புதன், 8 செப்டம்பர், 2010

தங்கதுரை, குட்டிமணி, ஜெகன்... ஈழத் தமிழர் போராட்ட வரலாற்றில் இந்த மூன்று பெயர்களையும் யாரால் மறக்க முடியும்?

(ஆனந்த விகடனில் வந்த செய்திக் கட்டுரையை வாசித்த போது ஏற்பட்ட உந்துதலால் எழுதப்பட்ட கட்டுரை)
1983 ம் ஆண்டு வெலிகடையில் முக்கிய போராளிகள் அடைக்கப்பட்டிருந்த காலம். ஜேஆர் அரசின் இனவாதம் உச்சத்தில் நின்று கூத்தாடிக்கொண்டிருந்த நேரம். ‘போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம்’ என்று சமாதானத்தை இழுத்து போர் முரசு கொட்டிய காலம். சிறைகளுக்குள் அடைபட்டிருக்கும் தமிழ் போராளிகளை என்னவும் செய்யலாம் சர்வதேசத்திற்கு எதுவும் தெரியாமல் மறைக்கப்படக் கூடிய காலம். சிறைச்சாலைகளுக்குள் கொலைகளை நிகழ்த்தி இன அழிவுச்சங்காரத்தை ஏற்படுத்தும் அனுமதிகளை சிறைச்சாலை அதிகாரிகள் வழங்கியிருந்த காலம். இதற்கான எழுதப்படாத அதிகாரங்களை வழங்கியிருந்த காலம்.
இவ்வாறான கோரப்பிடியில் சிக்கியிருந்த தமிழ் அரசியல் கைதிகள் ஜெயக்காந்தனின் கூற்றுப் போல் ‘சிறைகள் பூட்டப்படுவன மட்டுமல்ல அவை திறக்கப்படவும் வேண்டும் அன்றேல் தகற்கப்பட்டுவிடும்’ என்பதற்கேற்ப வெலிக்கடை சிறையுடைப்பை நிகழ்த்த ஆயத்தங்கள் மேற்கொள்பட்டிருந்த நேரம். இவ்வாறான கோரப்பிடியில் சிக்கியிருந்த தமிழ் அரசியல் கைதிகள் ஜெயக்காந்தனின் கூற்றுப் போல் ‘சிறைகள் பூட்டப்படுவன மட்டுமல்ல அவை திறக்கப்படவும் வேண்டும் அன்றேல் தகற்கப்பட்டுவிடும்’ என்பதற்கேற்ப வெலிக்கடை சிறையுடைப்பை நிகழ்த்த ஆயத்தங்கள் மேற்கொள்பட்டிருந்த நேரம்.
இலங்கையின் எப்பாகத்திலும் இலங்கை இரா ணுவ வீரன் ஒருவருக்கு தமிழ் மக்களால் ‘நகக் கீறல்’ ஏற்பட்டாலும் இதனைக் காரணம் காட்டி சிறைக் கைதிகளை கொல்ல காத்திருந்த நேரம். இப்படியான வேளைகளில் அரச படைகளுக்கு எதிரான தாக்குதல்கள் தவிர்கப்ப ட்டிருந்தல் வேண்டும். இதனையாரும் அறிவுறுத்தாமலும் செய்திருக்க வேண்டும். இவற்றிற்கு மேலாக தாக்குதல்களை செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருந்த வேளை. திருநெல்வேலியில் கண்ணிவெடித்தாக்குதலால் 13 இராணுவத்தை கொல்லும் அவசியம், அவசரம் ஏன் ஏற்பட்டிருந்தது.
இலங்கை இராணுவத்தினால் மிகத் தீவிரமாக தேடப்பட்ட நிலையில் பாதுகாப்பு தேடி இந்தியாவிற்கு படகு மூலம் தப்பிச் செல்ல மணற்காட்டில் படகுக்கு தங்கத்துரை, குடடிமணி போன்றோர் காதிருப்பது தம்பிக்கு மட்டுமே தெரியும். இவரைத் தவிர வேறுயார் அரசபடைகளுக்கு தகவல் கொடுத்திருக்க முடியும். தனது ஏகபோகத்தை நிலைநாட்ட ஆரம்ப காலத்தில் பிரபாகரன் எடுத்துக் கொண்ட முயற்சிகளின் ஒன்றான காட்டிக் கொடுப்பு இது. இவ்விடயம் தங்கத்துரை, குட்டிமணி போன்றோருக்கு தெரிந்துவிட்டது. சிறையிலிருந்து இவர்கள் மீண்டால் தனது கதி அதோ கதிதான் என்பதால் சிறைக்குள் வைத்து கொன்ற நிகழ்வுகளே 13 இராணுவத்தை கொலை செய்து வெலிகடைப் படுகொலைகளை தூண்டிய சம்பவம் ஆகும்.
மட்டக்களப்பு சிறையுடைப்பு நிகழ்வு மூலம் 50 இற்கு மேற்பட்ட போராளிகள் காப்பாற்றப்பட முடியுமானால், தனி ஒருவனாக பனாகொடை மகேஷ்வரன் பனாகொடை முகாமிலிருந்து தப்ப முடியுமானால் இந்த இரு சிறைச் சம்பவங்கள் நடைபெறுவதற்கு முந்தைய பாதுகாப்பு குறைவான நிலையிலிருந்த வெலிக்கடை சிறைக் கைதிகள் மீட்பு சாத்தியமாக்கப்பட்டிருக்கலாம். தங்கத்துரை அன்று சிறை மீட்கப்பட்டிருந்தால் பிரபாகரன் என்ற மனிதகுல விரோதி 1980 களின் நடுப்பகுதியிவேயே முடமாக்கப்பட்டு நடைபிணமாக்கப்ப ட்டிருப்பான். 25 வருடங்கள் களித்து முள்ளிவாய்காலில் தன்னை காப்பாற்ற கவசமாக்கப்பட்ட பொதுமக்கள் என்ற மனித வளையம் தவிர்க்கப்பட்டிருக்கும். இறுதி சண்டையில் அநியாயமாக பலியாக்கப்பட்ட பொதுமக்களின் உயிர்கள் காப்பாற்றபட்டிருக்கலாம். 13 இராணுவத்தின் மரணம் பல ஆயிரம் உயிர்களின் மரணத்தை உறுதிப்படுத்த ஏதுவாக இருந்த பிரபாகரனே முதன்மையான போர்க்குற்றவாளி. சாகாவரம் பெற்றிருக்கும் அவனை இழுத்துவாருங்கள். அவனுக்கு மக்கள் முன்னே மக்களே தண்டனை வழங்கட்டும்.
மே 2009 அன்று முள்ளிவாய்காலில் முழந்தாள் இடும் நிகழ்வு 26 வருடங்களுக்கு பின்பு ஏற்படும் என்று பிரபாகரன் எதிர்பார்த்து இருக்க மாட்டான். கிட்லரும் இதே போல் மனித குலத்தை அழித்துகொண்டிருந்த போது எண்ணியிருக்கவில்லை. தனக்கு சாவு வரும் என்று. கிட்லரின் முடிவே இன்று பிரபாகரனுக்கும் ஏற்பட்டிருக்கின்றது.
எவை எப்படியிருப்பினும் வெலிக்கடைப் படுகொலை என்ன சூழ்நிலையால் தூண்டப்பட்டு எப்படி நிகழ்த்தப்பட்டிருந்தாலும் இது எந்தவகையிலும் ஏற்புடையதல்ல. இப்படுகொலைகளுக்கு அன்றைய இலங்கை அரசு பதில் சொல்லியே ஆகவேண்டும். இது முள்ளிவாய்காலில் இடம் பெற்ற பொது மக்கள் மரணத்திற்கும் பொருந்தும்.
(சாகரன்)

கருத்துகள் இல்லை: