திங்கள், 3 டிசம்பர், 2012

France ஸ்டீல் தொழிற்சாலை விவகாரத்தில் Mittel தீர்வு

பிரான்ஸ் ஸ்டீல் தொழிற்சாலை விவகாரத்தில் தீர்வு -லட்சு மிட்டல் உறுதியால் அரசின் முடிவில் மாற்றம்
பாரீஸ்: பிரான்ஸ் நாட்டில் இயங்கி வரும் லட்சுமிட்டலுக்கு சொந்தமான ஆசெலர்மிட்டல் நிறுவன ஸ்டீல் தொழில்ற்சாலையை அந்நாட்டு அரசு தேசிய உடமையாக்கும் முயற்சி கைவிடப்பட்டிருக்கிறது.
ஆர்செலர் என்பது ஒருசர்வதேச ஸ்டீல் உற்பத்தி தொழிற்சாலை. இதனை 2006-ம் ஆண்டு வெளிநாடு வாழ் இந்தியரான லட்சுமி மிட்டலுக்கு சொந்தமான மிட்டல் ஸ்டீல் கையகப்படுத்தியது. இந்தத் தொழிற்சாலையின் ஃப்ளோரஞ்ச் யூனிட்டை மூடுவதற்கு மிட்டல் நிர்வாகம் முடிவு செய்திருந்தது. ஆனால் இதற்கு தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.http://tamil.oneindia.in/

தொழிற்சங்கங்களுக்கு ஆதரவாக பிரான்ஸ் அரசும் கருத்துகளைத் தெரிவித்து வந்தது. தொழிற்சாலையை தொடர்ந்து நடத்துவது குறித்து சனிக்கிழமைக்குள் லட்சுமி மிட்டல் முடிவு தெரிவிக்காவிட்டால் அரசு கையகப்படுத்தி தேசிய உடமையாக்கும் என்று அறிவித்தது.
இது இந்தியர்களுக்கு எதிரான ஒரு இனவெறிப் போக்காக விமர்சிக்கப்பட்டு வந்தது. இதனால் சிக்கல் வலுத்து வந்தது. இந்நிலையில் இன்று இப்பிரச்சனைக்கு சுமூக தீர்வு காணப்பட்டிருக்கிறது.
ஃப்ளோரஞ்ச் யூனிட்டில் 180 மில்லியன் யூரோவை அடுத்த ஐந்தாண்டுகளில் முதலீடு செய்யவும் அங்கு 629 தொழிலாளர்கள் தொடர்ந்து பணியில் நீடிக்கவும் லட்சுமி மிட்டல் எழுத்துப் பூர்வமாக ஒப்புக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து இந்த தொழிற்சாலையை தேசிய உடமையாக்கும் முடிவை கைவிடுவதாக அந்நாட்டு பிரதமர் பெர்னார்ட் அறிவித்திருக்கிறார்.

கருத்துகள் இல்லை: