- கொழும்பிலிருந்து ஆர்.கே.ராதாகிருஷ்ணன்
ஸ்ரீலங்காவுக்கு அவசரகாலச் சட்டங்கள் ஒன்றும் புதியனவல்ல. அது சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து அடிக்கடி வன்முறைகளையே கண்டு வந்துள்ளது. எப்படியாயினும் ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜே.வி.பி) வன்முறைத் தொல்லைதான் இத்தகைய அடக்குமுறை நடவடிக்கையை முதன்முதலில் ஏற்படுத்த வழி கோலியது. 1970களின் ஆரம்பத்திலிருந்து ஏற்பட்ட ஒவ்வொரு புதிய பிரச்சினைக்கும் அரசாங்கம் எற்கனவே உள்ள சட்டங்களை மீறிச்செல்ல முயன்றதுடன், மேலும் பல அரக்கத்தனமான சட்டங்களையும் இயற்றியது. அநேகமாக இவை ஒன்றுக்கொன்று முரண்பட்டதாகவும் வரையறைத் தெளிவற்றதாகவும் இருப்பதால் அடிப்படையான தனிநபர் உரிமைகளைக்கூட அனுமதிக்கவில்லை, என்று மனித உரிமை அமைப்புகளால் எள்ளி நகையாடப்பட்டன. சில வழக்குகளில் இந்தச் சட்டங்கள் பாதகாப்பு படையினருக்கு தண்டனை வழங்காமல் தண்டனையிலிருந்து விதிவிலக்களிக்கும் போர்வையாக உள்ளன. நான்காம் கட்ட ஈழப்போர் ஆரம்பித்த அந்தச் சந்தர்ப்பத்தில் கிட்டத்தட்ட 20 புதிய அவசரகால சட்ட விதிகளே இருந்தன. எல்.ரீ.ரீ.ஈ யினரைப்போல இரக்கமற்ற கொடிய பயங்கரவாத இயக்கத்தைக் கையாள சாதாரண சட்டங்கள் சக்தியற்றவை என அரசாங்கம் வாதிட்டது.சட்ட அமைப்புகளிலுள்ள ஓட்டைகளை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி நிபுணத்துவம் வாய்ந்ததாக மாறிவிட்ட எல்.ரீ.ரீ.ஈயிற்கு எதிராகப் போராடும் சீருடைதரித்தோருக்கு சட்டபூர்வ தண்டனையிலிருந்து விலக்களிக்கப்படத் தக்கதாக சில விதிகள் அவசியம் என்று அது சொன்னது. ஆனால் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் அவசரகால சட்ட விதிகள் தவறான மற்றும் திறந்த வழியில் அமைக்கப்பட்டவை எனக்கூறினார்கள். ஏனெனில் அவற்றில் ஏராளமான விதிகள் அங்குள்ளன. ஸ்ரீலங்கா மக்களுக்கு இந்தச் சட்டங்களையும் ஒருநாள் அவை தங்களுக்கு எதிர்மாறாகத் திரும்பக்கூடும் என்பதையும் விளங்கிக் கொள்வது கடினமாகத்தான் இருக்கும் என அவர்கள் வாதிட்டார்கள். (மேலும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக