சனி, 11 செப்டம்பர், 2010

யாழ்ப்பாணத்தில மிஹின் லங்கா விமான சேவை

ஸ்ரீலங்கா எயார்வேஸ், இந்தியன் எயார்வேஸ் ஐத் தொடர்ந்து
யாழ்ப்பாணத்தில் 'மிஹின் லங்கா'  விமான சேவைக்கான காரியாலயம்
மிஹின் லங்கா விமான சேவை, அதன் பிராந்திய நிலையம் ஒன்றை யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 12ஆம் திகதி திறந்து வைக்கிறது.  இத்திறப்பு விழாவில் பிரதம அதிதியாக நாளைய இளைஞர்கள் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ கலந்து கொள்வார். யாழ்ப்பாணத்தில் தற்போது ஸ்ரீலங்கா எயார்வேஸ் மற்றும் இந்தியன் எயார்வேஸ் என்பவற்றின் கிளைகள் மட்டுமே உள்ளன. மிஹின் லங்கா மூலம் அங்குள்ள மக்களுக்கு மேலும் ஒரு சேவையைப் பெறும் வாய்ப்புத் தற்போது கிடைத்துள்ளது. கட்டுநாயக்க - பலாலி விமான சேவை மற்றும் வெளிநாட்டு விமானப் பயணங்களுக்கான டிக்கட்டுக்களைப் பதிவு செய்தல் போன்ற பணிகளை இதனூடாக மேற்கொள்ள முடியும்.

கருத்துகள் இல்லை: