சனி, 11 செப்டம்பர், 2010

BBC முக்கிய சில நாடுகளில் ஒளிபரப்பை நிறுத்த முடிவு

நிதிப் பற்றாக்குறையினால் திண்டாடுகிறது பி.பி.சி
முக்கிய சில நாடுகளில் ஒளிபரப்பை நிறுத்த முடிவு
உலகம் முழுவதும் மிகப்பெரிய ஒளிபரப்புச் சேவையினைக் கொண்டுள்ள ஊடக நிறுவனமான பி. பி. சி. தனது நிதி பற்றாக்குறையினால் ஆட்குறைப்பு செய்வதுடன் சில முக்கிய நாடுகளில் ஒளிபரப்பு சேவையினை நிறுத்தி வைக்கவும் முடிவு செய்துள்ளது. பி. பி. சி. ஒளிபரப்பு நிறுவனம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் 25 சதவீதம் ஆட்குறைப்பு செய்யவுள்ளதாக ‘கார்டியன்’ பத்திரிகை செய்தி வெளி யிட்டுள்ளது. நிதிப் பற்றாக்குறையினால் தள்ளாடி வந்த நிலையிலும் இந்நிறுவனம் வெளிநாடுகளில் தனது ஒளிபரப்பு அலுவலகங்களை நிறுவியுள்ளது. போதிய விளம்பர வருமானம் இல்லாத சில நாடுகளில் இதன் ஒளிபரப்பினை நிறுத்தி வைக்கவுள்ளது. அதன்படி மியன்மார், ரஷ்யா ஆகிய நாடுகளில் தனது ஒளிபரப்பினை நிறுத்தவுள்ளது. மேலும் பிற நாடுகளில் உள்ள அலுவலக நிர்வாகிகளை 272 மில்லியன் டொலர் அளவுக்கு நிதி திரட்டுமாறும் அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை: