செவ்வாய், 7 செப்டம்பர், 2010

ஊசி போடாமல் 50 பேரை காவு வாங்கிய அரசு டாக்டர்கள்; ராஜஸ்தானில் ஸ்டிரைக் வாபஸ்

புதுடில்லி : நோயாளி உறவினர்களும், டாக்டர்களும் டாக்டர்களும் மோதிக்கொண்ட விவகாரத்தினால் ராஜஸ்தான் மாநிலம் அரசு ஆஸ்பத்திரி பணிகள் அடியோடு பாதிக்கப்பட்டன. உரிய, முறையான சிகிச்சை அளிக்க டாக்டர்கள் இல்லாததால் 50 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் மாநிலத்தில் பெரும் தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது.
தடியடியில் டாக்டர்கள் காயம் : கடந்த சனிக்கிழமை ஜோத்பூர் அரசு எம்.டி.எம்., ஆஸ்பத்திரியில் டாக்டர்களும், நோயாளியின் உறவினர்களும் அடி தடியில் ஈடுபட்டனர். கலவரம் முற்றிப்போகவே , போலீசார் தடியடி நடத்தி அப்போதைய பதட்டத்தை தணித்தனர். பல டாக்டர்கள் காயமுற்றனர். இதனையடுத்து டாக்டர்கள் நீதி கேட்டு காலவரையற்ற போராட்டத்தில் குதித்தனர். இதனால் ஆஸ்பத்திரியில் முக்கிய பணிகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.
மூச்சு திணறியவர்கள், விபத்தில் சிக்கியவர்கள், நீண்ட கால நோயாளிகள் என 3 நாட்களில் இது வரை 50 பேர் உயிரிழந்து விட்டனர். இன்னும் உயிர்ப்பலி உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. இது தொடர்பாக மாநில சுகாதார துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்ததோடு நிற்கின்றது. ஆனால் டாக்டர்கள் தங்களது போராட்டத்தை கைவிடுவதாக இல்லை. மாநிலம் முழுவதும் ஆயிரத்து 200 டாக்டர்கள் பணிக்கு செல்ல மறுத்து விட்டனர். இதனால் பல அரசு ஆஸ்பத்திரிகளில் உயிர்காக்கும் சிகிச்சை நிறுத்தப்பட்டுள்ளது.
பணி நடக்காத சிரமத்திற்கு பொதுமக்கள் பொறுத்து கொள்ள வேண்டும் என டாக்டர்கள் தங்களது அறிக்கையில் கூறியுள்ளனர். மாநில அரசு உரிய நடவடிக்கையில் இறங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை எழுப்பியுள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வீதிக்கு வந்து போராட்டத்தில் குதித்துள்னர், டாக்டர்கள் உருவ பொம்மை எரிக்கப்பட்டு வருகிறது.
எனது மனைவியை இழந்தேன் : ஜோத்பூர் ஆஸ்பத்திரியில் தனது மனைவியை இழந்த துயரம் குறித்து ஜோஷி என்பவர் கூறியதாவது: எனது மனைவி ஆஷா இருதய நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். அவச சிகிச்சை தேவைப்பட்டது ஆனால் டாக்டர்கள் யாரும் சிகிச்சை அளிக்காத காரணத்தினால் உயிரிழந்து விட்டார். எனது இளம் குழந்தைகளை நான் எப்படி காப்பாற்றுவேன் என்றார் கண்ணீர் ததும்பிட.
இந்நிலையில் மாநில அரசுடன் ‌நடந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து கடந்த 3 நாட்களாக நடந்துவந்த மருத்துவர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

கே. செந்தில்குமார் - நியூடெல்லி,இந்தியா
2010-09-07 16:13:52 IST
Doctors please withdraw your strike and go for work other wise the poor people will suffer a lot....
பாலா - ஹைதராபாத்,இந்தியா
2010-09-07 16:00:54 IST
மருத்துவர்களை கைது செய்ய வேண்டும் .இது ஒரு திட்டமிட்ட கொலை முயற்சி. மன்னிக்க முடியாத seyal...
மணி.வி - சென்னை,இந்தியா
2010-09-07 15:39:57 IST
50 லட்சம் கொடுத்து சீட் வாங்கி MBBS படிப்பவனை தெய்வம் என அழைத்தால் அவர்களா பொறுப்பு? ஒரு கோடி கொடுத்து MD சீட் வாங்கி பொதுசேவை செய்ய அவன் என்ன அரசியல்வாதியா? எந்த மருத்துவமும், 100 % கியூர் என உத்தரவாதம் கொடுப்பதில்லை. நோயாளி இறக்க வேண்டும் என யாரும் விரும்புவதில்லை. ஆனால் நோயாளிகளின் உறவினர்கள் பணி செய்ய விடாமல் குறுக்கிட்டால், அவர்கள் என்ன செய்வார்கள்? இந்தப் போராட்டம் அரசின் கையாலாகாதனதையே காட்டுகிறது!...
உன்னை போல் ஒருவன் - சென்னை,இந்தியா
2010-09-07 15:34:58 IST
எது எதுக்கு போரண்டனுமோ அதுகெல்லம போராடாதிங்க.... மற்ற எல்லா .... போராட்டமும் பண்ணுங்க ....உங்ககிட்ட அன்ப தவிர மற்ற எல்லா புத்தியும் இருக்குடா .....உங்கள எல்லாம் மக்கள் கடவுள் நு கை எடுத்து கும்பிடுராங்க பாருங்க அவுங்களுக்கும் இதுவும் வேணும் இன்னமும் வேணும்.........
emohan - kanchi,இந்தியா
2010-09-07 15:20:59 IST
dear doctors pls withdraw the strike on the basis of humanatarian consideration. i dont know wheather rebirth is there or not . already the toll reaches 50. put a fullstop to this....
கமலேஷ் - ஜகார்தா,இந்தோனேசியா
2010-09-07 15:00:47 IST
instead of doing strike like this, it is better to be striking outside their hospitals and do the strike. In this way, the doctors can atleast take care of the emergency cases whenever required. The problems faced by the doctors can be rectified later, however the loss of lives can not be taken back in anyway. Doctors, please think....
manikandan - malaysia,இந்தியா
2010-09-07 14:44:04 IST
ஒரு உயிர் விலை மதிப்பற்றது. அதன் மதிப்பு கூட தெரியாமல் இவங்கெல்லாம் டாக்டரா இருந்து என்ன புண்ணியம். உடனே அனைத்து டாக்டர்களையும் டிஸ்மிஸ் செய்ய வேண்டும். எத்தனையோ பேர் வேலை இல்லாமல் உள்ளனர் அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம்...
ஊத்துக்குளி கோவிந்தன் - ஊத்துக்குளி,இந்தியா
2010-09-07 14:34:28 IST
காலம் கெட்டு போச்சு .... காலம் கெட்டு போச்சு .... .. யார்தான் நல்லவன் இந்த உலகத்துல.......
விஜி - kanyakumari,இந்தியா
2010-09-07 14:24:25 IST
உயிர விட strike பெருசா போச்சா \\\...
கார்த்திக் R - maputo,மொசம்பிகா
2010-09-07 13:45:45 IST
hello Doctors, you all are considered as a god, don't think like a normal person or like a politicians. with in this 3 days,50 peoples are dies and you all are responsible for that. Plzz withdraw the strike and go for the work....

கருத்துகள் இல்லை: