சனி, 10 செப்டம்பர், 2011

சீப் மான்அம்மா’வின் செல்லப் பிள்ளை இயக்கம்

நாம் தமிழர், ‘அம்மா’வின் செல்லப் பிள்ளை இயக்கம் என்று ஒரு பேச்சு நீண்ட நாட்களாகவே அரசியல் வட்டாரத்தில் அடிபட்டுக் கொண்டிருக்கிறது. அதற்குத் தகுந்தாற்போல போன ஆட்சியின் போதெல்லாம் நரம்பு புடைக்க ஆவேசப் பேச்சு ஆற்றிய சீமான், இப்போதெல்லாம் அரசுக்கு ‘கோரிக்கை’ வைப்பதோடு சரி. ராஜீவ் கொலை வழக்கில் 3 பேரின் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று தமிழக அரசு சட்டமன்றத்தில் இயற்றிய தீர்மானத்தை வரவேற்று வேலூரிலிருந்து சென்னைக்கு நடைப்பயணம் மேற்கொள்ளவிருப்பதாக சீமான் அறிவித்திருந்தார். ஆனால் அதெல்லாம் தேவை இல்லை என்று சொல்லி அவரைக் கைது செய்திருக்கிறார்கள் காவல்துறையினர். இந்த நடைப் பயண ஸ்டண்ட் மேலிடத்திலிருந்து வந்த அட்வைஸ்தான் என்றும் பேச்சு அடிபடுகிறது.
‘இதுவரை ஆட்சியில் இருந்தவர் பேசினார். அம்மா செய்து காட்டினார். இவர்களைக் காப்பாற்ற ரயில் மறியல், ஆளுநர் மாளிகை முற்றுகை, ஆர்ப்பாட்டம், போராட்டம் எல்லாம் செய்தோம். நம்மை அவர் கைது செய்யவில்லை. நசுக்க முற்படவில்லை. நம்மை அழிக்க முற்படவில்லை. நம்மை மதித்தார். ராஜபக்சே மீது போர்க்குற்றம் சுமத்தி பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதை மத்திய அரசு விரும்பவில்லை!’ என்று பேசியிருக்கிறார் சீமான்.   கூடவே, ‘போன ஆட்சியில் 5 முறை என்னைக் கைது செய்தார்கள். சட்டத்திற்கு உட்பட்டு நானும் கைதானேன். கருணாநிதி போல கைதுக்கு பயந்து ஒருமுறை கூட நான் கத்தியதில்லை!’ என்றும் சொல்லியிருக்கிறார். ஐயோ..ஜால்ரா தாங்கலே

கருத்துகள் இல்லை: