புதன், 5 டிசம்பர், 2012

விஸ்வரூபம் கோடிகளில் உதைக்கிறது கணக்கு!!

கமலின் விஸ்வரூபம் படத்துக்கு கடைசி நேர சிக்கல்! கோடிகளில் உதைக்கிறது கணக்கு!!

Viruvirupu
ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள விஸ்வரூபம் படத்தை ரிலீஸ் செய்வதில், திரை மறைவில் கடும் சிக்கலை எதிர்நோக்குகிறார் கமலஹாசன் என்று சொல்லப்படுகிறது. விநியோகஸ்தர்கள் கைவிட்ட நிலையில், தமது சொந்த நிறுவனத்தின் மூலம் ரிலீஸ் செய்ய வேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
கமலஹாசனின் தயாரிப்பு நிறுவனம் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேனல் சார்பில் விஸ்வரூபம் படத்தை தமிழகம் மற்றும் பிற பகுதிகளில் வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டாலும், அதிகபட்சம் 400 தியேட்டர்களுக்கு மேல் கிடைக்காது என்கிறார்கள்.
சில தினங்களுக்கு முன்புவரை, இந்தப் படத்துக்கு ரூ 40 கோடி வரை விலை கொடுக்க தயாராக இருந்தனர் சில விநியோகஸ்தர்கள். ஆனால் படத்தின் தயாரிப்பு செலவு அதிகம் என்பதால், ரூ 100 கோடிக்கு விற்க வேண்டிய நிலையில் தயாரிப்பு தரப்பு இருந்தது. இதனால், துண்டு விழும் மீதி ரூ 60 கோடியை சரிக்கட்ட, படத்தை தியேட்டரில் ரிலிஸ் செய்யும் தினமன்றே தொலைக்காட்சியில் நேரடியாக வெளியிட விலை பேசினார் கமலஹாசன்.
இந்த முயற்சி பற்றி கதை வெளியே தெரிய வந்ததும், திரையரங்க உரிமையாளர்கள் கமலுக்கு ரெட்கார்ட் போட முடிவு செய்தனர். நிலைமை விபரீதமாவதை புரிந்து கமல் தன் டிவி ரிலீஸ் முடிவை கைவிட்டார்.
ஆனால் அதன்பின் படத்தை வாங்க தகுந்த விநியோகஸ்தர்கள் இல்லாத நிலை உருவாகிவிட்டது.

தமது சொந்த நிறுவனத்தின்மூலம் ரிலீஸ் செய்யும் முடிவில் உள்ள கமலஹாசன், முதல்கட்டமாக தமிழகத்தில் திரையரங்குகளை ஒப்பந்தம் செய்யும் வேலையை ஆரம்பித்துள்ளார் என்கிறார்கள். இதிலும் ஒரு சிக்கலாக, திரையரங்குகள் கிடைப்பது சுலபமாக இல்லை. ஒரு பிரபல விநியோகஸ்தரின் துணையுடன் தியேட்டர்களை ஒப்பந்தம் செய்யும் வேலைகள் நடைபெறுகின்றன.
மற்றொரு நடைமுறை சிக்கல், விஸ்வரூபம் படத்தில் அறிமுகப்படுத்தியுள்ள ஆரோ 3 டி தொழில்நுட்பம். இந்த வசதி கொண்ட அரங்குகள் மிகக் குறைவு. தற்போதுள்ள சூழ்நிலையில், அதிகபட்சம் 400 தியேட்டர்களுக்கு மேல் கிடைக்காது என்கிறார்கள்.

கருத்துகள் இல்லை: