புதுடில்லி: ஊழல்கள் நிறைந்த நாடுகளில் 36-வது இடத்தில் இந்தியா இடம்
பெற்றுள்ளது. இது உலக அளவில் 94 ரேங்க் பெற்றுள்ளது ஆய்வறிக்கையில்
தெரியவந்துள்ளது.உலக அளவில் அரசுத்துறை, பொதுத்துறை உள்ளிட்ட
பல்வேறுதுறைகளில் ஊழல்கள் நிறைந்துள்ளன. இவற்றில் ஊழல்கள் நிறைந்த நாடுகள்
எவை என்பது குறித்து ,டி.ஐ.ஐ. எனப்படும் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேசனல்
இந்தியா என்ற அமைப்பு ஆய்வு மேற்கொண்டு அதற்கான அறிக்கையினை வெளியிட்டது.
அதன்படி 2012-ம் ஆண்டு வரை மொத்தம் உள்ள 182 நாடுகளில் இந்தியா 36
இடத்தில் உள்ளது. இது உலக அளவில் 94வது ரேங்க் ஆகும்.இதுகுறித்து டி.ஐ.ஐ.
அமைப்பின் துணைத்தலைவர் எஸ்.கே.அகர்வால் கூறியதாவது;உலக அளவில் ஊழல்கள்
அதிகம் உள்ள நாடுகள் பட்டியலில் முதல் 10 நாடுகள் பட்டியலில் ஆப்ரிக்க
நாடான சோமாலியா, வடகொரியா, ஆப்கானிஸ்தான் ஆகியவை இடம் பெற்றுள்ளன.ஊழல்கள்
குறைந்த உள்ள நாடுகளில் பின்லாந்தும், நியூசிலாந்தும் உள்ளன. http://www.dinamalar.com/
மேலும்
இந்தியாவை பொறுத்தவரை கடந்த 2011-ம் ஆண்டு 182 நாடுகளில் ஆய்வு செய்ததில்
இந்தியா 95-வது ரேங்க் பெற்றிருந்தது. இந்தாண்டு 176 நாடுகளில் ஆய்வு
மேற்கொள்ளப்பட்டதில் இந்தியா 94 ரேங்க் பெற்று 36 இடத்திலும், தொடர்ந்து
சீனா 39 இடத்திலும், பாகிஸ்தான் 27 இடத்திலும் உள்ளது.இவ்வாறு அந்த
அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக 2-ஜி
ஸ்பெக்டரம் ஒதுக்கீட்டில் ஊழல், நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கியதில் ஊழல்,
காமல்வெல்த் போட்டிகளில் ஊழல் போன்ற பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள்
தற்போது இந்தியாவில் பரபரப்பினை ஏற்படுத்தி வருகின்றன.
லோக்பால் மசோதாவிற்கு இன்று ஒப்புதல்?
இதற்கிடையே ஊழலுக்கு எதிரானவலுவான லோக்பால் மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல்அளிக்கப்படமாலம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது லோக்பால் மசோதா பாராளுமன்ற லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது.ராஜ்யசபாவில் நிறைவேற்றப்படவில்லை. பாராளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனையில் உள்ளது.மாநிலங்களில் லோக்ஆயுக்தாவை நீக்குதல், பிரதமர் உள்ளிட்டவர்களை லோக்பால் வரம்பில் இருந்து விலக்கு அளித்தல் உள்ளிட்ட பல்வேறு திருத்தங்களுடன் இன்று மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்படலாம் என தெரிகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக