புதன், 8 செப்டம்பர், 2010

ஓரினச் சேர்க்கையால் பாதிக்கப்பட்ட பாதிரியார்

திருவனந்தபுரம் : கேரள கத்தோலிக்கத் திருச்சபையில், பாதிரியார்களிடையே இருக்கும் ஓரினச் சேர்க்கைப் பழக்கம், ஒழுக்கக் கேடுகள் போன்ற குற்றச்சாட்டுகளை மையமாக வைத்து, பாதிக்கப்பட்ட பாதிரியார் ஒருவர், தன் சுயசரிதையை புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார். இதனால் கேரள கத்தோலிக்கர்கள் மத்தியில் மீண்டும் பரபரப்பு எழுந்துள்ளது.

கடந்த ஆண்டு, ஜெஸ்மி என்ற கன்னியாஸ்திரி, கேரள கத்தோலிக்கத் திருச்சபையில் இளம் கன்னியாஸ்திரிகளுக்கு நிகழ்த்தப்படும் பாலியல் கொடுமைகளைப் பற்றியும், அதில் தான் பாதிக்கப்பட்டது பற்றியும் "ஆமென்' என்ற புத்தகம் எழுதி பரபரப்பைக் கிளப்பினார்.  தற்போது அதே கேரள கத்தோலிக்கத் திருச்சபையைச் சேர்ந்த பாதிரியார் ஒருவர், மீண்டும் அதே போன்ற பரபரப்பைக் கிளப்பி வருகிறார். கேரள மாநிலம் கொச்சி அருகிலுள்ள அங்கமாலியைச் சேர்ந்தவர் ஷிபு களம்பரம்பில் (39). இவர் கத்தோலிக்க மதகுருமார்களுக்கான பயிற்சிப் பள்ளியில் 13 ஆண்டுகள் பயிற்சி எடுத்து, பின் பாதிரியாரானவர். கேரள கத்தோலிக்கத் திருச்சபையில் உறுப்பினராக, கடந்த  24 ஆண்டுகளாக இருந்து வந்தவர். இவர் இந்த ஆண்டு மார்ச் மாதம், திடீரென தன் திருச்சபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டார். பின், தோகாவுக்குச் சென்றவர், அங்குள்ள இந்தியப் பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். அங்கிருந்தபடியே, கத்தோலிக்கத் திருச்சபையில் பாதிரியார்கள் மத்தியில் நிலவி வரும் ஒழுக்கக்கேடுகள் பற்றியும், அதனால் தான் பாதிக்கப்பட்டது குறித்தும், சுயசரிதையாக, "ஹியர் இஸ் தி ஹார்ட் ஆப் ஏ பிரீஸ்ட்' என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார். தன் சொந்தக் காசை செலவழித்து முதல் பதிப்பாக 100 பிரதிகள் வெளியிட்டுள்ள இவர், அடுத்த பதிப்பில் 10 ஆயிரம் பிரதிகள் வெளியிட திட்டமிட்டுள்ளார். தன் பணி விடுமுறையில் இப்புத்தகத்தை வெளியிடத் தீர்மானித்துள்ளார்.

இவர் தன் புத்தகத்தில் எழுதியுள்ளதாவது: நான் மூன்று தடவை, சாலை விபத்தில் சிக்கினேன். பாதிக்கப்பட்ட என்னை திருச்சபை ஆதரிக்காததால், நானே என் சிகிச்சைக்கான செலவை செலுத்தினேன். அதேபோல், காசர்கோட்டில், திருச்சபைக்குச் சொந்தமான பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்த போது, மாணவர்கள் எனக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போதும், சபை என்னைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவில்லை. ஒரு பாதிரியாரை, தொடர்ந்து அவமானத்தைச் சந்திக்க வைத்து, "இயேசுவுக்காக ஒரு பாதிரியார் சகல துன்பங்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்' என, சபை கூறுவது எந்த விதத்தில் நியாயம்? புனேயில் உள்ள, "பபல் செமினரி'யில் நான் பயிற்சி பெற்ற போது, பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டேன். ஓரினச்சேர்க்கை என்பது அங்கு மிகவும் சகஜம். பாதிக்கப்பட்டவர்கள் அதை எதிர்த்து புகார் செய்ய முடியாது. அப்படிச் செய்தால், பாதிக்கப்பட்டவரும், குற்றம் சாட்டப்பட்டவரும் வெளியேற்றப்படுவர். அதற்கு பயந்து யாரும் புகார் அளிப்பதில்லை.பயிற்சிக் காலத்தில்,  இளம் துறவிகள் சைக்கிளில்தான் செல்ல வேண்டும்.  பள்ளிச் சிறுவர்களை அவர்கள் சைக்கிளில் கொண்டு போய் விடுவர். அப்போது, சிறுவர்களை இறுக்க கட்டிப் பிடித்துக் கொள்ளும்படி இளம் துறவிகள் வற்புறுத்துவர். இது போன்ற நடவடிக்கைகள் பாலியல் நோக்கத்தோடு வெளிப்படையாக நடக்கின்றன. பயிற்சிக் கல்லூரியின் மூத்த பயிற்சியாளர்கள், பாதிரியராக தங்களைக் காட்டிக் கொண்டு, பின் அதற்காக பாவமன்னிப்பும் கேட்டிருக்கின்றனர். பாதிரியார்கள் பலர், விதவைகள், கன்னியாஸ்திரிகளிடம் பாலியல் ரீதியில் தவறாக நடந்திருக்கின்றனர். மேலும் சிலர், சர்ச்சுக்கு வரும் நன்கொடைகளை, தங்கள் சொந்த விருப்பங்களுக்காகச் செலவிட்டுள்ளனர்.  இது தவிர்க்கப்பட வேண்டும் என்றால், சர்ச்சின் நிதி, அரசால் கையாளப்பட வேண்டும். இவ்வாறு ஷிபு, தன் புத்தகத்தில் எழுதியுள்ளார்.
raja - saudi,இந்தியா
2010-09-08 11:18:45 IST
தமிழ்நாடு அரசியல்வாதிகள் இப்ப கிண்டல் பண்ண சொல்லுங்க. சிறுபான்மை வோட்டு கிடைகாதுல. வீரமணி கூட வாய் திறக்க மாட்டார்...
சிவா பாலா - சிங்கபூர்,சிங்கப்பூர்
2010-09-08 11:00:51 IST
அட, இதெல்லாம் சகஜமப்பா. வேற ஏதாவது புதுசா சொல்லு........ஹூம் next ப்ளீஸ்....
abdullah - rajapalayam,இந்தியா
2010-09-08 11:00:33 IST
இது இன்று,நேற்றல்ல.தொடரும் தொடர் கதையே....இதற்குரிய தீர்வு கிறிஸ்தவ மதகுருக்கள் திருமணங்களை புறக்கணிப்பதே. இறைவன் ஆண், பெண்ணைப் படைத்ததன் நோக்கமே இருவரும் ஒருவரையொருவர் உற்ற துணையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே. அதை விடுத்து நாங்கள் துறவறம் போவோம், திருமணமும் வேண்டாம் என்றால் இது தான் நடக்கும்....
Aஅனந்த காந்தி - சிங்கப்பூர்,சிங்கப்பூர்
2010-09-08 10:58:38 IST
எங்கே நம்ம விஜய் டிவி ..... நீயா நானா வில் இது தொடர்பாக விவாதம் நடைபெறுமா?...
D.சேகர் செல்வராஜ் - தூத்துக்குடி,இந்தியா
2010-09-08 10:56:23 IST
இறைவன் இல்லற வாழ்க்கையை அங்கீகரித்து அதற்காகவே ஆணையும் பெண்ணையும் படைத்தார். துறவியாக வாழ முடிந்தால் வாழட்டும் என கூறியுள்ளார். ஆனால் இப்படி ஆணோடு ஆணும், பெண்ணோடு பெண்ணும் சேர்வதை தேவன் தான் வெறுக்கும் காரியங்களிலே முதன்மையாக கருதுகிறார். இத்தகைய பாவ காரியத்தின் நிமித்தம் அந்த தேசமே சபிக்க பட்டிருக்கும் என பரி.வேதாகமம், திட்டமும் தெளிவுமாக கூறுகிறது. இதை போதிக்கும் போதகர்கள் இவ்வாறு நடந்து கொள்வது, தேவ குற்றம் மட்டுமல்ல, தேசத்துரோகமும் ஆகும். ஆனால் நமது நாட்டில் இந்த பழக்கத்தை சட்டபூர்வமாக்க சிலர் முயலுவது மிகவும் கண்டிக்க தக்கது. வாழ்க தமிழகம், வளர்க பாரதம்...
வினோத் - சென்னை,இந்தியா
2010-09-08 10:55:10 IST
பலே பாதிரியார் பலே....
இடைக்காட்டூர் பாஸ்கர் - துபாய்,இந்தியா
2010-09-08 10:45:29 IST
பிரமச்சரியம் மனித மற்றும் எல்லா உயிர்களுக்கும் ஒத்து வராத ஒன்று. பிரமச்சரியம் கட்டாயமாகும் போதுதான் இம்மாதிரி தவறுகள் நடைபெறுகின்றன. சில மதங்களில் இருப்பது போன்று திருமணமுறையோடு மதத்தை நெறிபடுதுவது தான் இது போன்ற தவறுகள் நடவாமல் இருக்கும்....
visakha - doha,கத்தார்
2010-09-08 10:27:31 IST
திருநெல்வேலி, நாகர்கோவில், திருச்சி , மதுரை, திண்டுக்கல் , சாந்தோம் போன்ற மறை மாவட்டங்களிலும் இதுபோன்றவைகள் நடக்கத்தான் செய்கிறது....
Ravi - Doha,இந்தியா
2010-09-08 10:16:36 IST
நான் யோக்கியன் என்று யாரும் சொல்லக்கூடாது...
பாமரன் - chennai,இந்தியா
2010-09-08 10:10:44 IST
இன்னுமொரு நித்தியானந்தா கதை கிடைத்து விட்டது போல தெரிகிறது....
ஜகன் - Kovai,இந்தியா
2010-09-08 10:08:16 IST
கிருஸ்தவ மதத்தில் உள்ள வெளிப்படையாக தவறுகளை பேசும் சுதந்திரத்தால் இந்த செய்தி நமக்கு தெரிகிறது. சில மதங்களில் இப்படி பட்ட நிகழ்வுகள் அப்படியே மத, சமூக தலைவர்களால் நசுக்கப் படும். வெளியே நல்ல விஷயம் மட்டும் பேசப் படும்....
குணசீலன் - திண்டுக்கல்,இந்தியா
2010-09-08 10:06:12 IST
சொந்த தாய் நாட்டை காட்டி கொடுப்போம். ஆனால் இதுமாதிரி சம்பவங்களை காட்ட மாட்டோம் என்பது இன்று இந்திய மீடியாக்களின் business ethics. ரொட்டி துண்டுக்கு மதம் மாறினா இப்படித்தான் நடக்கும்...
கண்ணன் - singapore,இந்தியா
2010-09-08 10:03:27 IST
வாசகர்களே நீங்கள் nherthi kadankalai ungalukku therindha variyavarkalukku kudutthu udhavungal.illai yentral .....indha mathri news vandhukitte இருக்கும்....!...
ராஜா.R - Nagercoil,இந்தியா
2010-09-08 09:57:22 IST
கிறிஸ்தவ மதத்தில் இது மட்டும் அல்ல, இதை விட அசிங்கமான சம்பவங்கள் எல்லாம் நடக்கிறது. ஏழை மக்களுக்கு பணத்தை கொடுத்து மதம் மாத்துவது. இதை எல்லாம் அரசு வேடிக்கை பார்க்கிறது. ஆனால் ஹிந்து மததில் நடக்காத சம்பவத்தை கூட நடந்ததாக காட்டுகிறது சன் டிவி. ஹிந்து மக்களை மதிக்காத அரசாங்கம் நமக்கு தேவை இல்லை. திமுக காங்கிரசை அழிப்போம். அதிமுக பிஜெபி கு ஆதரவு அளிப்போம்...
Ram - Bangalore,இந்தியா
2010-09-08 09:51:46 IST
நித்யானந்தம் விவகாரத்தில் பத்திரிக்கைகள், TV சேனல்கள் மிகுந்த அக்கறையுடனும், ஆர்வமுடனும் செயல்பட்டன. ஆனால் இது போன்ற அநியாங்கள அடக்கி வாசிக்கின்றன. செய்திகளுக்கு நடுவே வக்கிரமான கட்சிகளை பல முறை ஒளி பரப்பி, பரபரப்பை ஏற்படுத்திய சேனல்களுக்கு, இது கண்ணில் படாமல் போனது ஆச்சர்யமாக உள்ளது....
கண்ணன் - சென்னை,இந்தியா
2010-09-08 09:36:38 IST
THIS IS HAPPENING IN ALL CHURCHES. THIS IS SHOWING THE BAD FACE OF PRIEST, NUN . SO INNOCENT PEOPLE BE AWARE OF THIS KIND OF DIRTY PAATHIRIYAAR AND SO CALL LEADERS...
சண்முகம் - குவைத்,குவைத்
2010-09-08 08:07:08 IST
அட பாலா அண்ணே, சன் டி. வி காரங்க ஒன்லி ஹிந்துகல மட்டும் தான் கட்டுவாங்க. ஏன்னா நம்மதான் இளிச்சவாயன்கள். மேலும் நம்ம ஓட்ட ஈஸியா ஜாதிவாரிய பிரித்து வாங்குவாங்க....
Aruna - chennai,இந்தியா
2010-09-08 07:57:46 IST
மலையாளிகள் கொலையாளிகள். selfish fellows . இவருடைய வார்த்தைகளிலிருந்து தெரிகிறது இவர் எவ்வளவு மோசம் என்று. இவர் தவறு செய்ததினால் வெளியேற்றபட்டவர். திருச்சபையில் நிறைய நல்ல குருமார்கள் உள்ளனர். தயவு செய்து எல்லா குருமார்களுக்கும் பொருந்தும் படியாக குறை சொல்லாதீர்கள். மலையாளிகள் பணத்திற்காக எதுவும் செய்வார்கள்....
Ramalingam - Chennai,இந்தியா
2010-09-08 07:54:40 IST
Dinamalar padikka padikka anantham...
அம்பானி - n,இந்தியா
2010-09-08 07:25:17 IST
உங்க ஊரில் பொம்பிளைங்களே இல்லையா ??...
True Indian Abu Dhabi - abudhabi,இந்தியா
2010-09-08 07:04:23 IST
இதெல்லாம் சர்ச் மிஷினரியில் ரொம்ப சகஜமப்பா. இதுக்கு போயி அலட்டிக்கலாமா.பல இடங்களில் மதம் மாற்றம் செய்யும் நோக்கமும் எங்களுக்கு எப்போவே தெரியும்.Jai Hind...
பாலா ஸ்ரீனிவாசன் - சென்னை,இந்தியா
2010-09-08 07:01:08 IST
இது சம்பந்தமா ஏதாவது டேப்பு கிடைச்சா சன் டி.விய ஒளிபரப்பு பண்ண சொல்லுங்களேன் பாப்போம்!...
johnpeter - சிட்னி,ஆஸ்திரேலியா
2010-09-08 05:51:18 IST
போபண்டவரின் வாடிகன் தலைமை இடத்திலேயே இம்மாதிரி பாலியல் பலாத்காரங்கள் சிறு குழந்தைகளிடம் பாதிரியார்களால் நடத்தப்படுவதாக புகார்கள் வந்தவண்ணம் இருக்கின்றன. போப்பாண்டவர் ஒன்றும் செய்ய முடியாமல் இருக்கிறார். இது குறித்து ஐரோப்பா முழுவதும் கண்டனம் செய்துள்ளனர்....
2010-09-08 05:44:02 IST
அவர் கூறுவது நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மை.நானும் சேசுசபை குருமாணவர் பயிற்சியில் ஆயிரத்து தொல்லாயிரத்து எண்பத்து எட்டு முதல் தொண்ணுற்று மூன்று வரை இருந்தேன்.அங்கு நல்லவர்களும் இருக்கிறார்கள்.இவர் கூறுவது போல் ஒழுக்கம் இல்லாதவரும் உள்ளனர். நான் சேசு சபையை விட்டு வெளியேற ஒரு ஒழுக்கம் இல்லாதவர்தான் காரணம்.நான் எதையும் ஒளிவு மறைவு இல்லாமல் நேரிடையாக கேட்டு விடுவேன்.எனது குறை இதுதான் என நண்பர்கள் கூறுவார்கள்.நான் இப்போது மகிழ்சியாகத்தான் இருக்கிறேன்....
anban - kovai,இந்தியா
2010-09-08 02:38:50 IST
இது மலையாளிகளுக்குள்ள வியாதி. இது எல்லாருக்கும் பொதுவல்ல...
ella - melbourne,ஆஸ்திரேலியா
2010-09-08 01:48:12 IST
Super statement Here in australia priest and bishops are get caught in child abuse and all other nasty allegations, now its slowly turn up to india, government should check all those hostels and get a report....

கருத்துகள் இல்லை: