வேலூர் மாவட்டம் ஆற்காடு நவ்ஷாத் நகரை சேர்ந்த ரமேஷ் குமாரின் மனைவி உஷாராணி (29). இவர் 06.09.2011 அன்று பகல் 12.30 மணியளவில் வேலூர் சென்னை தேசிய நெடுஞ்சாலை பெருமுகை அருகே சரமாரியசிக குத்தி கொலை செய்யப்பட்டார். இதையறிந்த சத்துவாச்சாரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.இதற்கிடையில், வேலூர் தண்டபாணி திருமண மண்டபம் அருகே வாலிபர் ஒருவரை பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். படுகாயமடைந்த வாலிபரை அங்கிருந்தவர்கள் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், கத்தியால் குத்தப்பட்டவர் ஆற்காடு கண்ணமங்கலம் கூட்ரோடை சேர்ந்த ரமேஷ்பாபு (36), எண்ணெய் வியாபாரி என்று தெரிய வந்தது. இந்த இரு சம்பவங்களிலும் ஒரே கும்பல் ஈடுபட்டிருப்பதும் தெரிய வந்தது.உஷாராணிக்கும் எண்ணெய் வியாபாரி ரமேஷ்பாபுவுக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருந்தது. இதையறிந்த ரமேஷ்குமார், மனைவியை கண்டித்தார். ஆனால், அதை உஷாராணி மதிக்கவில்லை.
06.09.2011 அன்று வேலூரில் உஷாராணியும் ரமேஷ்பாபுவும் சந்திக்கும் விஷயம் அறிந்த ரமேஷ்குமார், தனது கம்பெனியில் வேலை செய்யும் ராஜசேகரன் என்பவரை அழைத்துக் கொண்டு பைக்கில் வேலூர் வந்தார். முதலில் ரமேஷ்பாபுவை வெட்டிய அவர்கள், அதன் பின்னர் உஷாராணியை விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர் என விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி ரமேஷ்பாபு 07.09.2011 அன்று அதிகாலை இறந்தார். இந்த இரட்டை கொலை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ரமேஷ்குமார் மற்றும் ராஜசேகரனை தேடி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக