பெண்கள் செல்போன் பயன்படுத்தினால் ரூ.10,000 அபராதம்: பீகார் பஞ்சாயத்து
பீகார் மாநிலம், கிசன்கஞ்சில் உள்ள சுந்தர்வாடி
பஞ்சாயத்து கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. அதில் இனி கிராமத்தில் உள்ள
பெண்கள் யாராவது செல்போன் பயன்படுத்தினால் அவர்களுக்கு ரூ.10,000 அபராதம்
விதிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
அண்மையில் கோச்சதம்
வட்டாரத்தைச் சேர்ந்த சில திருமணமான பெண்கள் தங்கள் கள்ளக்காதலர்களுடன்
ஓட்டம் பிடித்ததையடுத்து தான் பஞ்சாயத்தில் இந்த முடிவு
எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இது குறித்து பஞ்சாயத்து தலைவி ஷமீமா காத்தூனைக்
கேட்டதற்கு, நான் அந்த கூட்டத்திற்கே போகவில்லை என்று தெரிவித்தார்.
பஞ்சாயத்தின்
இந்த முடிவு குறித்து விசாரணை நடத்துமாறு மாவட்ட நிர்வாகம்
உத்தரவிட்டுள்ளது. இதே போன்று கடந்த ஜூலை மாதம் உத்தர பிரதேசத்திலும்,
நவம்பரில் ராஜஸ்தானில் உள்ள தௌசாவிலும் பெண்கள் செல்போன் பயன்படுத்த தடை
விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.http://tamil.oneindia.in/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக