சனி, 10 செப்டம்பர், 2011

தி.மு.க., கொள்கை விளக்க குறிப்பை காப்பியடிக்கின்றனர்

சென்னை: "தி.மு.க., ஆட்சியில், கொள்கை விளக்கக் குறிப்புகளில் என்ன எழுதியிருந்தோமோ, அதை ஈயடிச்சான் காப்பியாக, அ.தி.மு.க., ஆட்சியின் கொள்கை விளக்கக் குறிப்பாக சொல்லுகின்றனர்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுகுறித்து, நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: கடந்த தி.மு.க., ஆட்சியில், 2010 - 11ம் ஆண்டின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் கொள்கை விளக்க குறிப்பில், "நாட்டு நலப் பணித் திட்டத்தில் இந்திய நாட்டிலேயே அதிகமான தொண்டர்களை கொண்டிருப்பது தமிழ்நாடே (3,70,018). மாநிலத்தில், 98,790 மாணவர் மற்றும் மாணவியர், தேசிய மாணவர் படையில் உள்ளனர்' என்று உள்ளது. இந்த விவரங்கள், அமைச்சர் சி.வி.சண்முகம் இந்த ஆண்டு தந்துள்ள கொள்கை விளக்கக் குறிப்பில், மாணவர்களின் எண்ணிக்கையைக் கூட மாற்றாமல், அப்படியே இடம் பெற்றுள்ளது. மேலும், தி.மு.க., ஆட்சியின் கொள்கை விளக்க குறிப்பில் இடம்பெற்றுள்ள பல பகுதிகள் அப்படியே உள்ளன. கொள்கை விளக்க குறிப்பை அமைச்சர் சரிபார்க்காததன் விளைவா இது, இல்லை அதிகாரிகளின் தந்திரமா எனத் தெரியவில்லை. இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: