதாவைப்போல வாய்தா வாங்காமல், விசாரணைக்கு முறையாக ஒத்துழைத்து வருகிறார்கள். ஆனால் ஜெயலலிதா கலந்து கொள்ளும் ஒவ்வொரு தேர்தல் பிரசார கூட்டங்களிலும் தி.மு.க. ஊழல் புரிந்ததாக வேண்டுமென்றே திட்டமிட்டு குற்றஞ்சாட்டி வருகிறார் என்று தெரிவித்தார். tamilantelevision.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக