திங்கள், 3 டிசம்பர், 2012

பழைய இரும்பு கொடுத்தால் 15 நிமிடத்தில் அரிவாள் "ரெடி

 ராஜஸ்தான் தொழிலாளர்கள் அசத்தல்
மடத்துக்குளம் :"நடமாடும் இரும்பு பட்டறை' நடத்தி, உடனுக்குடன் மலிவு விலையில் கத்தி, அரிவாளை ராஜஸ்தான் தொழிலாளர்கள் விற்பனை செய்கின்றனர். திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள், தனி குழுவாக வந்து, இரும்பு தொடர்பான பொருட்களை உடனுக்குடன் செய்து தருகின்றனர்.
இவர்கள், ஒரே இடத்தில் தங்கள் தொழிலை செய்யாமல், ஒவ்வொரு பகுதியாக செல்கின்றனர்.ராஜஸ்தான் தொழிலாளர்கள் கூறியதாவது:
எங்கள் மாநிலத்தில் போதிய வருவாய் கிடைக்கவில்லை. வேறு தொழிலும் தெரியாது; இதனால், ஒவ்வொரு பகுதியாக சென்று இரும்பு பட்டறை தொழிலில் ஈடுபட்டு வருகிறோம்.குறிப்பாக, விவசாயத்திற்கு பயன்படும் கலப்பை, கொத்து, மண்வெட்டி, கட்டுமானத்துக்கு பயன்படும் கடப்பாரை மற்றும் அரிவாள், கத்திகளை தயாரிக்கிறோம். மக்கள் கொடுக்கும் பழைய இரும்புகளில், அவர்களுக்கு தேவையான உபகரணங்கள் செய்து வழங்குவதற்கு, கூலியாக 60 ரூபாய் பெற்றுக்கொள்கிறோம். ஒரு பொருள் செய்ய 15 முதல் 30 நிமிடங்கள் ஆகும். ஆனால், எங்களின் உணவு தேவைக்குக்கு கூட கிடைக்கும் வருமானம் கட்டுபடியாகவில்லை.இவ்வாறு, தொழிலாளர்கள் கூறினர். http://www.dinamalar.com/

ஒரு வேளை உணவிற்காக இனம், மொழி, கலாசாரம் அனைத்தையும் மறந்து நாடோடிகளாக இவர்கள் வாழும் வாழ்க்கை, "உழைக்கும் எண்ணம் இருந்தால் போதும்; உலகத்தில் எங்கு வேண்டுமானாலும் சென்று வேலை செய்யலாம்' என்கிற கருத்தை பிரதிபலிப்பதாக இருந்தது

கருத்துகள் இல்லை: