புதன், 8 செப்டம்பர், 2010

வயலின் கலைஞர் எல்.சுப்ரமணியம் மீது கற்பழிப்பு புகார்!

பெங்களூர்: தனது வீட்டில் வேலை பார்க்கும் 27 வயதுப் பெண்ணை இசையமைப்பாளர், வயலின் கலைஞர் எல்.சுப்ரமணியம் கற்பழிக்க முயன்றதாக புகார் தரப்பட்டுளளது.

எல்.சுப்ரமணியம் தனது மனைவியும் பாடகியமான கவிதா கிருஷ்ணமூர்த்தி, இரு குழந்தை [^]களுடன் பெங்களூர் [^] டாலர்ஸ் காலனியில் வசித்து வருகிறார். இவரது வீட்டில் வேலை பார்த்து வந்தவர் பாக்யா.

சில வாரங்களுக்கு முன் பாக்யா தனது வீட்டிலிருந்து 5000 யூரோ பணத்தை திருடி விட்டதாக சுப்ரமணியம் சஞ்சய் நகர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அடுத்த நாளே பாக்யாவும் ஒரு புகார் கொடுத்தார். அதில், சுப்ரமணியம் தன்னை கற்பழிக்க முயன்றதாக கூறியுள்ளார் பாக்யா.

சுப்ரமணியம் கொடுத்துள்ள புகார் குறித்து கவிதா கூறுகையில், நானும் எனது கணவரும்கடந்த ஜூன் மாதம் அமெரிக்காவில் கச்சேரிகளை நடத்தினோம். பின்னர் ஐரோப்பாவில் சில நாட்கள் தங்கியிருந்தோம்.

ஜூலை 14ம் தேதி வீடு திரும்பினோம். அப்போது நாங்கள் கொண்டு வந்திருந்த 5000 யூரோ பணத்தை மாற்ற திட்டமிட்டோம். ஆனால் அப்போது யூரோ மதிப்பு குறைந்திருந்ததால் பிறகு மாற்றிக் கொள்ளலாம் என தீர்மானித்து படுக்கை அறையில் உள்ள லாக்கரில் பத்திரமாக வைத்துப் பூட்டி விட்டோம்.

ஆகஸ்ட் முதல் வாரத்தில் யூரோவை மாற்றத் தீர்மானித்து டிராவைத் திறந்தபோது அங்கு பணம் இல்லை என்றார்.

சுப்ரமணியத்தின் மகள் பிந்து கூறுகையில், ஐந்து ஆண்டுகளுக்கு முன்புகூட இதேபோலசிக்கல் வந்தது. அப்போது எங்களது வீட்டில் வேலை பார்த்து வந்த சமையல்காரப் பெண்ணும், டிரைவரும் சேர்ந்து பணத்தைத் திருடி விட்டனர். பின்னர் அதை நாங்கள் மீட்டோம்.

அதன் பிறகும் கூட அவ்வப்போது பணம், பொருள் திருடு போய் வந்தது. இதையடுத்து நாங்கள் தீவிரமாக கண்காணித்து வந்தோம்.

சமீபத்தில் ரூ. 50,000 பணம், ஒருதங்கச் சங்கிலி, ஐபாட் ஆகியவை காணாமல் போயின. இதுகுறித்து உடனடியாகஎங்களால் போலீஸாருக்குத் தெரிவிக்க முடியவில்லை. எங்களது குடும்பத்தில் ஒருதுக்கச் சம்பவம் நடந்ததால் அது முடிந்த பிறகுசொல்லலாம் என நினைத்து ஆகஸ்ட் மத்தியில் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தோம் என்றார்.

கவிதா தொடர்ந்து கூறுகையில், ஒரு ஏஜென்சி மூலமாகத்தான் பாக்யாவை நாங்கள் வேலைக்கு சேர்த்தோம். ஜனவரி மாதம் பாக்யா வேலையில் சேர்ந்தார். இத்தனை காலமாகியும் அவர் குறித்த முழு விவரங்களும் எங்ளிடம் இல்லை. மர்மமான பெண்ணாகவே அவர் இருந்து வந்தார்.

முதலில் விதவை என்று அவர் கூறினார். ஒரு குழந்தை உள்ளதாகவும், அருகில் உள்ள கிராமத்தில் தாயாருடன் வசித்து வந்ததாகவும் கூறினார். ஆனால் எங்களிடம் வேலையில் சேர்ந்த பிறகு தனது கணவர் குறித்துப் பேசினார். இதனால் பாக்யா குறித்து முழுமையான தகவல் எங்களிடம் இல்லை. ஏஜென்சி மூலமாக சேர்ந்ததால் நம்பி சேர்த்தோம்.

தற்போது கற்பழிப்பு புகார் கொடுப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பே பாக்யா வேலைக்கு வரவில்லை. இதுகுறித்து ஏஜென்சிக்குத் தெரிவித்தோம் என்றார்.

பின்னர் பாக்யா வேலைக்கு வந்தபோது அவரை போலீஸார் அழைத்துச் சென்று விசாரித்தனராம். அப்போது அவரது பையிலிருந்து ரூ. 3500 பணமும், வீட்டில் வைத்து ரூ. 4000 பணமும், ஒரு புதிய தங்கச் சங்கிலியும் கிடைத்ததாக போலீஸ் தரப்பில் கூறுகின்றனர்.

ஆனால் தன்னை கடந்த ஐந்து மாதங்களாக சுப்ரமணியம் பாலியல் கொடுமைப்படுத்தி வந்ததாக கூறுகிறார் பாக்யா. அவருக்கு நான் உடன்பட்டுப் போகாததால் தன்னை பல வகையில் அவர் சித்திரவதை செய்ததாக கூறியுள்ளார் பாக்யா.

இருப்பினும் பாக்யா கொடுத்த புகாரை இதுவரை போலீஸார் பதிவு செய்யவில்லையாம். விசாரணைக்குப் பிறகே இதுகுறித்து மேல் நடவடிக்கை [^] எடுக்க தீர்மானித்துள்ளனராம்.

ஆனால் தற்போது பாக்யாவுக்கு ஆதரவாக பல்வேறு தலித் அமைப்புகள் குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளதால் பரபரப்பாகியுள்ளது.

கருத்துகள் இல்லை: