தர்மபுரியில், பா.ம.க.,வின் வியூகத்தை முறியடிக்க, களத்தில் இறங்கிய,
அ.தி.மு.க., - தி.மு.க.,வினர் உட்பட, பல்வேறு கட்சியினரும், இரவு பகல்
பாராமல், திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதே முறையை மற்ற
தொகுதிகளில் பின்பற்றுவது குறித்தும், தீவிரமாக ஆலோசிக்கப்படுகிறது.லோக்சபா
தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்னரே, கிருஷ்ணகிரி, சேலம் உட்பட, 10
தொகுதிகளுக்கு, பா.ம.க., தலைவர் மணி உள்ளிட்டவர்களை வேட்பாளராக,
அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார். தர்மபுரி தொகுதிக்கு வேட்பாளரை
அறிவிக்காவிட்டாலும், பா.ம.க., இளைஞர் அணி தலைவரான, அன்புமணி தான்,
தர்மபுரியில் போட்டியிடுவதாக, மேடைகளில் தெரிவித்து வந்தனர்.மேலும்,
தர்மபுரி தொகுதியில், இரண்டு மாதங்களாக, பா.ம.க.,வினர் திண்ணை பிரசாரம்
மூலம், தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வந்ததுடன், ராமதாஸ், அன்புமணி,
குரு ஆகிய பா.ம.க, மற்றும் வன்னியர் இன தலைவர்கள் கைது செய்யப்பட்டதையும்,
தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த, பா.ம.க.,வினர் பலரை கைது செய்ததையும்
சுட்டிக்காட்டி, பா.ம.க.,வினர், திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்டு
வருகின்றனர்.
இந்த திண்ணை பிரசாரத்தின் மூலம், ஜாதி ஓட்டுகளை மொத்தமா அள்ளலாம் என்பது, பா.ம.க.,வின் கணக்கு. அவர்களின் முயற்சிக்கு, ஓரளவு பலன் கிடைத்துள்ளது. அதனால், வன்னியர் அதிகம் வசிக்கும் பகுதிகளில், மற்ற கட்சியினர் சுவர் விளம்பரம் கூட, செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது.
அதனால், பா.ம.க., வழியை பின்பற்றி, ஒவ்வொரு தொகுதியிலும், கிராமங்கள் வாரியாக, ஜாதித் தலைவர்களை, "கவனித்து' அவர்கள் மூலம், திண்ணை பிரசாரம் செய்து, ஜாதிவாரியாக ஓட்டுகளை அள்ளுவது குறித்து, தற்போது, அ.தி.மு.க., மற்றும் தி.மு.க.,வினர் பரிசீலித்து வருகின்றனர்.இதன் முதல் கட்டமாக, பா.ம.க.,வுக்கு செல்வாக்கு உள்ள, தர்மபுரி மற்றும் சேலம் பகுதிகளிலும், தினமும், இரவு பகல் பாராமல், கிராமம், கிராமமாக சென்று பொதுமக்களிடம் சகஜமாக பேசுவதுபோல், திண்ணை பிரசாரத்தில், அ.தி.மு.க.,வினரும், தி.மு.க.,வினரும் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து, அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., பிரமுகர்கள் சிலர் கூறியதாவது:தங்கள் பாணியை, பிரதான கட்சிகளான, அ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும் பின்பற்றத் துவங்கியுள்ளதால், பா.ம.க.,வினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதேநேரத்தில், இந்த தந்திரங்களை எல்லாம் முறியடித்து, எப்படி ஓட்டுகளைப் பெறலாம், என, தே.மு.தி.க.,வினரும், ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.பல மாதங்களாக, பா.ம.க.,வினர், தர்மபுரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில், பிரசாரம் செய்து வருகின்றனர். மற்ற கட்சி வேட்பாளர்களுக்கு, சுவர் விளம்பரங்கள் செய்ய அனுமதிக்க கூடாதென, வன்னிய சமூகத்தினரிடமும், தங்கள் கட்சியினரிடமும் தெரிவித்து வருகின்றனர்.இது, அரசியல் நாகரிகம் இல்லை. இரவு நேரங்களில், பிரசாரம் செய்தால், வேட்பாளர்கள் மீதும், பிரசாரம் செய்யும் தொண்டர்கள் மீதும், தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கிறது.எனவே, வீடுகள் தோறும் சென்று, மக்களோடு மக்களாக கலந்து, திண்ணையில் அமர்ந்து, சகஜமாக பேசி, தேர்தல் குறித்தும், அரசியல் குறித்தும் அவர்களுக்கு எடுத்துரைத்து, ஓட்டு சேகரித்து வருகிறோம்.பேனர், சுவர் விளம்பரம் என, எதிலும் கிடைக்காத வரவேற்பு, திண்ணை பிரசாரத்தில் கிடைக்கிறது. மேலும், இரவு எத்தனை மணி நேரம் வேண்டுமானாலும், திண்ணை பிரசாரம் மேற்கொள்ளலாம். எனவே, திண்ணை பிரசாரத்துக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
- நமது சிறப்பு நிருபர் - dinamalar.comதர்மபுரியில், பா.ம.க.,வின் வியூகத்தை முறியடிக்க, களத்தில் இறங்கிய, அ.தி.மு.க., - தி.மு.க.,வினர் உட்பட, பல்வேறு கட்சியினரும், இரவு பகல் பாராமல், திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதே முறையை மற்ற தொகுதிகளில் பின்பற்றுவது குறித்தும், தீவிரமாக ஆலோசிக்கப்படுகிறது.
லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்னரே, கிருஷ்ணகிரி, சேலம் உட்பட, 10 தொகுதிகளுக்கு, பா.ம.க., தலைவர் மணி உள்ளிட்டவர்களை வேட்பாளராக, அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார். தர்மபுரி தொகுதிக்கு வேட்பாளரை அறிவிக்காவிட்டாலும், பா.ம.க., இளைஞர் அணி தலைவரான, அன்புமணி தான், தர்மபுரியில் போட்டியிடுவதாக, மேடைகளில் தெரிவித்து வந்தனர்.மேலும், தர்மபுரி தொகுதியில், இரண்டு மாதங்களாக, பா.ம.க.,வினர் திண்ணை பிரசாரம் மூலம், தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வந்ததுடன், ராமதாஸ், அன்புமணி, குரு ஆகிய பா.ம.க, மற்றும் வன்னியர் இன தலைவர்கள் கைது செய்யப்பட்டதையும், தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த, பா.ம.க.,வினர் பலரை கைது செய்ததையும் சுட்டிக்காட்டி, பா.ம.க.,வினர், திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த திண்ணை பிரசாரத்தின் மூலம், ஜாதி ஓட்டுகளை மொத்தமா அள்ளலாம் என்பது, பா.ம.க.,வின் கணக்கு. அவர்களின் முயற்சிக்கு, ஓரளவு பலன் கிடைத்துள்ளது. அதனால், வன்னியர் அதிகம் வசிக்கும் பகுதிகளில், மற்ற கட்சியினர் சுவர் விளம்பரம் கூட, செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது.

- நமது சிறப்பு நிருபர் -

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக