ஞாயிறு, 2 டிசம்பர், 2012

எட்டாக்கனியாக ரயில் பயணம் அடையாள அட்டை கேட்டு ரயில்வே அடம்

ரயில்களில் முன்பதிவு செய்து செல்லும் பயணிகள், அசல் அடையாள ஆவணங்களை எடுத்துச் செல்ல தவறினால், அபராதம் விதிக்கப்படும்' என, ரயில்வே நிர்வாகம் அடம் பிடிப்பதால், ரயில் பயணம் இனி எட்டாக்கனியாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.
ரயில்களில் முன்பதிவு செய்யும் பயணிகள், அசல் அடையாள ஆவணங்களை கொண்டு செல்ல வேண்டும் என, ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது. இந்த உத்தரவு, நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதன்படி, முன்பதிவு செய்து பயணம் செய்யும் பயணிகள், "பான்' அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, கிரெடிட் கார்டு, பாஸ்போர்ட், புகைப்படத்துடன் கூடிய, தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின், சேமிப்புக் கணக்கு புத்தகம், ஆதார் அட்டை மற்றும் மத்திய, மாநில அரசுகள், பஞ்சாயத்து, நகராட்சி அமைப்புகள், பொதுத் துறை நிறுவனங்கள் வழங்கிய அடையாள போன்றவற்றில், ஏதாவது ஒன்றின் அசல் ஆவணத்தை, தங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டும். இல்லை எனில், அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். சிக்கல்:இந்த உத்தரவு, ரயில் பயணிகளுக்கு, பெரும் சிக்கலை ஏற்படுத்தும் வகையில் அமைந்து உள்ளது. இப்புதிய உத்தரவு, நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது, பெரும்பாலான பயணிகளுக்கு தெரியாது. காரணம், இதுகுறித்து போதிய விளம்பரம் செய்யப்படவில்லை. டிக்கெட்டில் மட்டும், விவரம் குறிப்பிடப் பட்டு உள்ளது.ஆனால், டிக்கெட் வாங்கும் பெரும்பாலான பயணிகள், டிக்கெட்டில் உள்ள அனைத்து விவரங்களையும், பொதுவாக படித்து பார்ப்பது இல்லை. தாங்கள் செல்ல வேண்டிய ஊரின் பெயர், தேதி, வண்டியின் பெயர் போன்ற, ஒருசில விவரங்களை மட்டுமே பார்க்கின்றனர்.முன்பதிவு செய்யும் போது, டிக்கெட் கவுன்டரில் உள்ள ஊழியர்களும் இதுகுறித்து, பயணிகளுக்கு எடுத்துக் கூறுவது இல்லை. அறிவிப்பு விளம்பரங்களும், முன்பதிவு மையங்களில் வைக்கப்பட வில்லை. குழப்பம்:< அசல் அடையாள ஆவணங்களை கொண்டு செல்லாத பயணிகளிடம், அபராதத் தொகை வசூலிக்கப்படும் என, ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.    யாருக்கு தெரியும் இனி போக போக டிக்கெட் வாங்க பாஸ்போர்ட் வேண்டும். ரயிலில் ஏற விசா வேண்டும் என்று கேட்டாலும் ஆச்சரியம் இல்லை ???  http://www.dinamalar.com/

ஆனால், எவ்வளவு தொகை வசூலிக்கப்படும், குழந்தைகளுக்கும் அசல் அடையாள ஆவணங்கள் வேண்டுமா என்பன போன்ற விவரங்கள், தெளிவாக குறிப்பிடவில்லை. இதனால், பயணிகள் மத்தியில் குழப்பம் நிலவுகிறது.

பயணிகள் சிலர் கூறியதாவது:குழந்தைகளுக்கு அடையாள அட்டை ஏது? பள்ளி மாணவர்கள், பள்ளி நிர்வாகத்தால் வழங்கப்பட்ட, புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை கொண்டு வர வேண்டும்; படிக்கும் பள்ளி, அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும் என, ரயில்வே அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.பெரும்பாலான பள்ளிகளில் வழங்கப்படும் அடையாள அட்டையில் மாணவர்களின் பெயர், வகுப்பு, வரிசை எண் ஆகியவை மட்டுமே குறிப்பிடப் பட்டு இருக்கும். மற்றபடி, அந்தப் பள்ளி அரசு அங்கீகாரம் பெற்றதா என குறிப்பிடப் பட்டு இருக்காது. இதனால், ரயிலில் பரிசோதகர்கள் சோதனை செய்யும் போது, குறிப்பிட்ட மாணவருக்கு அபராதம் விதிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

அடையாள அட்டை பெறுவது குதிரைக் கொம்பு:



அரசு வழங்கும் அடையாள அட்டைகள் நாட்டில் உள்ள அத்தனை பேரிடமும் இருக்கும் என தெரியாது. அவர்கள் ரயிலில் பயணம் செய்ய வேண்டும் எனில், புதிதாக விண்ணப்பித்து பெற வேண்டும். தற்போதைய நிலையில், அரசாங்கத்திடமிருந்து, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்களை பெறுவது, குதிரைக் கொம்பாக உள்ளது.அப்படி வாங்கினாலும், அதில் ஏகப்பட்ட எழுத்துப் பிழைகள் உள்ளன. வாக்காளர் அடையாள அட்டையில், ஆண் பெயருக்கு பெண் பெயரும், பெண் பெயருக்கு ஆண் பெயரும் இடம் பெற்றிருக்கும். சிலருக்கு, "இனிஷியல்' மாறி இருக்கும். இதுபோன்ற, அடையாள அட்டைகளை கொண்டு செல்லும் போதும் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படும்.ஏற்கனவே, "தட்கல்' டிக்கெட் அறிமுகப்படுத்தப்பட்ட போது, வெளிப்படையாக பயணிகளுக்கு பயனுள்ளதாக இருந்த போதிலும், மறைமுகமாக கட்டணம் உயர்வுக்கு வழி வகுத்தது. அதேபோல், இந்த அபராத விதிப்பு முறையும் மறைமுக கட்டண உயர்வுக்கு வழி வகுத்து உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

பல குழப்பங்ளைக் கொண்ட, ரயில்வேயின் இந்த அறிவிப்பால், ரயில் பயணம் எட்டாக்கனியாகி விடும் நிலை ஏற்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை: