வியாழன், 8 செப்டம்பர், 2011

காப்பகத்தில் செக்ஸ் கொடுமை! மாணவர்கள் அதிர்ச்சி தகவல்!


நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே சின்னம்மாள் புரத்தில் உள்ள குழந்தைகள் காப்பகம் ஒன்றில் இங்கிலாந்து பாதிரியார் ஜோனகன் ராபின்சன் முறைகேடுகள் செய்தார், பாலியல் தொந்தரவு கொடுத்தார், அதுபற்றி வழக்கு பதிவானதையும, விசாரணைக்குப் பின்பு அதிகாரிகளால் அந்த காப்பகம் மூடப்பட்டிருந்ததையும் 06.09.2011 அன்று நக்கீரன் இணையதளம் ஏற்கனவே வெளியிட்டிருந்தது.
இதற்கிடையே அந்த காப்பகத்தில் இருந்து மீட்கப்பட்ட குழந்தைகள் தங்களுக்கு ஏற்பட்டதை விரிவாகவே விசாரணை அதிகாரிகளிடம் கூறியுள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ந்துபோன விசாரணையில் இருக்கும் அநத் காவல் அதிகாரி நம்மிடம் பதைப்பதைப்போடு அந்த பிஞ்சுகள் சொன்னதை கூறினார்.
இந்த காப்பத்தில் இருக்கும்போது, சில வெளிநாட்டினர் வருவார்கள். அவர்களுடன் சேர்ந்து இரவு நேரங்களில் எங்களுக்கும் குளிர்பானங்கள் கொடுத்தார்கள். சாப்பிட்டவுடனேயே நாங்கள் மயக்கம் அடைந்துவிடுவோம். அதன்பிறகு என்ன நடந்தது என்றே எங்களுக்கு தெரியாது என்று அந்த வாக்குமூலம் கொடுத்ததை கேட்டு, நாங்கள் பதறிப்போனோம் என்கிறார் அந்த அதிகாரி.
தற்போது அந்த காப்பகத்தை நடத்தி வரும் நில நிர்வாகிகள், குழந்தைகளின் பெற்றோர்களிடம் காப்பகத்திற்கு எதிராக ஏதேனும் புகார் கொடுத்தால் உங்களுக்கு கொடுக்கப்படும் உதவிகள் நிறுத்தப்படும் என்று கூறிய தகவல் போலீஸ் வரை செல்லவே, போலீஸ் அந்த நிர்வாகிகளை கண்காணிக்க தொடங்கி இருக்கிறது.
மேலும், அறக்கட்டளையின் உறுப்பினர்கள் வங்கிக் கணக்குகள் மூலம் செய்த வரவு செலவு மற்றும் அந்நிய செலாவணி போன்றவைகளை தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே மும்பை குழந்தைகளிடம் பாலியல் தொந்தவு கொடுத்ததாக மும்பை உயர்நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு, தற்போது சிறையில இருக்கும் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த டங்ஸ்சன் அலெக்ஸ்ஸாண்டர் இந்த காப்பகத்தில் வந்து தங்கியிருந்தது குறித்தும், அவரது வழக்கு தொடர்பாக இங்கிருந்து பணப்பட்டுவாடா எதுவும், நிர்வாகிகள் மூலம் அனுப்பப்பட்டுள்ளதா என்பது பற்றி போலீசும், கண்காணிப்பு குழுவும் ஆய்வு செய்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: