புதன், 8 செப்டம்பர், 2010

இளங்கோவன் பாய்ச்சல ்காங்., முக்கிய நிர்வாகி மீது

கட்சியில் முக்கிய பொறுப்பை வைத்துக்கொண்டு துரோகியாக, கருங்காலியாக, எட்டப்பனாக இருந்தால் காங்கிரஸ் எப்படி தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியும்,'' என முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் பேசினார்.

சென்னை செங்குன்றத்தில், மாதவரம் தொகுதி இளைஞர் காங்கிரஸ் சார்பில், மூப்பனார் நினைவுநாள் நலத்திட்ட உதவி வழங்கும் விழா, மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம், நேற்று முன்தினம் இரவு நடந்தது.

இதில் பங்கேற்று, முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் பேசியதாவது: காங்கிரஸ்காரன் நான்கு ஆண்டுகள் பேசாமல் இருந்தான். யாருக்கோ குத்தகைவிட்டது போல் அவனது நிலை இருந்தது. இப்போதுதான் பேச ஆரம்பித்துள்ளான். சில காங்கிரஸ்காரர்கள் நான் கலந்துகொள்ளும் கூட்டத்திற்கு வருவதே இல்லை. அவர்கள் தூக்கத்தில் இருந்து விழித்து சோம்பலில் இருக்கின்றனர். சிலர் குங்குமம் சுமக்கும் கழுதைகளாகவும், எலும்புத் துண்டுக்கு பணிபவர்களாகவும் இருக்கிறோம் என்று நொந்து கொள்கின்றனர்.மூப்பனார் நினைவு நாளில் நலத்திட்ட உதவிகள் என்ற பெயரில் இலவசங்கள் வழங்கி பஜனை செய்வது, அவருக்கு அஞ்சலி செலுத்தியது ஆகாது. அவரை இன்றும் நாம் நினைவில் கொள்ள காரணம், காங்கிரசுக்கு அவர் ஆற்றிய பணி தான். தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைய வேண்டும் என்று அவர் விரும்பி அதற்காக கடுமையாக உழைத்தார்.

காங்கிரசுக்கு தமிழகத்தில் தனி அதிகாரம் கிடைக்க வேண்டும் என்று சோனியா, ராகுல் வலியுறுத்தியதை போல் மத்திய அரசின் சாதனைகள், கொள்கைகளை விளக்கி இளைஞர் காங்கிரஸ்காரர்கள் பல பகுதிகளில் கூட்டங்கள் நடத்துகின்றனர்.ஆனால், காங்கிரஸ் கட்சியில் பொறுப்பில் உள்ள பலர் அப்படியே அடங்கி கிடக்கின்றனர். கட்சியின் முக்கிய பொறுப்பில் உள்ள ஒருவர் சரியில்லாத காரணத்தால் எழுச்சிக்கு தடை ஏற்பட்டுள்ளது. அவரின் யோக்கியதை என்னவென்பது 30 ஆண்டுகளாக எனக்குத் தெரியும். தன் கல்லூரிக்கு வளைத்துப் போட்ட இடத்திற்கு அரசு மூலம் பிரச்னை வராமல் இருக்க  வேண்டி, சுய நலத்திற்காக ஆளும்கட்சியின் சேவகனாக அவர் மாறிவிட்டார். அதற்காக கட்சியில் மாவட்ட, வட்டார அளவில் நடத்த வேண்டிய நிர்வாகிகள் கூட்டத்தை அவர் நடத்தவே இல்லை.

சோனியா, ராகுல் உத்தரவை செயல்படுத்தாமல் நிலைமாறி போய் விட்டார். கட்சியில் முக்கிய பொறுப்பை வைத்துக்கொண்டு துரோகியாக, கருங்காலியாக, எட்டப்பனாக இருந்தால் காங்கிரஸ் எப்படி தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியும். தமிழகத்தில் காங்கிரஸ் மூலம் நல்ல மாற்றம் வர வேண்டும். அதற்கு சில மாற்றங்கள் அவசியம் என்பதை வலியுறுத்த வேண்டியது என் பொறுப்பு. நானும், அமைச்சர்கள் சிதம்பரம், வாசன் ஆகியோர் இதை எடுத்துச் சொல்கிறோம். அவர்கள் கொஞ்சம் சுதி குறைத்து சொல்வார்கள். நான் தயக்கமின்றி சொல்கிறேன்.இங்கு யாருக்கும் நான் பயப்பட மாட்டேன். அமைச்சராக இருந்த போதே நான் பதவிக்காக பயந்தது இல்லை. 

இங்கு சிலர் தமிழுக்காக உழைப்பதாக கூறி வருகின்றனர். அதற்காக செம்மொழி மாநாடு நடத்தப்பட்டது. தமிழுக்கு எவ்வளவு உயர்வு தரவேண்டுமோ, அதை செம்மொழி அங்கீகாரம் மூலம் சோனியா கொடுத்துவிட்டார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். காங்கிரஸ் தயவில் ஆட்சியில் இருந்து கொண்டு, காங்கிரஸ்காரனுக்கு எதுவும் செய்யவில்லை என்றால் எப்படி?. உங்கள் போக்கை நீங்களே திருத்திக்கொள்ள வேண்டும். நீங்கள் நல்லவராக மாற வேண்டும் என்று தான் உங்கள் குறைகளை சுட்டிக்காட்டுகிறோம். நாங்கள் திருந்தமாட்டோம் என்று நீங்கள் அடம்பிடித்தால் மாற்றத்தை எதிர்பார்ப்பது இயல்புதானே.

தமிழகத்தின் தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் தமிழக மக்களை தன் குடும்பமாக கருத வேண்டும். ஆனால், இங்குள்ளவர்கள் தன் குடும்பத்தை மட்டுமே தமிழக மக்களாக நினைத்து வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்கின்றனர்.இவ்வாறு இளங்கோவன் பேசினார்.
மனித நேயன் - அபுதாபி,ஐக்கிய அரபு நாடுகள்
2010-09-08 01:10:38 IST
இளங்கோவன் பேச்சு குறித்து தங்கபாலும் கருணாநிதியும் என்ன சொல்ல போகிறார்கள்?...
Gokul - Arcot,இந்தியா
2010-09-08 01:02:58 IST
கோமளவல்லி (எ) அம்முவின் அந்தோனியோ மொய்னோ காந்தி விமர்சனமும் பதிபக்தி விமர்சனமும் தமிழகத்தில் மாற்றத்தை கொண்டு வருமா? முதலில் காங்கிரஸ் முல்லை பெரியாறு, காவேரி, கச்சத் தீவு, இலங்கை தமிழரின் மறு குடியமர்வு, மீனவர் தாக்குதல், பாலாறு ஆணை பிரச்சினை இவற்றில் தமிழகத்தை வஞ்சித்து எதோ பாகிஸ்தானை நடத்துவதை போல நடத்துகிறது!மானமுள்ள காங்கிரஸ் மடையர்களே! கொதித்திருக்க வேணாமா? சூடு சொரனையற்ற ஜடங்களாகி போனதேன்? மீண்டும் திமுக கூட்டநியிலிருந்தால் நமக்கு கோபி நகராட்சியில் கவுன்சிலர் சீட் கூட ஜெயிக்க விட மாட்டார்கள் என தெரிந்து கொண்டு இந்த குள்ள நரி இங்கே ஊளையிடுகிறது! பாவம்! முத்துகுமாரின் ஆவி உன்னை சும்மா விடாது! துரத்தி துரத்தி அடிக்கும்! நீ எந்த கூட்டணியில் நிக்க முடியாது மாப்ளே! உன்னைய போல குடிகாரன் கூட நின்னாலும் கவுன்சிலரா கூட ஜெயிக்க முடியாதுடா மாப்ளே!...
ஆனந்த் - சென்னை,இந்தியா
2010-09-08 01:00:52 IST
சிங்கம் மறுபடியும் களத்துல இறங்கிடுச்சு ... இனிமே என்ன என்ன ஆக போகுதோ தெரியல ... தலைவா நீங்க கலக்குங்க ... நீங்க ஒருத்தராவது இவ்வளோ தைரியமா இருக்கிங்கனு பெருமையா இருக்கு ... மறுபடியும் காமராஜர் ஆட்சி வரணும்........
மல்லிக் - துபாய்,இந்தியா
2010-09-08 00:47:10 IST
இளங்கோவா நீ திருந்தமாட்டே, நீ ஜெயித்து மந்திரியாக இருந்த போது பெருசோட இது இனித்ததா, இப்போ தோற்றவுடன் கசக்குதா,நீ மேடையிலேயே செருப்படி வாங்கபோரே, இவ்வளவு நாளாக உன் தலைவனை பற்றி தெரியாதா, புதுசா கண்டு பிடித்தவன் மாதிரி பேசுறே,அப்புறம் ஏன்டா உன் கட்சி அவரை தலைவனாக ஏற்று கொண்டது,இதனால் தாண்டா உன் கட்சி தமிழ் நாட்டிலேயே 5 ஆவது நிலைக்கு தள்ள பட்டுள்ளது.இனி அம்போதான்....
பாஸ் - அபுதாபி,ஐக்கிய அரபு நாடுகள்
2010-09-08 00:40:30 IST
யோவ் இ(கிழ)ளங்கோவா...உன் ஆத்திரம் , உன் ஆசை எல்லாம் எங்களுக்கு புரியாம இல்லை.ஆனா இலங்கோவ எங்களோட ஒரு கேள்விக்கு பதில் சொல்லு...இத்தனை நாலு நீ என்ன பண்ணிகிட்டு இருந்த..?ஒரு பழமொழி உண்டு...முளையிலே கில்லி எறிய வேண்டுமென்று...அதை செய்யாம விட்டுட்டு இபோ நாயைவிட கேவலமா கொரைசாலும் ஒன்றுக்கும் உதவாது. மத்தியில மாநிலத்திலும் திமுக கூட்டணி முறிந்து விட்டதுன்னு தைரியமிருந்தா சொல்லி பாக்கலாம்ல. பருப்பு மாதிரி ஆயிரம் பேசலாம். ஆனா பருப்பு காரியம் பண்றது கஷ்டம். காங்கிரச்கு அழிவு காலம் தொடங்கியாச்சு ---உன் மூலமாக....

கருத்துகள் இல்லை: