'சென்னை: 'தி.மு.க.,வுக்கு ஆதரவாக, நடிகை குஷ்பு பிரசாரம் செய்யும்
சுற்றுப்பயண விவரம், ஓரிரு நாளில் வெளி வரும்' என, தி.மு.க., தலைவர்,
கருணாநிதி கூறியுள்ளார்.
அவரது அறிக்கை: தி.மு.க.,வில்,
குஷ்பு புறக்கணிக்கப்படவில்லை; அவர், தேர்தல் பிரசாரத்திற்கு செல்லவும்
தடை விதிக்கப்படவில்லை. கட்சியின் முன்னணிப் பேச்சாளர்கள் அனைவரும், என்
சுற்றுப்பயணம் வெளி வருவதற்காக காத்திருந்தனர். காரணம், எந்த தேதியில்
நான், எந்த ஊரில் கலந்து கொள்கிறேன் என்பதைப் பொறுத்து, அவர்களுடைய
நிகழ்ச்சிகளை வகுத்துக் கொள்வதற்காக தான் தாமதம். தற்போது, என்
சுற்றுப்பயணம் உறுதிபடுத்தப்பட்டுள்ளதால், அவர்களின் சுற்றுப்பயணங்கள்
தலைமை நிலையத்தால் வகுக்கப்பட்டு வருகின்றன. ஓரிரு நாட்களில் அவை வெளிவந்து
விடும். இவ்வாறு, கலைஞர் கருணாநிதி கூறியுள்ளார். dinamalar .com அய்யா கலைஞர் அவர்களே எப்படித்தான் பார்த்தாலும் பாரம்பரிய திமுக தொண்டனுக்கு இருக்க வேண்டிய போர் குணம் இனமான உணர்வு சுயமரியாதை பண்பு பகுத்தறிவு கொள்கை போன்றவற்றில் கனிமொழியிடம் ஸ்டாலினை கொஞ்சம் பாடம் கத்துக்க சொல்லுங்க , அட குஷ்பூ கூட அடிப்படை திமுக தொண்டனுக்கு இருக்க கூடிய பண்புகளுடன் உள்ளாரே , ஸ்டாலினுக்கு தனது தகுதி இன்மை புரிகிறது , அதான் அழகிரி கனிமொழி குஷ்பூ என்று சுயம் உள்ள எல்லோரையும் ஓரங்கட்ட பார்க்கிறார் ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக