வியாழன், 6 டிசம்பர், 2012

Punjab மகளை கிண்டல் செய்ததை தட்டி கேட்ட எஸ்ஐ சுட்டு கொலை

அமிர்தசரஸ்: மகளை கிண்டல் செய்ததை தட்டி கேட்டபோது ஏற்பட்ட தகராறில் உதவி எஸ்ஐ சுட்டு கொல்லப்பட்டார். பஞ்சாப் மாநிலத்தில் பலர் கண்முன்பு நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசின் காரின்டா போலீஸ் நிலையத்தில் உதவி எஸ்ஐயாக இருந்தவர் ரவீந்தர்பால் சிங். இவரது மகள், வங்கியில் வேலை பார்த்து வருகிறார். அவர் வேலைக்கு செல்லும்போதும் வரும்போதும் ரஞ்சித் சிங் ரானா என்ற வாலிபரும் அவரது நண்பர்களும் பின்தொடர்ந்து வந்து கிண்டல் செய்தனர். ஆபாசமாக பேசினர். ரஞ்சித், பஞ்சாபில் ஆளும் சிரோன்மணி அகாலி தளம் கட்சி பிரமுகர். தனக்கு சிலர் டார்ச்சர் கொடுப்பது பற்றி இளம்பெண் தந்தையிடம் கூறி அழுதார்.


‘இனிமேல் அவனை எங்கேயாவது பார்த்தால் என்னிடம் சொல்Õ என்று ரவீந்தர்பால் சிங் மகளை தேற்றினார். நேற்று மாலையில் சிஹார்தா பகுதியில் ஒரு ஜீப்பில் நண்பர்களுடன் ரஞ்சித் செல்வதை இளம்பெண் பார்த்தார். உடனே தந்தைக்கு தகவல் கொடுத்தார். போலீஸ் யூனிபார்மில் விரைந்து வந்த ரவீந்தர்பால் சிங், ஜீப்பை மடக்கினார். மகளை கிண்டல் செய்ததை தட்டிக் கேட்டார். அப்போது, அவர்களுக்குள் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ரஞ்சித், தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து ரவீந்தர் மற்றும் அவரது மகள் மீது சரமாரியாக சுட்டார். இதில் ரவீந்தர் மார்பில் குண்டு பாய்ந்தது. அவரது மகளுக்கும் காயம் ஏற்பட்டது.

துப்பாக்கி சூடு நடத்திய பின்னர் ரஞ்சித், நண்பர்கள் ஜீப்பில் தப்பினர். பலர் கண் முன்பு இந்த சம்பவம் நடந்தது. இதனால் கூட்டம் சேர்ந்துவிட்டது. பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் போலீசார் வந்து ரவீந்தர், அவரது மகளை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்ததில் ரவீந்தர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது. அவரது மகளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ரஞ்சித், அவரது நண்பர்கள் 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக இருந்த ரஞ்சித் இன்று காலை கைது செய்யப்பட்டார். இதற்கிடையில், ரஞ்சித்தை கட்சியில் இருந்து நீக்க¤யுள்ளதாக சிரோன்மணி அகாலி தளம் அறிவித்துள்ளது.<

கருத்துகள் இல்லை: