திங்கள், 3 டிசம்பர், 2012

5 ஆண்டுகளில் அரசியல் கட்சிகளுக்கு ரூ.2,490 கோடி வருமானம்



புதுடெல்லி : முக்கிய அரசியல் கட்சிகளுக்கு கடந்த 5 ஆண்டுகளில் ரூ.2 ஆயிரத்து 490 கோடிக்கு வரிவிலக்குடன் கூடிய வருவாய் கிடைத்துள்ளது என வருமானவரித்துறை அளித்த அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. அரசியல் கட்சிகளுக்கு அளிக்கப்படும் நன்கொடைக்கு வரிவிலக்கு உள்ளது. ரூ.20 ஆயிரத்துக்கும் மேல் அளிக்கப்படும் நன்கொடைகளை ஒவ்வொரு கட்சிகளும் பதிவு செய்து வைத்திருக்க வேண்டும் என்பது விதிமுறை. http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=32801


அரியானா மாநிலம் ஹிசார் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் வர்மா என்பவர், முக்கிய அரசியல் கட்சிகளுக்கு கடந்த 5 ஆண்டுகளில் கிடைத்த நன்கொடை விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரிவிக்க வேண்டும் என வருமானவரித்துறையிடம் விண்ணப்பித்திருந்தார்.  அதன்படி அளிக்கப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாட்டில் உள்ள 10 முக்கிய அரசியல் கட்சிகளுக்கு கடந்த 5 ஆண்டுகளில் ரூ.2 ஆயிரத்து 490 கோடிக்கு வரிவிலக்குடன் கூடிய நன்கொடை கிடைத்துள்ளது. இதில் 80 சதவீதம் காங்கிரஸ் மற்றும் பா.ஜ கட்சிக்கு கிடைத்துள்ளன.

காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் ரூ.1385 கோடியே 36 லட்சம் நன்கொடை கிடைத்துள்ளது. பா.ஜ கட்சிக்கு ரூ.682 கோடி கிடைத்துள்ளது. ஐக்கிய ஜனதா தள கட்சிக்கு கடந்த 4 ஆண்டுகளில் ரூ.15.51 கோடி கிடைத்துள்ளது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு கடந்த 3 ஆண்டுகளில் ரூ.147.18 கோடி நன்கொடை கிடைத்துள்ளது.
சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ரூ.141.34 கோடி கிடைத்துள்ளது. மார்க்சிஸ்ட் கட்சிக்கு கடந்த நான்கு ஆண்டுகளில் ஸி85.61 கோடி கிடைத்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு கடந்த 2 ஆண்டுகளில் ரூ.28.47 கோடி கிடைத்துள்ளது.

மதச்சார்பற்ற ஜனதா தள கட்சிக்கு கடந்த 2 ஆண்டுகளில் ரூ.7.16 கோடி கிடைத்துள்ளது. பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சிக்கு கடந்த 4 ஆண்டுகளில் ரூ.2.55 கோடி கிடைத்துள்ளது. லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சிக்கு கடந்த 3 ஆண்டுகளில் ரூ.2.85 கோடி கிடைத்துள்ளது. ஸி20 ஆயிரத்துக்கும் குறைவான நன்கொடை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. அவற்றையெல்லாம் சேர்த்தால் அரசியல் கட்சிகளின் வருமானம் மேலும் பல ஆயிரம் கோடியாக இருக்கும்

கருத்துகள் இல்லை: