என் கணவர் திட்டமிட்டுக் கொல்லப்பட்டார்: நீதிபதி மகேந்திர பூபதியிடம் பிரபு மனைவி புகார்
மானாமதுரை:
என் கணவரை திட்டமிட்டு போலீசார் கொலை செய்துவிட்டனர் என்று பிரபுவின்
மனைவி ரோஜா, விசாரணைக்கு வந்த நீதிபதி மகேந்திர பூபதியிடம் புகார்
கூறினார்.
எஸ்.ஐ. ஆல்வின் சுதன் கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்ட
இரண்டு பேரை மானாமதுரை அருகே கடந்த சில தினங்களுக்கு முன்பு போலீசார்
சுட்டுக்கொன்றனர். இது போலி என்கவுன்டர் என்றும் நீதிவிசாரணை வேண்டும்
என்றும் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் கோரியிருந்தர். இதனையடுத்து
இளையாங்குடி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மகேந்திர பூபதி தலைமையில்
நீதிவிசாரணை நடைபெறும் என்று அரசு அறிவித்தது.http://tamil.oneindia.in/
இதனையடுத்து
மானாமதுரையில் ஞாயிறன்று நீதி விசாரணை தொடங்கியது. நீதிபதி மகேந்திரபூபதி
காலை முதல் மாலைவரை மேற்கொண்ட விசாரணையில் பிரபு மற்றும் பாரதியின்
உறவினர்கள் உட்பட சுமார் 30 பேர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். அப்போது
நீதிபதியிடம் பேசிய பிரபுவின் மனைவி ரோஜா, தனது கணவர் திட்டமிட்டு
கொல்லப்பட்டதாக புகார் தெரிவித்தார்.
இதனிடையே, சுட்டுக்
கொல்லப்பட்டவர்கள் மீதான வழக்குகள் மற்றும் குற்றச் செயல்கள் குறித்த
விவரங்களை நீதிபதியிடம் போலீசார் எடுத்துக் கூறினர். மேலும், என்கவுன்ட்டர்
ஏன் நடத்தப்பட்டது என்பது குறித்தும் அவர்கள் விரிவாக எடுத்துரைத்தனர்.
என்கவுன்டரில் கொல்லப்பட்ட பிரபு பாரதியின் மீது மானாமதுரை,
திருப்பாச்சேத்தி, சிவகங்கை ஆகிய காவல் நிலையங்களில் 12-க்கும் மேற்பட்ட
வழக்குகள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக