திங்கள், 17 மார்ச், 2014

நாமக்கல் தே.மு.தி.க..வேட்பாளர் தேர்தலில் இருந்து விலகினர்.பணத்தை வைத்து இன்னமும் கீழே வேலை செய்யவும் மம்மி ரெடி..


நாமக்கல் தொகுதியில் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் இன்று பிரசாரம் செய்யவிருந்த நிலையில் இங்கு நிறுத்தப்பட்டுள்ள இந்த கட்சியின் வேட்பாளர் தனக்கு உடல்நலம் சரியில்லை என்ற காரணத்தை காட்டி போட்டியில் இருந்து விலகி கொள்வதாக கட்சி தலைமைக்கு தெரிவித்துள்ளார். இதனால் இந்த கட்சிக்கு மாற்று வேட்பாளரை அறிவிக்க வேண்டிய நிலைக்கு தே.மு.தி.க, தள்ளப்பட்டுள்ளது.
விஜயகாந்த் இன்று நாமக்கல், ஈரோடு , கரூர் தொகுதிகளில் பிரசாரம் செய்கிறார். மாலை 3 மணிக்கு நாமக்கல்லில் பிராசாரம் செய்வார் என கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்நிலையில் இங்கு அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் மகேஸ்வரன் தனக்கு உடல் நிலை சரியில்லை, மருத்துவமனையில் பல்வேறு சோதனைகள் செய்ய வேண்டியுள்ளது. என கூறி நேற்று மாலையில் கோவை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். மூச்சு திணறல் தொந்தரவு இருப்பதாக தெரிகிறது.  ஐந்து வருசத்தில் நீ சம்பாதிப்பதை நான் ஒரே நாளில் தந்தால் நீ வெளியே போயிருவியா? மம்மியின் மந்திரக் கோல் செய்யும் தந்திரம்.. பணத்தை வைத்து இன்னமும் கீழே வேலை செய்யவும் மம்மி ரெடி..



யார் இந்த மகேஸ்வரன்? கட்சியின் மாநில மாணவரணி துணை செயலாளராகவும் இருந்து வந்தவர். கடந்த 2009 லோக்சபா தேர்தலில் தே.மு.தி.க., சார்பில் தனித்து போட்டியிட்டு 79 ஆயிரம் ஓட்டுக்கள் பெற்று தோற்று போனார். தொடர்ந்து 2011 சட்டசபை தேர்தலில் போட்டியிட சீட் கேட்டபோது கட்சி தலைமை மறுத்து விட்டது. இதன் பின்னர் கட்சியில் இருந்தும் பொறுப்புகளில் இருந்தும் விலகி கொண்டார். தற்போது இவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது கட்சியில் சிலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் தேர்தல் பணிகள் எதுவும் துவக்காமல் இருந்து வந்தார். இந்நிலையில் அவர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். தோல்வி பயம் காரணமாக விலகினாரா என்ற பேச்சும் அடிபடுகிறது.

இதனையடுத்து நாமக்கல் தொகுதிக்கு மாற்று வேட்பாளர் ஒருவர் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இன்று நாமக்கல் தொகுதியில் விஜயகாந்த் பிரசாரம் செய்வாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. dinamalar.com

கருத்துகள் இல்லை: