4.5 கோடி ரூபாயும் 30 கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டிருக்கிறது. இதெல்லாம் கைக்காசு.., ரெட்டியின் 7 நட்சத்திர வாழ்க்கையோடு ஒப்பிடும் போது துபாய் ஷேக்கெல்லாம் பிச்சை வாங்க வேண்டும்.
4.9.211 அன்று நடந்த விஜய் டி.வியின் நீயா நானா நிகழ்ச்சியில் அண்ணா ஹசாரே ஊழல் மேளா குறித்து விவாதம் நடத்தினார்கள். அதில் ஆர்.எஸ்.எஸ் அம்பி அரவிந்தன் ( முன்னாள் காலச்சுவடு ஆசிரியர், முன்னாள் இந்தியா டுடே, ) என்பவர் ரொம்பவும் ஜனநாயகமாக அண்ணாவுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டிருந்தார். இவர்களைப் போன்ற கொள்கைச் சிங்கங்கள் முதலில் எடியூரப்பா, ரெட்டி பிரதர்சு கேங் பற்றி கருத்துச் சொல்லட்டும். அவர்களை கண்டித்து களமிறங்கட்டும். பிறகு நம்மைப் போன்ற பாமரர்களுக்கு ஊழல் ஒழிப்பு பற்றி வகுப்பெடுக்கட்டும்.
Read More
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக