![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjW8FXT5mf_2tMU_ijEsKkQM9IZ7l5m3Xof0TZvvEuMXuLUatimQC083dqLo15hP5zc76_60LBCdCnBGFcwgw_KUII1d8fJma0oGC8LFLU1iMk1anDvUEMpB7uMOC18u-OJ36kus8I8Cp0/s1600/T330_9435_cbse.jpg)
இதற்கு அடுத்த நிலையில் உள்ள பள்ளிகளில், 80 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது. பல பள்ளிகளில், உரிய ரசீது கொடுக்காமல், துண்டு சீட்டில், கட்டண விவரங்களை எழுதிகொடுத்து, பணத்தை கட்ட சொல்கின்றனர். ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பிற்கு கூட, புத்தக கட்டணமாக, 16
ஆயிரம் ரூபாய் முதல், 20 ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. 'சிறிய வகுப்பிற்கு, இவ்வளவு கட்டணமா?' என, பெற்றோர், வாய் பிளக்கின்றனர். ஆனாலும், வேறு வழியில்லாமல், புலம்பியபடி, கட்டணங்களை செலுத்துகின்றனர்.நியாயமான கட்டணங்கள்: சி.பி.எஸ்.இ., பள்ளிகளின், இந்த வசூல் வேட்டையைத் தடுக்க, சென்னையில் உள்ள, சி.பி.எஸ்.இ., தென் மண்டல அதிகாரிகளோ அல்லது, தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணய குழுவோ, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சி.பி.எஸ்.இ., பள்ளிகளின், அதிக வசூல் வேட்டையை தடுத்து நிறுத்தவும், நியாயமான கட்டணங்களை நிர்ணயிக்கவும், கட்டண நிர்ணய குழுவிற்கு, அதிகாரம் உள்ளது.
இக்குழு, ஏற்கனவே பல, சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு, கல்வி கட்டணங்களை நிர்ணயித்து உள்ளது. அதிக கட்டணம் வசூல் தொடர்பாக, பெற்றோரிடம் இருந்து வந்த புகார்களின் அடிப்படையில், கடந்த காலங்களில் விசாரணை நடத்தி, 1.5 கோடி ரூபாய்க்கும் அதிகமான கட்டணங்களை, பெற்றோருக்கு, திருப்பித் தர நடவடிக்கை எடுத்துள்ளது. எனினும், குறிப்பிட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து, சி.பி.எஸ்.இ., அதிகாரிகள், கண்டும், காணாமல் உள்ளனர்.
கட்டண நிர்ணய குழு அலுவலக வட்டாரம்
சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு, கட்டணம் நிர்ணயிக்கும் அதிகாரம், கட்டண நிர்ணய குழுவிற்கு இல்லை என, தெரிவித்து, சிலர், சுப்ரீம் கோர்ட் வரை வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்குகள் நிலுவையில் உள்ளன. வழக்குகள் இருந்தாலும், கட்டண நிர்ணய காலம் முடிந்த, சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு, 2016ம் கல்வி ஆண்டு வரை, புதிய கட்டணம் நிர்ணயித்து, குழு அறிவித்து உள்ளது. புகார் அளிக்கலாம்: சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பாக, பெற்றோர், புகார் அளிக்க வேண்டிய அலுவலகங்கள்: 1. நீதிபதி சிங்காரவேலு, தலைவர், தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணய குழு, டி.பி.ஐ., வளாகம், கல்லூரி சாலை, சென்னை - 6.
2. சி.பி.எஸ்.இ., சென்னை மண்டல அலுவலகம், எண்: 3, பழைய எண்: 1630, 16வது மெயின் ரோடு, அண்ணா நகர் மேற்கு, சென்னை - 40, தொலைபேசி: 044-2616 2213,14, பேக்ஸ்: 044-2616 2212
- நமது நிருபர் - dinamalar.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக