மதுரையில் ஞாயிற்றுக்கிழமை மு.க.அழகிரி ஆதரவாளர்களால் ஓட்டப்பட்டிருந்த போஸ்டர்.
மதுரையில் ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய
மு.க.அழகிரி, தொண்டர்கள் தன் மீதான பாசத்தால் போஸ்டர்கள் அடித்து
ஒட்டுவதுதான் இப்போது ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு காரணம் என்று வேதனையை
வெளியிட்டார்.
கூட்டத்தில் பேசிய அவர், போஸ்டரால்தான் இவ்வளவு பிரச்னையும். முதலில் என் ஆதரவாளர்கள் போஸ்டர் அடித்து ஒட்டுவதை நிறுத்த வேண்டும். அதனால்தான் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்தக் கூட்டம் நடப்பதே இந்தப் போஸ்டர் பிரச்னையால்தான். எனவே இதனை முதலில் நிறுத்தணும்.
என் மீதான அன்பின் காரணமாக போஸ்டர் அடித்து ஒட்டுகிறீர்கள்.
ஆனால், இதனை அங்கே அருகில் இருக்கும் நபர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
எனது பிறந்த நாள் ஒரு பொதுக்குழுக் கூட்டத்தை போல் நடக்கும் என்று போஸ்டர் ஒட்டியிருந்தார்கள். அதை ஒரு விமர்சனமாக எடுத்துக் கொண்டிருக்க வேண்டும். கட்சிக்குள் நிலவும் பிரச்னையை சரி செய்ய முன்வந்திருக்க வேண்டும். ஆனால், அதை பெரிய பிரச்னையாக எடுத்துக் கொண்டு இவ்வளவு தூரம் கொண்டு வந்திருக்கிறார்கள்.. என்று கூறினார் மு.க.அழகிரி.dinamani.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக