திங்கள், 3 டிசம்பர், 2012

கடுங்குளிரில் வெறுங்காலுடன் இருப்பவக்கு காலணி கொடுத்த போலீஸ் 340,000 Likes

லாரன்ஸ் டெபிரிமோ எனும், 25 வயதான இளைஞர், நியூயோர்க் காவல்துறையை சேர்ந்தவர். டைம்ஸ் கொயர் முன்னிலையில் கடுங்குளிரில் வெறும் பாதங்களுடன் அமர்ந்திருந்த வீடில்லாத முதியவர் ஒருவருக்கு ஒரு ஜோடி சப்பாத்துக்களை வாங்கிவந்து கொடுத்தார் இந்த பொலிஸ்காரர். ஒரு சுற்றுலா பயணி தனது ஸ்மார்ட்ஃபோனில் இதனை படம்பிடித்து மறுநாள் பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்தார்.
மறுநாள் நியூயோர்க் காவல்துறையின் உத்தியோக பேஸ்புக்கிலும் பதிவேற்றப்பட்டது. சமூகவலைத்தள பதிவாளர்களின் இதயத்தை தொட்டுவிட்ட இப்புகைப்படம், மறுநாளே 340,000 Likes, 90,000 Shares, 22,000 Comments என காண்பித்தது. அநேகமானோர் இந்த இளம் போலீஸ்காரரை பெருமைப்படுத்தி காமெண்ட் அடிக்க, ஒரு சிலர் இது திட்டமிட்டு எடுக்கப்பட்ட புகைப்படமாக இருக்கலாமென்றனர்.


மேலும் சிலர் இது மொத்த காவல்துறைக்கும் பொருந்தாது. அந்த இளைஞரின் விதிவிலக்கான நடவடிக்கை இது என்றனர். எப்படியாயினும் இந்தபுகைப்படம் இணையத்தளங்களில் அதிகம் பார்வையிடப்பட்ட புகைப்படங்களில் ஒன்றாக மாற்றம் பெற்றுள்ளது.


கருத்துகள் இல்லை: