புதன், 8 செப்டம்பர், 2010

தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி பலமாக இருக்கிறது : கருணாநிதி

தமிழக முதல்வர் கருணாநிதி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது : தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி பலமாக, நட்புறவுடன் இருக்கிறது என்றார். தேர்தலுக்கான கூட்டணியை விரிவுபடுத்துவது குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என்றும் 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் தி.மு.க., வெற்றி பெறுவது உறுதிபட தெரிவித்தார். கோவை பொதுக்கூட்டத்தில் மக்கள் விரும்பும் கூட்டணி அமையும் என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியிருப்பது ஒருவேளை பத்திரிகையாளர்கள் விரும்பும் கூட்டணியாக இருக்கலாம் என்றார்.

மத்திய அரசிடம் வலியுறுத்தல் : இந்த ஆண்டுக்கான காவிரி நீரை கர்நாடகா அரசு வழங்குமா என நிருபர்கள் கேட்க : தமிழகத்துக்கான தண்ணீரை தருமாறு கர்நாடக அரசிடம் கேட்போம். அப்படி கர்நாடக அரசு தராத பட்சத்தில் மத்திய அரசிடம் , கர்நாடக அரசிடம் இருந்து தண்ணீரை பெற்றுத் தருமாறு வற்புறுத்தவோம். காவிரி நடுவன் மன்ற தீர்ப்பு தொடர்பான பிரச்னையை தீர்க்க சட்டரீதியான வழிமுறைகள் கையாளப்படுகின்றன என கூறினார்.

அமைச்சரவை விரிவாக்கம் ஆலோசிக்கப்படவில்லை : மத்திய அமைச்சரவை விரிவாக்கம் குறித்து என்னிடம் ஏதும் ஆலோசிக்கப்ப‌டவில்லை. அமைச்சரவையில் இளைஞர்களுக்கு இடமளிக்க பிரதமர் விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால் நான் யாரையும் பரிந்துரை செய்யவில்லை. மேலும் பிரதமர் உணவு தானியங்களை ஏழை மக்களுக்கு இலவசமாக வழங்குவது தொடர்பான சுப்ரீம் கோர்ட் உத்தரவு பற்றி எல்லை மீறி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்றே நான் நினைக்கிறேன் என்றார்.

ஊருக்கு உபதேசம் : திருச்சியில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா நடத்திய பொதுக்கூட்டத்தில் நம்பிக்கையுடன் பேசியது குறித்த கேள்விக்கு : எந்த ஒரு அரசியல் கட்சித் தலைவரும் தொண்டருக்கு நம்பிக்கையூட்டும் விதத்திலேயே பேசுவார். அதை தான் ஜெயலலிதாவும் செய்துள்ளார் . ஜெயலலிதா கடந்த 2001ம் ஆண்டில் முதல்வராக இருந்த போது அவருக்கு எந்த மாதிரியான பாதுகாப்பு கொடுக்கப்பட்டதோ தற்போதும் அதே அளவில் பாதுகாப்பு தரப்படுகிறது என, ஜெ பாதுகாப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்தார். ஜெ சொத்துக் குவிப்பு வழக்கு பற்றிய நிருபர்களின் கேள்விக்கு : சட்டம் அனைவருக்கும் பொது, நீதி அனைவருக்கும் சமம் என முழங்குவார் ஜெயலலிதா ( ஆனால் தன்னனைத் தவிர) . இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறினார்.
சென்னை மெட்ரோ ரயில் திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும். பெரும்பலூர் சிறப்பு பொருளாதார மண்டலப் பணிகள் நேர்மையாகவும், சிறப்பாகவும் நடைபெற்று வருகின்றன. கோவை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 15 தீர்மானங்களில் முக்கியத் தீர்மானமான தமிழ் வழியில் கல்வி கற்றவர்களுக்கு வேலைவாய்ப்பில் 20 சதவீதம் அரசு ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது தொடர்பாக தமிழக அரசு அவசர சட்டம் நிறைவேற்றியுள்ளது என்பதை சுட்டிக்காட்டினார்.

esspee - trichi,இந்தியா
2010-09-08 13:54:32 IST
உலகமகா தியாகி, மொழி போராட வீரர், இந்திய விடுதலைக்கு போராடியவர், தான் வாழ்ந்த திருச்சிக்கு வளம் சேர்த்தவர். க்ளைவ்ஸ் ஹாஸ்டல் மாணவர்களை வாழவைத்த மா மனிதர், இன்னும் பல பெருமைக்குரிய மறைந்த திரு.அன்பில் தர்மலிங்கம் அவர்களின் திரு உருவ சிலை அன்னாரின் ஞாபகமாக திருச்சியில் நடுநாயகமாக ஸ்தாபிக்க பட்டு திருச்சிக்கே பெருமை அளிக்கும் விதமாக நாட்டுக்கு அர்பணிக்க படுகிறது. இதை அகில உலகமே மிகவும் எதிர்பார்த்து சந்தோசப்பட உள்ளது. அன்னாரின் சிலை நிறுவப்பட்டதால், இனி நாட்டின் பிணிகள் நீங்கி, இருள் நீங்கி, இருபத்திநாலு மனி நேரமும் மின்சாரம் தடை இல்லாத, காவேரியில் எப்போதும் தண்ணீர் வற்றாமல் அனைத்து தமிழகமும் குறிப்பாக திருச்சில் அனைத்து மக்களின் குறைகள் நீங்கி சந்தோசமாக இருக்க ஏற்பாடு செய்த நிரந்தர முதல்வர் அவர்களுக்கு எங்களின் பாராட்டுக்கள். அவர் இதுபோல தியாகிகளுக்கும், தேசிய தலைவர்களுக்கும், தனக்கும் சிலைகள் பல திறந்து தமிழகத்தை உலகமகா சரித்திரத்தில் இடம்பெற செய்ய வேண்டுகிறேன்....
MANNANDHAI - India,இந்தியா
2010-09-08 13:49:18 IST
வாழும் வள்ளுவரே வருக! பகுத்தறிவு பாசறையே வருக! தமிழ் தாயின் தலைமகனே வருக! வேஷ்டி கட்டிய தமிழ் தாயே வருக! செம்மொழி நாயகரே வருக!...
ரா. ஜனார்த்தனன் - சீனா,இந்தியா
2010-09-08 13:37:25 IST
தமிழ்நாட்டை தி மு க மற்றும் அ தி மு க கட்சிகளின் தலைமையும் முக்கிய நபர்களும் பங்கு போட்டு சுரண்டி கொண்டு இருக்கிறார்கள். மக்களின் தேவைகளை எந்த கட்சியும் நிறைவேற்றப்போவதில்லை. இதில் தி மு க வுடன் காங்கிரஸ் கூட்டணி அமைந்தால் என்ன? வேறு கட்சியுடன் கூட்டணி அமைந்தால் என்ன? தேர்தலின் பொழுது கிடைக்கும் சில ஆயிரங்களுடன் தொண்டன்/மக்கள் திருப்தி அடைவான். காவிரி நீர் கிடைக்காவிட்டால் என்ன? கருணாநிதி வீட்டுக்கு இருக்கவே இருக்கிறது பிஸ்லரி தண்ணீர்....
அபு த்தம்ய்ய்ய - சோமேவ்தேரே,இந்தியா
2010-09-08 13:37:16 IST
குத்து விளக்கு ஏற்றும் கோமானே..உன்னோடு pahutthuu அறிவு பொயிடுச்சா...
Jayachandran - Oman,இந்தியா
2010-09-08 13:36:01 IST
கூட்டணி பலமா இருந்து என்ன பிரோஜனம்??????? மக்கள் எப்படி இருக்காங்க....
அசோக் - மதுரை,இந்தியா
2010-09-08 13:32:34 IST
கூட்டணி நல்லா தான் இருக்கு பெருசு. உன் கூட்டாளிகள் தான் பலம் இல்லாமே இருக்கானுங்கே....
kumar - chennai,இந்தியா
2010-09-08 13:25:43 IST
சட்டசபையில் தி.மு.க வின் பலம் 96, காங்கிரஸ்- 34, ஆ.தி.மு.க -61, பா.ம.க- 18. ௦60 வருடமாக தி.மு.க வை நடத்தி வரும் கருணாநிதி தற்போது தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை நம்பி இருக்கும் அவல நிலைமை. காங்கிரஸ் தயவு இல்லையேல் மெஜாரிட்டி இழந்து ஆட்சி அடுத்த நிமிடமே தூக்கி எறியப்படும் என நன்கு உணர்ந்தவர் கருணாநிதி. தன் நிலை தெரியாமல் குடும்ப அரசியல் நடத்தி கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்துகிறார்....
2010-09-08 13:05:22 IST
எத்தனை ஏழைகளின் வயிற்றில் அடித்து இருப்பாய்..........உனக்கு முடிவு கட்டவே வரும் தேர்தல் வருகிறது. இதோடு உன் குடும்பமே ஓடிப்போக வேண்டும்............
2010-09-08 12:56:26 IST
உன்னுடைய ஆட்டம் செல்லாது....
2010-09-08 12:48:01 IST
உன்னுடைய இலட்சணத்தான் சவுக்கு இணையதளத்துல போட்டு கிழி கிழின்னு கிழிக்கிறாங்கல்ல அப்புறம் என்ன... வேலையப் பாரு .......கனவிலும் நினைக்காதே நீதான் வெற்றி பெறுவாய் என்று....
H நாராயணன் - நைரோபி,கென்யா
2010-09-08 12:46:03 IST
ஹை... அப்படின்னா.. இன்னும் காவிரி நீரை தரும்படி கர்நாடகாவிற்கு கடிதம் எழுதலையா.. இந்த வருடம் முடிய இன்னும் 3.5 மாதம் தானே இருக்கு... எப்போ கர்நாடகாவிற்க்கு கடிதம் எழுதி... பின் மத்திய அரசுக்கு எழுதி .... எப்படியும் மழை கொட்டினா, கர்நாடகா தண்ணீர் திறந்து விடத்தான் வேண்டும்.. அதற்கு ஒரு மணி நேரம் முன்பு கடிதத்தை fax செய்து... அவர்கள் தண்ணீர் திறந்தவுடன் வெற்றி என்று கொக்கரிக்கலாம். அதற்கும் விழா எடுக்க சில அல்லக்கைகள் இருக்கிறதே... சரி... குத்து விளக்கு ஏற்றி திறந்து வைப்பது பகுத்தறிவுக்கு ஏற்றதா?...
ஜம்போ ஜகந்நாதன் - பொற்றாமரைகுளம்,இந்தியா
2010-09-08 12:44:15 IST
கொள்ளை அடிக்கும் குடும்பமே, உன் ஒட்டு மொத்த உறுப்பினரும் ஊத்தி மூடிக்கொண்டு தோற்று ஓடுவீர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மக்கள் போடும் ஒட்டு, உனக்கும் உன் குடும்பம் மற்றும் உன் கட்சிக்கும் அடிக்கும் "சாவு" மணியாக இருக்கும் என்பதை மனதில் கொள்....
tamilan - chennai,இந்தியா
2010-09-08 12:34:26 IST
ஏன் அடுத்த சட்ட மன்ற தேர்தலில் மேலிட காங்கிரஸ் காரர்கள் கழட்டி விட்டு விடுவார்கள் என்ற பயமா? நீங்களும் உங்கள் அமைச்சர்களும் இதையே சொல்லி கொண்டு இருக்கிறிர்கள்...
தாமு - திருச்சி,இந்தியா
2010-09-08 12:25:26 IST
அரசியல்வாதிங்க வரதுனால மக்களுடைய நேரம் வீண் அவதிக்கு தள்ளபடுகிறாங்க. நம்ப நாடு தான் மிகவும் கேவலமா இருக்கு . வெளிநாட்டுல இந்த விளம்பரம் ஆடம்பரம் கிடையாது. நம் நாடு மக்களும் திருந்த போறது இல்ல...
தமிழ்மகன் - சென்னை,இந்தியா
2010-09-08 12:24:26 IST
கூட்டணி பலமாக இருக்கிறது, கூட்டணி உறுதி, அடுத்த தேர்தலிலும் கூட்டணி தொடரும்,,,, இப்படி சொல்பவர்கள் கூட்டணி தான் உடனே உடையும் தலைவரே..... example ராமதாசு & வைகோ... இது தான் தற்போதைய trend . so வேற டயலாக் use பண்ணுங்க. இந்த வசனம் ரொம்ப பழசு (கூட்டணி பலமாக இருக்கிறது)..... நீங்கள் மட்டுமல்ல, வேறு சில அரசியல் கட்சி தலைவர்கள் இந்த டயலாக் சொல்கிறார்கள் என்றால் கூட்டணி உடையப்போவது உறுதி என்று அர்த்தம் தலைவரே............
சுகுமார் - சென்னை,இந்தியா
2010-09-08 12:19:44 IST
நன்றிகள் பல உங்கள் தொண்டுக்கு....
வி.கே.லோகநாதன் - REDHILLSவிளாங்காடுபாக்கம்,இந்தியா
2010-09-08 12:18:33 IST
அரசியலில் இருகட்சி கூட்டணி பலமாக இருக்கிறது என்பது தவறு........மக்களின் நம்பிக்கை அந்த கட்சிகளின் மீது பலமாக உள்ளதா என்பதை அறிந்து கொள்வதுதான் உண்மை..... இதுதான் உலக நியதி.....
2010-09-08 11:48:06 IST
காங்கிரசோடு நீங்க கட்டி புரள்வது தேர்தல் தில்லுமுள்ளு செய்வதற்கே. அவர்கள் உதவி இருந்தால் தானே தோத்தவனையும் உங்களால் ஜெயிக்க வைக்க முடியும் ! இதுதான் இந்தியா, வேறு என்ன சொல்வதற்கு ? இங்கு ஞாயம், தர்மம்,நீதி நீண்ட உறக்கத்தில்; அசுரர்கள் ஆள்கிறார்கள் உங்களை போல. உங்களை போல இருக்கும் ஆட்சியாளர்களால் இந்தியா உருப்பட போவதில்லை....
கணேஷ் - அகமதாபாத்,இந்தியா
2010-09-08 11:44:21 IST
இப்படி ஜெ. எங்க மாநாடு நடத்தினாலும், அவ பின்னாடியே போய் மாநாடு நடத்தறது கேவலமா இல்ல? பொம்பள பின்னாடியே போற மாதிரி இல்ல?...
ராம்குமார் - அருப்புகோட்டைதோஹாகத்தார்,இந்தியா
2010-09-08 11:42:25 IST
ஐயா கூட்டணி யார்கூட இருந்தாலும் மக்களை நல்ல முறையில் காக்க பாடுபடுங்கள். தீவிரவாத்தை ஒழித்து, மக்களுக்கு நல்ல வேலைவாய்ப்பை கொடுத்து இளைஞர்களை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல திட்டம் தீட்டுங்கள். இந்திய இறையாண்மை காத்து, கலாச்சரம், பண்பாடு, தமிழர் ஒற்றுமை காக்க பாடுபடுங்கள். குடும்ப அரசியல் விடுத்து மக்களுக்கு சேவை செய்யும் நோக்குடன் வரும் இளைஞர்களுக்கு அரசியலில் முன்னுரிமை கொடுங்கள்....
adalarasan - chennai,இந்தியா
2010-09-08 11:40:58 IST
காங்கிரசுடன் கூட்டணி வேண்டுமென்றால் அமையலாம். ஆனால்,இந்ததடவை ,தப்பி தவறி மெஜாரிட்டி வந்தால் ,அவர்களும் மந்திரி பதவி கேட்பார்கள். இது நிச்சயம்! உங்கள் மகன்களுக்கும் கொஞ்சம் செக் இருப்பது நல்லதுதானே!...

கருத்துகள் இல்லை: