ஞாயிறு, 16 மார்ச், 2014

TRS காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை: சந்திரசேகர ராவ்

மக்களவை தேர்தல் மற்றும் ஆந்திர சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி கிடையாது என தெலங்கானா ராஷ்டிரீய சமிதி கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.
தெலங்கானா பவனில் கட்சித்தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய சந்திரசேகர ராவ் இதனை தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியுடனான இணைப்புக்கு தெலங்கானா ராஷ்டிரீய சமிதி கட்சி மறுத்த பின்னர், அக்கட்சியுடன் தேர்தல் கூட்டணியாவது ஏற்பட வேண்டும் என காங்கிரஸ் கடும் முயற்சி எடுத்துவந்தது. இந்நிலையில், ராவ் கூட்டணியும் இல்லை என அறிவித்துள்ளார்.
சந்திரசேகர ராவின் இந்த அறிவிப்பு காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. நேத்துவரை சோனியாதான் தெய்வம் காங்கிரஸ்தான் கோவில் என்ற ரேஞ்சுக்கு புகழ்பாடி காரியம் முடிஞ்சதும் கைகழுவியாச்சு ,இதுதாண்டா அரசியல் .

முன்னதாக, காங்கிரஸுடன் இணைப்புக்கு மறுத்து தெலங்கானா ராஷ்டிரீய ஜனதா கட்சி தங்களுக்கு துரோகம் செய்து விட்டதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜனார்த்தன் துவிவேதி தெரிவித்திருந்தார்.
அவரது இந்த கருத்தை சுட்டிக்காட்டிய சந்திரசேகர ராவ், "நாங்கள் யாருக்கும் துரோகம் செய்யவில்லை. காங்கிரஸுடன் இணைய வேண்டும் என அவர்கள் விரும்பினார்கள். ஆனால் மக்கள் அப்படி இணைப்பு ஏற்படக் கூடாது என விரும்புகின்றனர். மக்கள் விருப்பத்தையே நாங்கள் நிறைவேற்றுகிறோம். தெலங்கானாவுக்காக தற்கொலை செய்து கொண்ட இளைஞர்கள் பலர், காங்கிரஸ் கட்சியையே காரணம் காட்டியுள்ளனர். ஆனால் வரவிருக்கும் தேர்தலில் அவர்கள் உறவினர்களுக்கு சீட்டு வழங்குவதாக கூறி காங்கிரஸ் கட்சி நாடகம் நடத்துகிறது" என்றார். tamil.thehindu.com/

கருத்துகள் இல்லை: