வியாழன், 9 செப்டம்பர், 2010

ஆதரவு 161 - எதிர் 17 - மூன்றில் இரண்டுக்கும் மேலதிகமாக 11

ஆதரவு 161 - எதிர் 17 - மூன்றில் இரண்டுக்கும் மேலதிகமாக 11
அரசியலமைப்பின் 18வது திருத்தச் சட்ட மூலம் பாராளுமன்றத்தில் நேற்று (08) மூன்றிலிரண்டு பெரும்பான்மைக்கும் கூடுதலான வாக்குகளால் நிறைவேற்றப் பட்டது. சட்டமூலத்திற்கு ஆதரவாக 161 வாக்குகளும் எதிராக 17 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதன்படி 144 மேலதிக வாக்குகளால் 18வது திருத்தம் சபையில் நிறைவேறியது. சட்ட மூலத்தின் இரண்டாவது வாசிப்பு இவ்வாறு நிறைவேற்றப்பட்டதும் குழுநிலையில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாக சபை முதல்வர் நிமல் சிறிபால டி சில்வா அறிவித்தார். அதன்படி, புதிய சரத்துகளும் உள்ளடக்கப் பட்டுக் குழுநிலையிலும் அங்கீகரிக்கப்ப ட்டது. அதனையடுத்து மீண்டும் மூன்றாவது வாசிப்பை நிறைவேற்ற சபை இணங்குகிறதா என சபாநாயகர் சமல் ராஜபக்ஷ வினவினார். அப்போது பெயர் கூறி வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் சபாநாயகரைக் கேட்டுக்கொண்டார். அதற்கமையவும் பெயர் கூறி வாக்கெடுப்பு நடத்தி மூன்றிலிரண்டு பெரும்பான்மைக்கும் கூடுதலான ஆதரவு டன் திருத்தச் சட்டமூலம் நிறைவேற்ற ப்பட்டது. (மேலும்

கருத்துகள் இல்லை: