வெள்ளி, 9 செப்டம்பர், 2011

நடிகர் நடிகைகள் டைரக்டர்கள் சம்பளம் வாங்குவதில் போட்டி:பஞ்சு அருணாசலம் வேதனை


சூப்பர் டீம் சினிமாஸ் தயாரிக்கும் நந்தா நந்திதா' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது. பாடல்களை பட அதிபர் பஞ்சு அருணாசலம் வெளியிட, பட அதிபர் கேயார் பெற்றுக்கொண்டார். நடிகர் நாசர், பட அதிபர் கேயார், டைரக்டர் ஜனநாதன், இசையமைப்பாளர் எமில், ஒளிப்பதிவாளர் சீனிவாசரெட்டி, படத்தின் கதாநாயகன் ஹேமச்சந்திரன் ஆகியோரும் பேசினார்கள். பட அதிபர்கள் எம்.கோவிந்தராஜ், எம்.நாகராஜ், ஜி.பூபால் ஆகிய மூவரும் வரவேற்றார்கள். டைரக்டர் ராம்ஷிவா நன்றி கூறினார்.
விழாவில், பஞ்சு அருணாசலம் பேசியதாவது:
முன்பெல்லாம் வருடத்துக்கு 60 படங்கள்தான் திரைக்கு வரும். அதில், 30 படங்கள் நஷ்டம் அடையாது. 20 படங்கள் நூறு நாட்கள் ஓடும். 5 படங்கள் வெள்ளிவிழா ஓடும். 5 படங்கள் மட்டும் நஷ்டம் அடையும். ஒரு படம் தயாரிக்க முப்பதாயிரத்தில் இருந்து நாற்பதாயிரம் ரூபாய்தான் ஆகும். முப்பது அல்லது நாற்பது நாட்களில் படம் தயாராகி விடும்.
ஆனால் இப்போது, வருடத்துக்கு 160 படங்கள் திரைக்கு வருகின்றன. அதில், மூன்று அல்லது நான்கு படங்கள்தான் ஓடுகின்றன. ஒரு படம் தயாரிக்க 80 ல் இருந்து 120 நாட்கள் வரை ஆகிறது. முன்பு திறமைக்கு மதிப்பு இருந்தது. இப்போது பணத்துக்குத்தான் மதிப்பு இருக்கிறது. பணத்தை வைத்துதான் வெற்றி நிர்ணயம் செய்யப்படுகிறது. போலித்தனமான வெற்றிகள் அதிகமாகி விட்டன.<
அன்னக்கிளி' படத்துக்கு இசையமைக்க இளையராஜாவுக்கு நான் கொடுத்த சம்பளம் வெறும் மூவாயிரத்து ஒன்றுதான். அவர், 100 படங்களுக்கு இசையமைத்த பின்புதான் ஒரு லட்சம் சம்பளம் வாங்கினார்.
ஆனால் இப்போது, படம் இரண்டு வாரம் ஓடி கொஞ்சம் வசூல் செய்தால் போதும். அந்த படத்தின் கதாநாயகன், கதாநாயகி, டைரக்டர் தங்களின் அடுத்த படத்துக்கு 75 லட்சத்தில் இருந்து 80 லட்சம் வரை சம்பளம் கேட்கிறார்கள்
யார் திறமைசாலி என்பதில் போட்டி இல்லை. யார் அதிக சம்பளம் வாங்குவது? என்பதில்தான் இப்போது போட்டி இருந்து வருகிறது.'' இவ்வாறு பஞ்சு அருணாசலம் பேசினார்.


நடிக நடிகையர்களை உசுப்பேத்தி உசுப்பேத்தி அதிகளவு பணம் வாங்க வைத்தவர்களே இந்த ரசிகர்கள்தான்.எல்லாவற்றையும் விட முட்டள்தனமானது நடிகர்களின் பாணர்களுக்கு பால் ஊற்றுவது.நடிக நடிகைககள் எந்தவிதத்தில் முக்கியமானவர்கள்.ஒரு விவசாயையும் நடிகனையும் தராசில் வைத்தல் விவசாயின் பக்கமே தராசு சாயும். இந்த உலகில் மதிக்கப்பட வேண்டியவன் கையொப்பம் வாங்கப்பட வேண்டியவன் விவசாயியே.சன் தொலைக்காட்சியில் ஆக ஓகோ என்று விளம்பரம் செயப்படும் மன்காத்தாவே ஒரு வெற்று போத்தல்.புதிய அறிமுகங்களை போட்டு படங்களை எடுங்கள்.தமிழகம் எங்கும் நடிக்கக்கூடிய இளம் தலைமுறையினர் நிறையவே இருக்கின்றார்கள்.

கருத்துகள் இல்லை: