வெள்ளி, 10 செப்டம்பர், 2010

டாஸ்மாக் கடைகளை அடித்து நொறுக்குவோம் : ராமதாஸ் ஆவேசம்

விழுப்புரம் : ""அள்ளிக்கொண்ட பணத்தை மக்களுக்கு தேர்தல் நேரத்தில் கிள்ளிக் கொடுக்கின்றனர்'' என்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார்.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் நேற்று நடந்த பா.ம.க., இளைஞர்கள், இளம் பெண்கள் பயிற்சி முகாமில் அவர் பேசியதாவது: தமிழகத்தில் அதிகளவு அரசியல் கட்சிகள் உள்ளன. கட்சி பெயர் தெரியும், ஆனால் உங்களுக்கு அரசியல் என்றால் என்னவென்று தெரியாது. உதாரணமாக 40 ரூபாய்க்கு விற்ற பருப்பு 100 ரூபாய்க்கு விற்கிறது. எண்ணெய், அரிசி விலை 10 மடங்கு உயர்ந்துள்ளது. நீங்கள் வாங்குகிறீர்கள். விலைவாசிக்கு காரணம் ஆளும் அரசு தான் காரணம் என்பது தான் அரசியல். அரசு தான் விலைவாசியை குறைக்க வேண்டும். இந்த விவரம் தெரிவது தான் அரசியல்.

டாஸ்மாக் விற்பனையால் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். இதற்கும் அரசு தான் காரணம். உங்க ஊருக்கு ரயில்வே அமைச்சர் வேலு ரயில் விடுகிறார். ஓட்டுக்கு 1,000 ரூபாய் வாங்கிக் கொண்டு அவரை தோற்கடித்தனர். இந்த பணம் எங்கிருந்து வந்தது என சொல்லுங்கள். அது மக்களுக்கு ஒதுக்கப்படும் பல பணிகளுக்கான பணம். அதில் கொள்ளையடித்து, கோடி கோடியாக சேர்த்துக் கொண்ட பணம். அள்ளிக் கொண்ட பணத்தை மக்களுக்கு தேர்தல் நேரத்தில் கிள்ளிக் கொடுக்கின்றனர். இந்த தேர்தலுக்குள், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் ஒரு சொட்டு சாராயம் இல்லாமல் மூட வேண்டும். அப்படி மூடவில்லை என்றால் ஒரு லட்சம், இரண்டு லட்சம் பெண்களைத் திரட்டி, சிறைக்கு செல்லவும் தயாராக உள்ளோம். தேர்தலுக்குள் ஒவ்வொரு டாஸ்மாக் கடையையும் அடித்து நொறுக்குவோம். தமிழகத்தில் இளம் பெண்கள் தாலி அறுப்பது அதிகம், இதற்குக் காரணம் குடிப்பழக்கம் அதிகமாவது தான். இவ்வாறு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார்.

அதிரை அஷ்ரப் துபாய் - துபாய்,இந்தியா
2010-09-10 01:14:15 IST
நல்ல துனிச்சல் கார அரசியல் வாதி. இந்த என்னம் எல்லா அரசியல் வாதிகளுக்கும் வரவேண்டும். டாஸ்மாக் தமிழகத்தின் புற்று நோய. இவைகள் ஆட்சியாளர்களால் அகற்றபட வேண்டும். இல்லை என்றாள் அடித்து நொறுக்கபட வேண்டும்....
அ. வே. செந்தில்குமார் - ஜெட்டாஹ்,சவுதிஅரேபியா.,சவுதி அரேபியா
2010-09-10 01:14:12 IST
திரு. ராமதாஸ், சில நாட்களுக்கு முன் டாஸ்மாக் கடைகளில் வேலை செய்பவர்களின் குறையை களையவேண்டும் என்று கூறிய நீங்கள் இன்று தேர்தலுக்குள் ஒவ்வொரு டாஸ்மாக் கடையையும் அடித்து நொறுக்குவோம் என்று நேரத்துக்கு ஒன்றாக பேசும் உங்களை போன்றோர் செய்யும் கேடுகெட்ட அரசியல் ஒன்றும் சொல்லிதர தேவையில்லை, எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை!? "அது எப்பொழுதும் உங்களை அறிவாளி என்று நினைத்து பாடம் நடத்துவதை நிறுத்துங்கள்", உங்களை போன்றோரின் பாடம் தீமைக்கே வழிவகுக்கும். நீங்களெல்லாம் திருந்தும் நாள் எந்நாளோ?!!!!!!!!!!!...
Suresh - டுமில்குப்பம்சென்னை,இந்தியா
2010-09-10 01:09:13 IST
அய்யா தாங்கள் தண்ணி அடிப்பீங்களா அத முதலில் சொல்லுங்கய .... எல்லா கடையையும் முடிட்டா தாங்கள் மரம் வெட்டி கள்ள சாராயம் காச்சுவீங்களா? உங்கள் நிலத்தில் அல்லது உங்கள் கட்சிகாரர்கள் நிலத்தில் விளைந்த அரிசிய பழைய / குறைந்த விலைக்கு எங்கு விற்கிறார்கள் என்று சொன்னால் நாங்களும் வந்து வந்கோவோமில்ல .... இல்ல பக்கத்துக்கு மாநிலத்தில் குறைந்த விலையில் விற்றால் சொல்லுங்க .. நங்கள் அங்கு போய் வாங்குவோம்... atleast can you please start one shop for your vaniyar people.. buy from your people for cheap and sell it for cheap.. and inform that .. so that all the people will listen to you and demand the government... கேட்குறவன் கேனையன்னு நினைக்காதே டுபாக்கூர் .......
கலைச்செல்வன் - பால்டிமோர்யுஎஸ்ஏ,இந்தியா
2010-09-10 01:07:44 IST
ஆனாரோ? ஏனையா மரம்வெட்டியே பருப்புவிலை ஏறியது மட்டும்தான் உமக்குத் தெரிகிறதா? கூலி சம்பளம் ஏறியதெல்லாம் தெரியாதா? நீர் கருத்துக்குருடரா? 75 ரூபாய் இருந்த எடுபிடிஆளுடைய கூலி 250 ரூபாய் ஆகியுள்ளதும்,150 ரூபாய் இருந்த கொத்தனார் கூலி 400 ரூபாய் ஆகியுள்ளதும்,4000 ரூபாய் இருந்த துவக்கப்பள்ளி ஆசிரியர் சம்பளம் 17000 ஆகியுள்ளதும் தெரியாதா? இதெல்லாம் புரியாத மண்டூகமான நீர் எதற்கு கருத்து கூறுகிறீர்? டாஸ்மாக் கடைகளையெல்லாம் அடித்து நொறுக்கி விட்டு உங்கள் கட்சிக்காரர்களை வைத்து ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயம் காய்சி விற்க திட்டம் ஏதாவது இருக்கிறதா? ஏனென்றால் உம் மகன் அமைச்சர் பதவியை நிறைவு செய்து வெளியேறும்போது,உயிர் காக்கும் மருந்துகளுக்கும்,சர்க்கரை நோய்,இருதயநோய், ஆஸ்த்மா போன்ற வியாதிகளுக்கு நீண்டநாள் உட்கொள்ளும் மருந்துகளுக்கும், விலை ஏற்றம் செய்வதற்கு அனுமதியளித்து கை எழுத்து போட்டுவிட்டு ஆயிரக்கணக்கான கோடிகளை மருந்துக் கம்பெனிகளிடமிருந்து லஞ்சமாகப் பெற்றதை மறந்துவிட்டீரா? மக்கள் நலனிலும் உயிர் காக்கும் மருந்துகளிலுமே கொள்ளையடித்த நீர் மற்றவர்களைப் பற்றிப் பேசவே அருகதை இல்லாதவர்.............
கண்ணன் - அருப்புக்கோட்டை,இந்தியா
2010-09-10 01:06:44 IST
ஐயா வுங்களை பல சமயம் கடிந்து பேசி இருந்தாலும். இந்த டாஸ்மாக் விசயத்தில் உங்களை பாராட்டியே ஆகவேண்டும் , இனி ஒரு முறை தி. மு. க. ஆட்சிக்கு வந்தால் இளைஞ்ர்கள் இருக்க மாட்டார்கள். அனைவரும் போதையில் மரணம் அடைந்து விடுவர். இந்த தி. மு. க. அரசு தூக்கி எறியப்படவேண்டும். இது காலத்தின் கட்டாயம் . தவறினால் தமிழகம் சுடுகாடுதான்....
கலைஞர் பிரியன் - டென்வர்,யூ.எஸ்.ஏ
2010-09-10 00:56:09 IST
தமிழகத்தில் அதிகம் குடிப்பது பா ம க வினர் தான் என்று ஒரு கருத்து ஆய்வு கூறுகிறது...
chandru - chennai,இந்தியா
2010-09-10 00:46:47 IST
நீயும் சேர்த்து தின்னியே அப்போ ஏன் அடிச்சி நொறுக்கல??...
யாரோ - TN,இந்தியா
2010-09-10 00:42:32 IST
நான் தான் First என்னடா ரெண்டு நாளா காணோமுன்னு பார்த்தோம் .... START THE MUSIC...
guna - madurai,இந்தியா
2010-09-10 00:37:48 IST
அப்பா இப்பவாவது ரோசம் வந்ததே , நல்ல மகனாக சொன்ன படி எல்லா டாஸ்மாக் கடைகள்ளையும் அடித்து நொறுக்குங்கள். அப்படி செய்தால் கண்டிப்பாக எங்களின் ஒட்டு உங்களுக்குத்தான்...
R.Murthy - chennai,இந்தியா
2010-09-10 00:32:27 IST
சொல்லுவது என்னமோ நன்றாகதான் இருக்கிறது . இதுவும் அரசியல்தான் .. காந்திஜி இவ்வாறு பேசியிருந்தால் நாம் சுதந்திரம் வாங்கி இருந்திருப்போமா. முதலில் மக்களிடம் நல்ல பெயர் எடுத்து ஆட்சிய பிடித்து பெறகு மது கடைகளை மூடட்டும். பிறகு பெண்கள் இவரை தெய்வமாக மதிப்பர் . அதற்க்கு முன் இவர் ஜாதி பெயர் சொல்லி வாக்கு கேட்பதை நிறுத்த வேண்டும்.பிறகு தான் எல்லா மக்களும் இவர் பேச்சை கேட்பார்....
கே.கைப்புள்ள - nj,இந்தியா
2010-09-10 00:29:09 IST
அய்யையோ வந்துட்டாண்டா அபசகுணம் டவுசர் தாசு. சுமங்கலிங்க எல்லாம் புருசன கூட்டிட்டு வெளியூர் போய்டுங்க. எல்லோரும் காத நல்லா மூடிகோங்க. இவன் வாய தொறந்தாலே ரொம்ப அமங்கலமா பேச ஆரம்பிச்சிடுவான். இவனுக்கு தெரிஞ்சதெல்லாம் வெட்டி போடுறது, பிரிக்கிறது, அத்து விடுறது, தாலி அறுக்கிறது, முண்டச்சி ஆகிறது, அப்புறம் தண்டவாளத்த பேத்து எடுக்கிறது. இப்போ புதுசா அடிச்சு நொறுக்கிறது. இவன் வாய்ல இருந்து ஒரு நல்ல வார்த்தையே வராது. ஏற்கனவே நொந்து நூலா போய் இருக்கிறோம். இதுல இவன் வேற டெய்லி வந்து நீங்க எல்லாம் தாலிக்கு பதிலா மஞ்சல கட்டிகொங்க. உங்க புருஷன் எல்லாம் சாராயம் குடிச்சே செத்து போவானுக. நீங்க எல்லாம் தாலி அருக்கனும். அதுவும் இளம் பெண்கள் தாலி அறுப்பது அதிகம். தாலி அறுத்து நீங்க எல்லாம் முண்டச்சிங்களா திரிய போறீங்கன்னு சாபம் விட்டுட்டு.... அப்பப்பா... இவன் பேச்ச காது கொடுத்து கேட்க்க முடில. அபசகுணம் புடிச்ச அட்டு பய. இவன் பேசுறத எல்லாம் கேட்டுட்டு எவளாச்சும் நிம்மதியா ஒரு வாய் காஞ்சி குடிக்க முடியுமா? இவன் இப்படி அமங்கலமா பேசிட்டே இருப்பானே தவிர ஒன்னும் பண்ண மாட்டான். ஏன்னா இவன கூட்டணில சேத்துக்கனும், இவன் பையனுக்கு ஒரு சீட் கொடுக்கணும். அதுக்கு நீங்க எல்லாம் தாலி அறுக்கணும், முண்டச்சிங்களா திரியனும். ஆமா இவன் எல்லாம் ஒரு மனுசன்னு நீங்களும் போய் இவன் இப்படி அமங்கலமா வாய் கூசாம பேசுறானே, அதை கேட்டுட்டு வந்து எப்படி சும்மா இருக்கீங்க. ஒருநாள் இவன் வாய் முகூர்த்தம் பளிச்சிடுச்சுனா? அப்புறம் ஐயோ ஐயோ ன்னு வாயிலையும் வயித்துலயும் அடிச்சிட்டு ஒப்பாரி வெப்பீங்களா?...
மக்கள் சுவாமி - சென்னை,இந்தியா
2010-09-10 00:24:22 IST
டாஸ்மாக் கடைகளை அடித்து நொறுக்குவோம் : ராமதாஸ் ஆவேசம் அதுக்கு எவளவ்வு குவாட்டர் வேணும். முதன் நாளே முன்பதிவு செய்து வாங்கி வைத்து கொள்ளவும். மறு நாளும் போலீஸ் ஆதரவுடன் MRP ratukku KIDAIKKUM./ MU..KA...

கருத்துகள் இல்லை: