ஈரோடு :மாநகராட்சி அரசு பள்ளி குழந்தைகளுக்கு, தனியார் பள்ளிக்கு
நிகராக, அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில், கணினி மூலம் கல்வி கற்று
தரப்படுகிறது.
தேர்வு:மாணவர்களின், கற்றல் திறனை வலுப்படுத்துதல், படைப்பாற்றலை வளர்த்தல், கடினப்பகுதியை எளிதாக கற்றல், இடைநிற்றலை தடுக்க, கணினி வழிக்கல்வி முறை திட்டம் கொண்டு வரப்பட்டது.இக்கல்வியின் மூலம், நகர்ப்புற மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு இடையே நிலவும், தொழில்நுட்ப இடைவெளியை நீக்கி, துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் கிராமப்புற குழந்தைகளுக்கு, தரமான கல்வியை அளிக்க இத்திட்டம் ஒரு வாய்ப்பாகும்.கணினி வழிக்கல்வி அளிக்க, "அசிம் பிரேம்ஜி நிறுவனம் (ஏ.பி.எஃப்.,), ஒத்துழைப்பு அளித்து, எஸ்.எஸ்.ஏ., மூலம், அனைத்து யூனியனில் செயல்படும் துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை தேர்வு செய்கிறது.

இது போதாது ... இன்னும் முன்னேற்றம் வேண்டும் .. என்று தமிழகத்தில்
தனியார் பள்ளிகள் இல்லை என்ற நிலை உருவாகிறதோ அன்றே நமது இலக்கு
நிறைவடையும் .. அதற்கு அரசு இன்னும் உழைக்க வேண்டும் ... மக்களிடம் அரசு
பள்ளிகளின் மீது நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும் .. கல்வி புரட்சி கட்டாயம்
தேவை ... http://www.dinamalar.com/
சி.டி.,:
அதை,
வட்டார வள மையத்துடன் இணைந்து, கணினி வழிக்கல்வி மையங்களை உருவாக்கி,
பயிற்சி பெற்ற ஆசிரியர் பயிற்றுனர்கள் மூலம், ஆசிரியர்களின் துணையுடன்
செயல்பட்டு வருகிறது.மாணவர்கள் தாங்களாகவே ஆசிரியர்கள் உதவியின்றி, கணினி
மூலம் பாடத்தில் உள்ள கடினப்பகுதிகளை எளிதாக கற்க ஏதுவாக, அசிம் பிரேம்ஜி
நிறுவனம், 62 சி.டி.,க்களை வெளியிட்டு உள்ளது. இந்த சி.டி.,க்களை
மாணவர்கள், கணினியில் தாங்களே பயன்படுத்தும்போது, கவனச் சிதறலின்றி கல்வி
கற்ற ஏதுவாக அமைந்துள்ளது.அதன்படி, அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில்,
ஈரோடு மாவட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை, கல்வி
பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் மொத்தம், 378 கணினி வழிக்கற்றல்
மையங்கள் செயல்படுகிறது. ஈரோடு யூனியனில் மட்டும், 26 கணினி வழிக்கற்றல்
மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
முன்னேற்றம்:
ஈரோடு யூனியன் கட்டுப்பாட்டில் வரும், ஈரோடு ரயில்வே காலனி மாநகராட்சி துவக்கப் பள்ளி மையத்தில், இக்கல்வி கற்று கொடுக்கப்படுகிறது. ஐந்தாம் வகுப்பு வரையுள்ள இப்பள்ளியில் மொத்தம், 172 குழந்தைகள் கல்வி பயில்கின்றனர். கணினி வழிக்கற்றல் வழியாக இப்பள்ளி குழந்தைகளுக்கு பல்வேறு தலைப்புகளில், வகுப்பு வாரியாக கல்வி கற்பிக்கப்படுகிறது.இதன் மூலம், மாணவர்களிடம் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக